முகநூலில் முத்திரைப் பதிக்கும் தமிழ்க் கருத்தரசிகள்!

0

2016 வருடத் தொடக்கத்தில் கனவுக் கன்னியைக் கணிப்பதும், வருட இறுதியில் சிறப்புகளை தொகுப்பதும் தானே அறம். இதோ, இந்த வருடத்தின் கவனத்துக்குரிய பத்து பெண் முகநூல் பதிவர்கள் பற்றிய தொகுப்பை படியுங்கள்...

கோவன் கைது, சென்னை மழை, பீப் பாடல், இசைஞானியின் ‘அறிவு’ பிரச்சினை, விஜய்காந்த் 'துப்பு' மழை என மாறிக் கொண்டே இருக்கும் சமூக வலை தளங்களின் ‘ட்ரெண்டு’ எதுவாக இருப்பினும் தர்க்க ரீதியாய் தெளிவாய் தம் கருத்தை முன் வைக்கும் பதிவர்களில் ரேண்டம் பட்டியல் இதோ...

1. அமுதா சுரேஷ்

கவியும் கருத்தும் சேர்ந்த கலவையாக இருக்கிறது அமுதா சுரேஷின் முகநூல் பக்கம். சமூக அவலங்களை எடுத்துரைக்கவும் அவர் தயங்குவதில்லை. மனிதம், அரசியல், வணிக உலகம், சுய விளம்பரங்கள், கம்யூனிசம், முதலாளித்துவம், மனித இயல்புகள் பற்றி அமுதா எழுதும் பதிவுகள், ரசிக்கத் தகுந்தவை. மழைக் காதலிகளில் இவர் முதன்மையானவர்.

அமுதா சுரேஷின் முகநூல் பக்கம்

2. அம்புஜா சிமி

எளிமையான வார்த்தைகளில் நம் உள்ளுணர்வுகளை இயக்குநர் பாலா பாணியில் சுருக்கென குத்திச் செல்லும் ஏதேனும் ஸ்டேட்டஸை காண நேர்ந்தால், அது இவர் எழுதியதாக இருக்க வாய்ப்புண்டு. ஊடகவியலாளரான இவர் தற்போது ஏசியாநெட் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். அழகான புகைப்படத்தோடு, இரண்டு வரிக் கவிதைகள் எழுதுவது, அம்புஜா சிமியின் தனிச் சிறப்பு என்றால், மிகப் பெரிய அலசல் கட்டுரைகளுக்கான உள்ளடக்கத்தை ஒரு சில வரிகளில் பதிவதில் திருக்குறளரசி.

அம்புஜா சிமியின் முகநூல் பக்கம்

3. இளமதி சாய் ராம்

ஊடகவியலாளரான இளமதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் பதிவுகள் அனைத்துக்கும் இருக்கும் ஒற்றுமை, அவர் எழுத்தின் நேர்த்தி. காதல், வேளாண்மை, பருவநிலை மாற்றம் என கருப்பொருள் எதுவாக இருப்பினும், படிப்பவர் மனதில் நிற்குமாறு, பொறுமையான எழுத்து நடையில் எழுதுவது இளமதியின் ஸ்டைல்.

இளமதியின் முகநூல் பக்கம்

4. நிலவுமொழி செந்தாமரை

அம்பேத்கர் கல்லூரியில் சட்டம் பயின்றவர் நிலவுமொழி. பெரியாரிய, கம்யூனிச தத்துவங்கள் பயின்றவர். சென்னை வெள்ளத்தின்போது, “.....மாற்றிக்கொள்ள காய்ந்த துணிகூட இல்லாமலும் ஆடைகளில் இரத்தம் படிந்தோ, அதை மறைத்துக்கொண்டு, இரத்த வாடையை மறைக்கமுடியாது அவதியுற்றோ பாலத்தின் மீதோ, ரோட்டோரங்களிலோ, கைக்குழந்தைகளுடனோ இருந்த பெண்களுக்கு எனது முத்தங்கள்” என இவர் எழுதிய பதிவிற்கு இணையாக வேறெதையும் யோசிக்க முடியவில்லை!

நிலவுமொழியின் முகநூல் பக்கம்

5. தமிழச்சி

ஃப்ரான்சில் இருக்கும் பெரியாரிஸ்ட். பெண்ணியவாதி, எழுத்தாளரான தமிழச்சியின் பக்கம் 5 லட்சத்தை தாண்டிய லைக்குகள் கொண்டது. தீண்டாமை எதிர்ப்பு, மார்க்சியம், பெரியாரியம் என பல தலைப்புகளில் எழுதி வருகிறார். தீர்க்கமான எழுத்து நடை, தமிழச்சியின் சிறப்பு அடையாளம்.

தமிழச்சியின் முகநூல் பக்கம்

6. ஷண்முக வடிவு

இயற்கை காட்சிகளின் அழகழகான புகைப்படங்கள், மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் பதிவுகள் தான் ஷண்முக வடிவின் அடையாளம். “ வேண்டிய மட்டும் கிடக்கின்றன தொலைத் தொடர்பு வசதிகள்..வேண்டியவர்களைத்தான் காணோம் தொடர்பு எல்லைக்குள்..” போன்றதான பதிவுகள் மூலம் அவர் கடத்திவிடும் மென் உணர்வுகள்,பல.

ஷண்முக வடிவின் முகநூல் பக்கம்

7. நாச்சியாள் சுகந்தி

நாச்சியாள் சுகந்தியின் முகநூல் பக்கம் முழுக்க கவிதைகளாகவும் நிறைந்திருக்கிறது. பெரியாரியம், பெண்ணியம், அரசியல் என பல ‘இய’ங்கள் பேசும் ஊடகவியலளார் நாச்சியாள் சுகந்தி. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றியவரான இவருடைய சமரசமாகாத கருத்துக்கள், இவருடைய எழுத்தின் மூலம் பிரதிபலிபலிக்கிறது.

நாச்சியாள் சுகந்தியின் முகநூல் பக்கம்

8. வினி ஷர்பனா

பத்திரிகையாளரான வினி ஷர்பனா, பயணப் ப்ரியையும் கூட. வலிமையான கருத்துக்களை முன் வைக்கும் இவரின் பதிவுகள் பெரும்பாலும் பகுத்தறிவு பேசுபவையாக இருக்கும். பகுத்தறிவுவாதம், சினிமா விமர்சனம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் எழுதுவார். சிக்கலான கருத்தைக் கூட எளிமையான மொழி நடையில் எழுதி, வாசகர் மனம் கவர்பவர் வினி ஷர்பனா. கிண்டல்களும், கேலிகளும் இல்லாத நியாயமான, தீர்க்கமான பதிவுகளுக்கு யோசிக்காமல் இவர் பக்கத்தைப் பார்க்கலாம்!

வினி ஷர்பனாவின் முகநூல் பக்கம்

9. நிர்மலா ஸ்ரீதரன்

“அரிசியோ ஆட்டுக்குட்டியோ யார் யார் பேரு எழுதியிருக்கோ அவங்க தான் சாப்பிட முடியும்”, “அருமையான பதிவு ஒண்ணு போஸ்ட் ஆகாம சுத்திட்டிருக்கு. கிரகம் சரியில்ல போல” - இதை விட வேறெப்படியும் இவருக்கு அறிமுகம் எழுத முடியாது. ரசப்பொடி, சாம்பார் பொடி, வத்தக்குழம்பு பொடியின் வாசனையில் லயிப்பவர்கள் எல்லாம், தாராளமாக இவர் பக்கத்தில் சீட் பிடித்துக் கொள்ளலாம்.

நிர்மலா ஸ்ரீதரனின் முகநூல் பக்கம்

10. ரம்யா முரளி

புன்னகை, குறுநகை, சிரிப்பு - ரம்யா முரளியின் முகநூல் பக்கத்தைப் பார்க்கும்போது தோன்றும் உணர்வுகள் இவை தான். ‘எதுவும் கடந்து போகும்’ என்ற எதார்த்தத்தை, சில வரிகளில் வெளிப்படுத்த இவரால் முடியும். 

ரம்யா முரளியின் முகநூல் பக்கம்

இத்துடன், 2015-க்கான கருத்துக் கணிப்புகள் முடிகின்றன.

அடுத்த வருடம், பல சிறப்பான கருத்துக்கள், பதிவுகளோடு ‘தெறிக்க விடும்’ வலைஞர்களுக்கான விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தைப் பார்த்தபடியே காத்திருப்போமாக!

(தமிழ் யுவர் ஸ்டோரியின் புதிய பதிவுகளை அறிய விரும்புவோர் சொடுக்க வேண்டிய ஃபேஸ்புக் பக்கம் )