பெண்களை உடல்வாகின் அடிப்படையில் விமர்சனம் செய்யக்கூடாது: வீடியோ பாடல் மூலம் கருத்து வெளியிட்ட யூட்யூப் சேனல்   

0

வைடமின் ஸ்த்ரீ என்ற யூட்யூப் சேனல், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது குறித்தான ஃபிட்னஸ் பாடல் ஒன்றை அண்மையில் வெளியிட்டனர். இதில் பெண்களின் எல்லாவிதமான உடற்வாகுகளை கொண்டாடும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ’ஃபிட்டாக இருப்பது மட்டும் சிறந்த உடற்வாகு இல்லை’ என்று வலியுறுத்தி, 46 பெண் விளையாட்டு வீராங்கனைகளைக் கொண்டு பெண்கள் அவரவர்களின் உடல் அமைப்பிலேயே எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்று சொல்கின்றனர். 

அந்த பாடலில், பெண்களை அவர்களின் விருப்பப்படி என்ன செய்துகொண்டு படம் பிடிக்க விருப்பமோ அதை செய்ய சொல்லியது, பெண்கள் உடலின் அடிப்படையில் அசிங்கப்படுத்துவதை புறக்கணிக்கும் விதமாக அமைந்தது. உடல் அமைப்பின் அடிப்படையில் ஒருவரை கேலி செய்வது ஆண், பெண் இருவருக்கும் சமமாக நடந்தாலும், பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ‘தி ட்ரம்’ என்ற இப்பாடலை தயாரித்ததற்கான காரணத்தை பகிர்ந்து கொண்ட சேனலை சேர்ந்த தாரா கபூர்,

“மெசேஜ் போடுவது சுலபமாகிப் போன இக்காலத்தில், யார் வேண்டும் என்றாலும் யாரையும் கிண்டல் செய்து ட்ரோல் செய்யமுடிகிறது. அவர்களுக்கு தோன்றிய வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அதில் சில மெசேஜ்கள் பெண்களை இழிவுப்படுத்துவதாகவும், ஏளனம் செய்வதாகவும் இருக்கிறது. குறிப்பாக உடலை வர்ணித்து, குண்டாக, ஒல்லியாக இருப்போரை அசிங்கப்படுத்தி பதிவுகளை பார்த்துள்ளேன். இது தினமும் சந்திக்கவேண்டிய பிரச்சனையாக உள்ளதால் இப்பாடலை தயாரித்தோம்.”

உடலமைப்பை பற்றி பேசுவது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளையும் பெரிதும் பாதிக்கின்றது. அதனால் ஒருவரை பார்க்கும் பார்வையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம். 

சில மாதங்களுக்கு முன்பு, எட்டாம் வகுப்பு புத்தகத்தில் 36-24-36 என்ற அளவுகோள் உள்ள உடலமைப்பே பெண்களுக்கு சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்கு உள்ளாகியது. குழந்தைப் பருவத்தில் கற்கவேண்டிய வயதில் இதுபோன்ற தவறான சித்தரிப்புகள் அவர்களின் சிந்தனையை தவறான வழியில் கொண்டு செல்லும் என்று பலர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பிடிஐ செய்திகளின் படி.

”36-24-36 என்ற உடல் அளவே பெண்களுக்கு சிறந்தது என்றும், இது உடையவர்களே மிஸ் வேர்ல்ட் மற்றும் மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.”

அதேப்போல் 12-ம் வகுப்பு சோசியாலஜி புத்தகத்தில், ஒருவர் அசிங்கமாகவும், மாற்றுத்திறானாளியாகவும் இருந்தால் இந்தியாவில் அதிக வரதட்சணை தரவேண்டி உள்ளது என்று குறிப்பிட்டதும் சர்ச்சையானது, 

கட்டுரை : Think Change India