வாழ்க்கை முறையை கண்காணிக்க உதவும் செயலி: 'இன்ஸ்டண்ட் '

0

"உள்ளடக்கம்" ராஜாவாக இருக்கலாம். ஆனால் அது பயனுள்ளதாக இருக்க துல்லியமான தகவல்களை சார்ந்திருக்கிறது. கடந்த காலத்தில் தகவல்களை சேகரிப்பதே சிக்கலாக இருந்தது என்றால் தகவல்கள் மிகுதியாக இருக்கும் டிஜிட்டல் யுகத்தில் குறிப்பிட்ட மற்றும் செயல்படகூடிய தகவல்களை திரட்டுவது சவாலாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் அணி கணிணி சாதனங்கள் நம்மை சுற்றி இருக்கும் நிலையில் நம்முடைய தினசரி பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது எளிதாகி இருக்கிறது. இந்த பின்னணியில் எம்பெரிஃபை (Emberify) தனது "இன்ஸ்டண்ட்"(Instant ) செயலி மூலம், வாழ்க்கை பதிவானை லைஃப்லாகிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.

இது என்ன?

சாதனங்களை பயன்படுத்தும் நேரம், ஃபிட்னஸ், இடங்கள் மற்றும் பயணம் ஆகிய தகவல்களை திரட்டி அவற்றை ஒரே டேஷ்போர்டில் இடம் பெற வைக்கும் தன்னுணர்வு மற்றும் வாழ்க்கை பதிவு செயலியாக இன்ஸ்டண்ட் இருக்கிறது. இந்த செயலி பயனாளிகள் எத்தனை முறை தங்கள் ஸ்மார்ட்போனை அன் லாக் செய்கின்றனர் மற்றும் பிற செயலிகளை எந்த அளவு பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பான தகவல்களை வழங்குகிறது. பயனாளிகள் இதை கூகுள் ஃபிட்டுடன் இணைத்து தங்கள் ஃபிட்னஸ் மற்றும் பயண நேரத்தை அளவிடலாம்.

பயன்பாட்டு முறை மற்றும் போக்குகளை காட்சிரீதியாக புரிந்து கொள்ள இந்த செயலி வரைபடம் மற்றும் விட்ஜெட்களை கொண்டுள்ளது. பயனாளிகள் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு பயன்பாட்டு அளவுக்கு ஏற்ற நோட்டிபிகேஷன்களை பெறலாம். வீடு மற்றும் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை அறிய பூகோள வேலியும் அமைத்துக்கொள்ளலாம்.

ஷஸ்வத் பிரதான் தனது குழுவுடன் (நடுவில்)
ஷஸ்வத் பிரதான் தனது குழுவுடன் (நடுவில்)

இது வரையான பயணம்

பூனாவில் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் அறிவியல் படித்த ஷஸ்வத் பிரதான் (Shashwat Pradhan) தகவல்கள்(தரவுகள்) மற்றும் சூழலுக்கு பொருத்தமான தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் தனது தொழில்முன்முயற்சியான எம்ஃபெரிபை மூலம் இன்ஸ்டண்ட் செயலியை உருவாக்கத்துவங்கினார். இதற்கு முன்னர் அவர் டீகோடிங் (Decoding ) மற்றும் ரீஃபோகஸ் லாப்ஸ் (ReFocus Labs)ஆகிய ஸ்டார்ட் அப்களை உருவாக்கியுள்ளார். எம்ஃபெரிபை குழுவில் தற்போது ஐந்து பேர் உள்ளனர். ஐஒஎஸ், ஆண்டிராய்ட் மற்றும் வலைக்கான மூன்று டெவலெப்பர்களும் இதில் அடங்கும். ஷஸ்வத் பயனாளிகள் இடைமுகம், வடிவமைப்பு, விற்பனை ஆகியவற்றை மற்றொரு மார்கெட்டிங் வல்லுனரோடு கவனித்துக்கொள்கிறார்.

துவங்கி ஓராண்டான இந்நிறுவனம் பல மாதங்களுக்கு முன் இன்ஸ்டண்ட் செயலியை கூகுள் பிளேஸ்டோரில் அறிமுகம் செய்தது. அன்மையில் ஐஒஎஸ்-சில் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் அனுமதிக்கும் அளவில் குறைவான பேட்டரி பயன்பாட்டில் செயல்படகூடிய வகையில் தனது செயலியை ஐஒஎஸ்-வடிவில் மாற்றி அமைக்க 5 மாத காலம் செலவிட்டது. ஆண்ட்ராய்டை விட ஐஒஎஸ் அமைப்பு கட்டுப்பாடுகளை கொண்டது என்பதால் சில சிக்கலகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ”எங்கள் செயலி ஒரு முறை ஆப்பிளால் நிராகரிக்கப்பட்டது. இதன் விளைவாக ஏபிஐ- ல் நிறைய மாற்றங்கள் செய்து, அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியங்களை கண்டறிந்து இதை சரியான வகையில் செயல்பட வைக்க வேண்டியிருந்தது” என்கிறார் ஷஸ்வத்.

ஆண்ட்ராய்டை பொருத்தவரை இன்ஸ்டண்ட் செயலிக்குள் விற்பனையை கொண்ட பிரிமியம் முறையை பின்பற்றுகிறது. ஐஒஎஸ்-ல் கட்டணம் உண்டு. நிறுவனம் ஏற்கனவே தன்ணுர்வு சமூகத்தின்(quantified self-community) ஆதரவை பெற்றுள்ளது. கூகுள் ஃபிட் சாலஞ்ச் போட்டியில் பரிசும் வென்றுள்ளது. இதுவரை வாய்மொழி பரிந்துரைகள் மூலம் பிரபலமாகி வரும் நிறுவனம் வளர்ச்சி வாய்ப்புள்ள அமெரிக்கா, கனடா ஆகிய சந்தைகளை குறி வைத்துள்ளது. "இதுவரை ஆண்ட்ராய்டில் 75,000 முறை டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 14,000 பேர் மாதாந்திர பயனாளிகளாக உள்ளனர். 1380 கட்டண பயனாளிகள் உள்ளன்ர்” என்கிறார் ஷஸ்வத்.

செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்காக தனது குழுவை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. நிதி நிலை நோக்கில் சிறப்பாக செயல்பட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு இது மொபைல் செயலியாக மட்டுமே இருக்கிறது. எனினும் இன்னொரு வருவாய் ஆதாரமாக சந்தா அடிப்படையிலான இணைய டேஷ்போர்டை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

பிடித்த அம்சங்கள்

சமநிலையான வாழ்வியலுக்கான சாதனமாக இன்ஸ்டண்ட் முன்னிறுத்தப்படுகிறது. மெட்டிரியல் வடிவமைப்பு மற்றும் கூகுள் ஃபிட் ஒருங்கிணைப்பு காரணமாக இது பயன்படுத்த எளிமையானது. பல்வேறு செயலிகளில் ஸ்மார்ட்போனில் நான் செலவிட்ட நேரத்தை என்னால் கணக்கிட முடிந்தது. எனது ஃபிட்னஸ் தரவுகளை அறிய முடிந்ததோடு இருபிட வரலாற்றையும் காண முடிந்தது.

என்னைப்பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமாக கருதுவது, பயன்பாட்டு நேரம் மற்றும் நான் போனை அன்லாக் செய்த சரியான நேரம் மற்றும் இடைப்பட்ட காலத்தில் போனில் செலவிட்ட நேரத்தை உணர்த்திய வரைபட அம்சம் தான். செயலி பயன்பாடு மற்றும் சாதன பயன்பாட்டை அறிய மற்ற வரைபடங்களும் இருக்கின்றன. சேகரிப்பக்கப்படும் தனிப்பட்ட தகவல்கள் சாதனத்தில் தான் இருக்கின்றன என்றும் இவற்றை பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம் என இதன் அந்தரங்க கொள்கை தெரிவிக்கிறது.

மேம்பாடு

இது முழுமையான செயலி மற்றும் வாழ்க்கை பதிவு செயலியாக தனது எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது என்றாலும், கேம் சார்ந்த அம்சங்கள் தேவைப்படலாம். ஒரு சில பயனாளிகளுக்கு தங்கள் வாழ்க்கை பதிவுகளை டிராக் செய்ய ஊக்கம் தேவைப்படாது என்றாலும் மற்ற பயனாளிகள் இதை எதிர்பார்க்கலாம். எனவே பயனாளிகள் தங்கள் இலக்கை அடைய உதவி செயலியுடனான இணக்கத்தை அதிகமாக்க பரிசுகளை (பி2பி ஒப்பந்தங்கள் மூலம்) அளிக்கலாம்.

இதை பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்பதற்கான வழியாகவும் இந்த பயன்பாட்டை கருதலாம். பெற்றோர் பிள்ளைகளின் அந்தரங்கத்தில் ஊடுருவாமல் அவர்களின் பயன்பாட்டு போக்கை கவனிக்கலாம். இதே போல பிள்ளைகளும் வயதான பெற்றோர் செயல்பாடுகள், இருப்பிடம் மற்றும் ஃபிட்னஸ் தகவல்களையும் தெரிந்து கொள்ள பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு கட்டுப்படுத்தப்பட்ட வித்ததில் டேஷ்போர்ட் அனுமதி அளிப்பது மூலம் இதை செய்யலாம். செயலியின் தனி வசதியாகவும் இது இருக்கலாம்.

யுவர்ஸ்டோரி கருத்து

தங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை கவனித்து, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அறிய விரும்புகிறவர்களுக்கு இன்ஸ்டண்ட் பொருத்தமான செயலி. எதிர்காலத்தில் பல வகையான வருவாய் ஆதார வாய்ப்பு, அனுபவம் வாய்ந்த சிறிய குழு மற்றும் ஏற்கனவே தனக்கான சிறிய அளவிலான பயனாளிகளை பெற்றுள்ள நிலையில் இந்த நிறுவனம் மேலும் பயனாளிகள் மற்றும் நாடுகளை சென்றடையும் வகையில் எப்படி விரிவாக்கம் செய்கிறது என பார்க்க வேண்டும்.

இணையதள முகவரி: Instant

செயலி பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.