தொலைதூரக் கல்விக்கான மேடையாக திகழும் 'ஸ்கூல்குரு'

0

உலகளாவிய அளவில் கடந்த ஐந்தாண்டுகளில் இ-லெர்னிங் துறையில் மொத்த மூலதனம் ஆறு பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்படுவதாக டோசிபோ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் இந்திய ஆன்லைன் கல்விச் சந்தையின் முழுமையான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2014ம் ஆண்டு முதல் 17.50 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று டெக்நாவியோவின் அறிக்கை தெரிவிக்கிறது (உலகிலேயே இது தான் உயர்வானதாக இருக்கும்).

இன்றைய தினம், இந்தியக் கல்விச் சந்தையில் சுமார் 50 சதவிகிதம் உயர்கல்வியாக இருக்கிறது. இதைத் தான் ஸ்கூல்குருவின் இணை நிறுவனர்கள் கடந்த 2012ம் ஆண்டில் தனது முயற்சிகளைத் தொடங்கிய போது எதிர்பார்த்தனர். அரசு தனது முழு கவனத்தையும் பள்ளிக் கல்வியில் செலுத்திக் கொண்டிருந்த போது, உயர் கல்விக்கான உள்கட்டமைப்புகளை தேவைக்கேற்ப செயல்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்,

எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தொலைதூரக் கல்வியை ஏற்கும் வகையில், "ஸ்கூல்குரு" (School Guru) ஒரு சமூக தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களை சென்றடையும் வகையில் ஒரு மேம்பாட்டைச் சிந்தித்தனர்,

இணை நிறுவனர் சந்தனு ரூஜ் பொருத்தவரையில் இது புதிதாக இருக்கவில்லை, கடந்த 18 ஆண்டுகளாக தொழில்முனைவராக திகழும் அவர், பாராடைன் என்னும் நிறுவனத்தை தொடர்ந்து பிராட்லைன் ஆகியவற்றின் மூலம் தனது தொழில்முனைவு பயணத்தைத் தொடங்கினார். இது பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிறுவன ஆதார திட்டமிடுதலுக்கான தீர்வை அளித்தது.

சந்தனு தனது இரண்டு நிறுவனங்களையும் க்ளுடைன் டெக்னோசர்வ் இடம் விற்பனை செய்தார். அங்குதான் அவர் இணை நிறுவனர் ரவி ரங்கனை சந்தித்தார், 20 ஆண்டுகளாக தொழில்முனைவராக இருந்த அவரும் தனது நிறுவனமான கோமட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை க்ளுடைனிடம் விற்றார்.

கல்விக்கான தொழில்நுட்பத்தில் வலிமைமிக்க பின்னணி மற்றும் தொழில்முனைவு அனுபவத்துடன் ஸ்கூல்குரு சிறிது நஷ்டத்தையும் எதிர்கொண்டது. அப்போது சந்தனுவின் நெருங்கிய சகாவும் பண்பட்ட அனுபவமிக்கவராகவும் திகழ்ந்த அனில் பட் இந்தக் குழுவில் இணைய அழைக்கப்பட்டார்.

முதல் ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் சிக்கலில் தவித்த போதிலும், ஸ்கூல்குரு கடந்த 2014ம் ஆண்டு ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து 2 மில்லியன் டாலர் திரட்டியது.

அது எவ்வாறு செயல்பட்டது?

பல்கலைக்கழகங்கள் அல்லது பயிற்சிகளுக்குத் தேவையான தகவல் மற்றும் தொழில்நுட்பதொடர்பு ஆதரவை எந்த மூலதன செலவும் இன்றி நிர்வகிக்கப்பட்ட தொழில்நுட்ப மேடையை ஸ்கூல்குரு அளிக்கிறது. இந்த சேவை மாணவர் சேர்க்கை, கட்டணம் மற்றும் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது மட்டுமின்றி, கற்றல் நிர்வாக முறையை அளிக்கிறது.

தொலைதூரக் கல்வித் துறையில் பிஏ, பிசிஏ, ஏம்சிஏ போன்ற வழக்கமான பட்டங்களை அளிக்கும் நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் ஒரே நிறுவனமாக தாங்கள் இருப்பதாக அந்த நிறுவனம் கூறிக் கொள்கிறது. மேலும் இந்த நிறுவனம் வழக்கமான படிப்புகளுடன் திறன் மற்றும் தொழில் பயிற்சிகளையும் அறிமுகம் செய்கிறது.

கட்டமைப்புத் துறையில்

அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தவிர மாணவர்கள் ஓர் செயலி (ஆப்) கொண்ட மெமரி கார்டையும் பெறுகின்றனர். இந்தச் செயலியில் உள்ளடக்கம், பல்கலைக்கழகம் மற்றும் படிப்பு குறித்த வடிவமைக்கப்பட்ட தகவல்கள் கொண்டதாகும்.

இந்தச் செயலியில் உள்ள தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதன மூலம் மாணவரைத் தொடர்புடைய விரிவுரையாளருடன் இணைக்கவும் செய்கிறது. மேலும் பயன்பாட்டாளரிடம் இணையதள இணைப்பு இருக்கிறதா இல்லையா என்பதையும் இந்தச் செயலி கண்டறிகிறது. இணைப்பு இருக்காவிட்டால், தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டு அதற்கான பதில்கள் எஸ்எம்எஸ் மூலம் செயலிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் இணையதள இணைப்பு இல்லாமல் இருந்தாலும் மாணவர்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை.

ஸ்கூல்குரு எஜுசர்விவில் உள்ள குழு

தற்போது இந்த நிறுவனம் எட்டு மாநிலங்களில் (கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், அசாம் மற்றும் உத்தராகண்ட்) உள்ள 11 பல்கலைக்கழகங்களுடன் 9 இந்திய மொழிகளில் 170க்கும் மேற்பட்ட திட்டங்களை அளித்து வருகிறது. அவர்கள் மேலும் நான்கு பல்கலைக்கழகங்களுடன் பேசி வருகிறது. இந்த கல்வி ஆண்டிலேயே இணையும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஐந்து பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று 145 பேர் கொண்டதாக வளர்ச்சி அடைந்திருப்பதுடன் 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெரிய பல்கலைக்கழகத்துடன் இணையவேண்டும் என்ற அதன் சந்தை யுக்தி தொடர்ந்து நீடிக்கிறது.

நிதி மற்றும் வளர்ச்சி

ஆன்லைன் படிப்பில் தன்னை மாணவர்கள் இணைத்துக் கொண்டவுடன், அவர்கள் செலுத்தும் கட்டணம் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல்குருவால் 30 முதல் 50 சதவிகிதம் வரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் 1500 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014ல் 6000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதால் இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.

2015ம் ஆண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் தங்கள் பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கி நான்கு மாதங்களில், இந்த நிறுவனம் தனது இலக்கில் பாதியை எட்டியுள்ளது. யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்துடன் சமீபத்தில் அவர்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாகவே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இந்த சந்தையில் உள்ள ஏற்றம் குறித்து விளக்கிய சந்தனு கூறுகையில், இந்தத் துறையின் வளர்ச்சி விரைவில் அதிகரித்து வருகிறது. இதில் இணையும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத்தான் செல்கின்றனர். ஸ்கூல்குருவுக்கு வருவதில்லை. எங்களுடன் இணைந்துள்ள பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றன. சில பல்கலைக்கழகங்கள் மட்டும் ஆன்லைன் கற்றல் கட்டாயம் என்று கூறலாம். மேலும் பல்கலைக்கழகங்கள் அதிக படிப்புக்களை ஆன்லைனில் அதிகப்படுத்தி வருகிறது. ஒரு பல்கலைக்கழகம் முதல் ஆண்டில் இரண்டு படிப்புக்களை மட்டும் ஆன்லைனில் அளித்திருக்கலாம். ஆனால் தற்போது 20 படிப்புக்களை ஆன்லைனில் அளிக்கலாம். இது ஸ்கூல்குருவில் மாணவர்கள் சேர முக்கிய காரணமாக அமையும்.

இந்த ஆண்டு 20 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ள ஸ்கூல்குரு கடந்த 2014ம் ஆண்டில் 3.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

எதிர்காலம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் 25 பல்கலைக்கழகங்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகிறது. இதன் மூலம் 10 லட்சம் மாணவர்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறது. வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களை அதுவும் குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை சென்றடையவும் திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுதும் ஆன்லைன் தேர்வு முறையை உருவாக்க இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2015 டிசம்பருக்கு முன்பாகவே இதனை அறிமுகப்படுத்தும் நடிவடிக்கைளில் இது ஈடுபட்டுள்ளது.

ஆன்லைன் தேரவுக்கான விதிமுறைகள் கொண்ட அரசின் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் முன்பாகவே ஆன்லைன் தேர்வுக்காக தயாராகிவிடுவோம் என்கிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் அரசின் பொதுச் சேவை மையங்களுடனும் இணைந்து கிராமப் பஞ்சாயத்து அளவில் இந்த சேவையை அதிகரிக்க உள்ளது.

தற்போது ஸ்கூல்குரு 3 மில்லியன் டாலர் நிதியைப் பெறும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளது.

கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 40 மில்லியன் டாலர் திரட்டியுள்ள நிலையில் இந்த துறை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் சிக்ரிட் ஒலிஃபேன்ஸ் கேபிடல் நிறுவனத்திடம் இருந்து வெளியிடமுடியாத நிதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து எஜுகார்ட் ஒரு மில்லியன் டாலரை யுனைடெட் பின்செக், யுவராஜ் சிங்கின் 'யூவிகேன் வென்ச்சர்ஸ்' மற்றும் '500ஸ்டார்டப்ஸ்' நிறுவனங்களிடம் இருந்து திரட்டியுள்ளது.

இணையதள முகவரி: School Guru