நவீன யோகியின் வாக்குமூலம்!

0

தீக்ஷா லால்வானி யோகாவைக் கற்றுத்தரும் இருபத்து ஏழு வயது ஆசிரியை. சமூகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவதா? அல்லது தனக்கான தனி வழியைத் தேடுவதா? என புரியாமல் இருபத்து இரண்டு வயதில் தள்ளாடிய பெண். தனக்கு துளியும் மனநிறைவுதராத தன்னுடைய வாழ்வை எண்ணி, கோபப்பட்டு, வெறுப்படைந்து கூட்டை விட்டு வெளியே வந்துள்ளார். யாரும் போக பயப்படும் கற்களும், முட்களும் நிறைந்த பாதையை தனக்கானதாக மாற்றிக்கொண்டுள்ளார்.

கவர்ச்சிகரமான பாலிவுட்டில் புகழ், பணம் என நட்சத்திரமாக மின்ன தனக்கு உதவி செய்வதாக உதவி இயக்குனராக பணியாற்றும் ஒருவர் வாக்களித்தார். இது இருபதுகளின் சொத்து சேர்க்க வேண்டும் என்ற பொதுவான கருத்தாக அவருக்கு தோன்றியது.

தீக்ஷாவின் இருபத்தி இரண்டு வயது, தவறான முடிவுகளால் நிரம்பி இருந்தது. பதினெட்டு மணி நேர வேலை, வேலை ஏற்படுத்தும் அழுத்தத்தைப் போக்க எண்ணிலடங்காத அளவுக்கு சிகரெட் புகைப்பது, எண்ணெய் பண்டங்கள் உண்பது, ஊட்டச்சத்து பற்றிய யோசனை இன்றி ‘செட்’-டில் கிடைப்பதை உண்பது, மோசமான உறவில் நீடித்தது மற்றும் கடுமையான உழைப்பால் சக்தியை இழந்து கடையில் இருந்து உணவை வாங்கி உண்பது என தொடர்ந்தது. தீக்ஷாவின் இந்த நிலை அவளது பெற்றோருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

தற்போது தீக்ஷாவின் அனுதின செயல்பாடுகள் முற்றிலுமாக மாறிவிட்டன. அவள் காலை 6.30 மணியிலிருந்து 8 மணிக்குள் வகுப்புக்கு ஏற்ப எழுகின்றாள். பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை ஆர்வமாக, ஆசையாக செய்கின்றாள். சத்தான ஆகாரத்தை உட்கொள்கின்றாள். சில ஆசனங்களையோ அல்லது மந்திரங்களை சொல்வதையோ வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கின்றாள். மதிய வேளையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, இனிமையான இசைக்கு நேரம் ஒதுக்குகின்றாள். சாயங்கால வகுப்புக்கு முன் தியானம் மேற்கொள்கின்றாள். திரும்பும் வழியில், காய்கறிகளை வாங்கி வருகின்றாள். ஒன்பது மணிக்குள் இரவு ஆகாரத்தை உட்கொண்டு பதினோறு மணிக்குள் உறங்கச் செல்கின்றாள்.

மூன்றாண்டுகள் திரைத்துறையில் பணியாற்றிய அனுபவம், சின்ன அளவிலாவது ஆன்மீகத்தின் பங்கு வாழ்வில் இருக்க வேண்டும் என தீக்ஷாவை உணர வைத்துள்ளது. அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் நிம்மதியைத் தேடிய அவருக்கு ஷிவானந்தா யோகா ஆஷ்ரமம் கண்ணில்பட்டது. இங்கு ஒரு மாத கால பயிற்சியை மேற்கொண்ட அவர், யோகியாக இதுவே முதல்படியானது.

ஹதா மற்றும் ஐயங்கார் வகைகள் தீக்ஷாவுக்கு இயற்கையாகவே வந்தன. பயிற்சியில், முழு முனைப்புடன் பங்கேற்ற அவர் ஒவ்வொருநாளும், வலுவாக வளர்ச்சியடைந்தார். ஆயினும், மும்பை போன்ற நகரத்தில் வாழ்க்கை நடத்த பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, செலவு குறைவான வாழ்க்கை முறைக்கொண்ட கோவாவுக்கு புலம் பெயர்ந்தார். அன்ஜுனாவிலுள்ள ’யோகா மேஜிக் இகோ ரிட்ரீட்’ யோகா ஆசிரியருக்காகவும், உதவி மேலாளர் பணிக்கும் ஆளைத் தேடியபோது இரண்டையும் கவனித்துக் கொள்ள தீக்ஷாவை தேர்ந்தெடுத்தது. இங்கு வின்யாசா மற்றும் யின் யோகாவையும் கற்றுக்கொண்டார்.

ஆஷ்வெம் கடற்கரையில் முதன்முறையாக தானே வகுப்பெடுக்கத் துவங்கினார்.

அழகான கோவாவில் சீசன் முடிந்த பின்னர் பணம் சம்பாதிப்பதும், நட்பு வட்டம் இல்லாமலும் இருப்பது கடினம். சில மாதங்களில் தனது நிரந்தர வீடான மும்பைக்குத் திரும்பினார் தீக்ஷா.

தற்போது இருபத்து ஏழு வயதாகும் தீக்ஷா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டுவருகின்றார். அதிலும், நான்கு ஆண்டுகளாக முழுநேர ஆசிரியராக தொடர்ந்து வருகின்றார். ஓஷோ, ரமண மஹரிஷி, ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் இக்ஹார்ட் ட்டோல் போன்றோர்களைப் பற்றி படித்தாலும், தனது பயிற்சியே மாபெரும் பாடமாக உள்ளதாக கருதுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷரமம் சென்று வருவது தனக்கு ஆசனங்களைச் சரியாக செய்வதில் உதவியாக இருப்பதாக கருதுகின்றார்.

வேகமாக இயங்கும் நகரத்தில் வசித்தாலும், தனது வெற்றிக்கான அர்த்தத்தை தானே உருவாக்கிக் கொண்டுள்ளார் தீக்ஷா. ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்றும் அவர், மற்ற நேரத்தில் தனக்கு விருப்பானவற்றை செய்வதற்கென ஒதுக்கிக்கொண்டுள்ளார். வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் தனது ரெசிபியை நம்முடனும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தீக்ஷாவின் ஒரே குறிக்கோள் தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடனும் பகிர வேண்டும் என்பது மட்டுமே. ஒரு ஆசிரியராக, யோகாவை வியாபாரமாக எண்ணாத அவர் அவதியில் இருக்கும் நிறைய மக்களுக்கு மருந்தாக வேண்டும் என்றே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இதிலிருந்தே, அவர் யோகாவை எப்படி மதிக்கின்றார் என தெரிந்துகொள்ளலாம். ‘யோகா உடைந்தவற்றைப் பற்றி கவனிக்கக் கூடாது; மாறாக இரக்கத்தையும், அன்பையும் பற்றி கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். இந்த நேர்மறை உணர்வுகளும் அன்பும்தான் மக்களை நம்மிடம் ஈர்க்கக்கூடியது.’

நாள் முழுவதும் வேலைப் பளு கொண்டவர்களும் இரவு தூங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தியானம் செய்தால் போதும். நிம்மதியான உறக்கத்துக்கும் மலர்ச்சியான விடியலுக்கும் இது வழிவாகுக்கும் தான் உணர்ந்து அறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யோகா ஆசிரியர் ஆக என்ன தகுதி வேண்டும்? என்று கேட்டதற்கு, ‘உங்களுக்கு யோகா பிடிக்குமானால், அதை சொல்லிக்கொடுக்கவும் பிடிக்கும். ஆசிரியர் பயிற்சி பெற்று, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் சொல்லிக்கொடுங்கள். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.’

சிறு சிறு விஷயங்களில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிப்பதே நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் சிறந்த பரிசு. நமது ஆன்மாவும், இதை நோக்கித்தான் ஓடும்.’

மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்கைக்கு பிராணயாமம் ஒன்றை பயிற்சி செய்தாலே போதும் என்பதுதான் தீக்ஷாவின் அறிவுரை.

ஆக்கம்: நீபா ஆஷ்ரம்| தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்