'சர்வதேச யோகா தினம்'- ஜூன் 21 ஆம் தேதி கொண்டாட வாருங்கள்!

0

2015இல் உலகளவில், முதல் சர்வதேச யோகா தினத்தை வெற்றிகரமாக கொண்டாடியதைப் போல, இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட இன்னும் சில வாரங்களே உள்ளன. கடந்த வருடம் இந்த முயற்சி எப்படி தொடங்கப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

செப்டம்பர் 27, 2014-இல் நடந்த 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது, மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வருடந்தோறும் ஒரு நாள், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை 2014 டிசம்பர் 11 அன்று, ஐநா சபையின் 193 உறுப்பினர்களும் 177 நாட்டு ஆதரவாளர்களும் ஒருமனதாய் ஒப்புக்கொண்டு, ஜூன் 21 ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினமாய்' கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றினர். உடல் நலத்திற்கும் நல்வாழ்விற்கும் யோகா ஒரு சிறந்த உடற்பயிற்சி வழிமுறை என்பதை ஐநா சபை இந்த முடிவின்படி புரிந்துக்கொண்டது. யோகா ஆனது நோய் தடுப்புக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், சீர்குலைந்த வாழ்வு முறையைச் சரிசெய்வதற்கும்; வாழ்கையின் அனைத்து சூழலிலும் நல்லிணக்கம் கொண்டுவரும் ஒரு சிறந்த முறை.

ஆயுஷ் அமைச்சகம் 2015 ஜூன் 21 அன்று, முதல் சர்வதேச யோகா தினத்தை புதுடெல்லியில் உள்ள ராஜ்பத்தில் சிறந்த முறையில் நடத்தியது. ஒரே இடத்தில 35,985 பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய யோகா பயிற்சியும் மற்றும் அதிகளவிலான குடிமக்களை (84) ஒரே யோகா நிகழ்ச்சியில் கொண்டதாகவும் இரண்டு கின்னஸ் சாதனைகளைச் செய்துள்ளது. இந்தியா அல்லாது சர்வதேச அளவிலும் முழு ஈடுபாட்டோடு மில்லியன் பேர்கள் பங்குகொண்டு, யோகாவின் நோக்கத்தை பரப்பினர்.

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27, 2014, 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது
 இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27, 2014, 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது

நம் நாட்டின் பழங்கால வழிமுறைகளில் ஒன்றான யோகா, ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிசெய்வதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யோகா ஆனது,  மனக்கோளாறுகளைத் தடுத்து சரிசெய்து பயனளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன.

இத்தனை புகழோடு பரவிவரும் யோகா, நம் அனைவரின் உடல்நிலையையும் நல்ல வழிகளில் இயங்க உதவுக்கிறது. வருகின்ற ஜூன் 21 நாளான்று நடக்கவிருக்கும் இரண்டாம் சர்வதேச யோகா தினத்தையும் நன்கு கொண்டாடுவதற்குக் வழிகாண்போம் வாருங்கள்!