ரியோ பாராலிம்பிக் குண்டு எரிதலில் வெள்ளி பதக்கம் வென்ற தீபா மாலிக் இன் உருக்கமான கதை!

0

தீபா மாலிக்குடன் உரையாற்றிய இரண்டு மணி நேரத்தில் மனித உடற்கூறியல் பற்றிய சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்.

சக்கர நாற்காலியை சுழற்றும் இதே கைகள், பைக்கில் உள்ள கியரை மாற்றி இருக்கிறது, அர்ஜுனா விருது பெற்றுள்ளது, விண்ணை கிழித்துச் செல்லும் ஈட்டியை (Javelin) எரிந்துள்ளது. அதே வேளையில் தன் மகள்கள் மற்றும் மகன்களின் கைகளை அழுந்தப் பிடித்து அவர்களுக்கு எல்லையில்லா எதிர்காலத்தை அளிப்பதற்கு சமமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

வாழ்வை இழந்து சக்கர நாற்காலியில் சோர்ந்து கிடக்கும் இந்த கால்கள், உங்களோடு சேர்ந்து உங்களை உலகை சுற்றி காட்ட வல்லது மற்றும் உங்களை ஒரு சொத்துக்கு சொந்தக்காரராக உயர்த்த கல்லாபெட்டிக்கு பின்னால் அமர்ந்து உங்களின் கனவுத் தொழிலான உணவக வியாபாரத்தை செய்யவும் உதவக்கூடியது.

இதோ அந்த ரகசியம் – சக்கரத்தின் மீதுள்ள அந்த கால்கள் அதை கட்டுபடுத்துகிறது; அவை உண்மையில் சக்கர நாற்காலியின் சக்கரங்கள் அல்ல; அவை அசோக சக்கரம், நற்பேறுக்கான சக்கரம்; தொடர்ந்து இயங்குதல் மற்றும் முடிவின்மைக்கான அடையாளம்.

தீபா, பேரப்லெஜிக்கால்(paraplegic) பாதிக்கப்பட்டார். அதாவது கழுத்திற்கு கீழே உடல் முழுதும் பக்கவாதம், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. அவர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது என்று அவருக்கும் தெரியும். “இயல்பாக இருப்பதற்கு அர்த்தம் எப்போதும் ஓய்வாக இருப்பது அல்ல, என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் அவர். இயல்பு நிலைக்கு முக்கியத்துவம் அளிக்காதவராக தீபா விளங்கினார்; அவரின் பெருந்தன்மை அது. தன்னுடைய குறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைகளாக்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்.

உடல் ஊனம் அவருக்கு அறிமுகம் இல்லாதது, இந்த வழியில் அவருடைய போராட்டம் அவருடைய ஆத்மாவிற்கு இது ஒரு முயற்சி அல்ல – அவர் தோல்விக்கான வாய்ப்பை ஒரு போதும் அனுமதித்ததே இல்லை.

“நான் எப்போதுமே என்னை நிரூபிக்க விரும்புவேன். அது ஒரு பழக்கமாகிவிட்டது – என்னுடைய மருத்துவ நிலையால் நான் வாழ்வில் வீழ்ந்துவிடவில்லை என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்க நினைக்கிறேன்.”

மனதளவில் ஆறு வயது துறுதுறு சிறுவன் போல இருக்கும் அவருக்கு முதுதண்டுவடத்தில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது விரைவிலேயே கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அந்த அனுபவம் அவருக்கு பல்வேறு முக்கிய விஷயங்களை கற்றுக் கொடுத்ததோடு வாழ்க்கையை எதிர்கோணத்தில் இருந்து பார்க்கும் அனுபவத்தையும் தந்தது. தீபா உடல்நலம் தேறி வர மூன்று ஆண்டுகள் ஆனது, பல்வேறு நிகழ்வுகளின் அடுத்தடுத்த திருப்பங்கள், அவரது வாழ்வில் மிரட்சியை ஏற்படுத்தியது, அவருக்கான அடையாளங்கள் அனைத்தையும் அது அழித்து பலவீனப்படுத்திவிடும் என்று அவர் பயந்தார்.

“துறுதுறுப்பான, பலவீனமான மக்களை மிரட்டும் இயல்பு உள்ளவள் நான். வெளிஉலகிலேயே வாழ்க்கையை நடத்தியதோடு, மரங்களில் தாவி நண்பர்களின் பைக்குகளில் அந்தி சாயும் நேரம் வரை சவாரி செய்த என்னால், எப்படி ஒரு அறையில் அமர்ந்து ஓவியம் தீட்ட முடியும்,” என்கிறார் தீபா.

“வாழ்க்கைக்கான நன்றியை செலுத்த விரும்பினால் நீங்கள் அதில் உள்ள நன்மைகளை பார்க்க வேண்டும். நான் படுத்த படுக்கையாக இருந்த போதும் என்னுடைய மூளையில் உயர்சிந்தனைகளையே வளர்த்தேன், அதோடு எதிர்காலத்திற்கு தயாரானேன். என்னைப் பொருத்த வரையில் மறுமுனையில் வாழ்க்கை காத்திருக்கிறது என்றே எனக்குத் தோன்றியது.”

சாவியை என்னிடம் கொடுங்கள் அது எப்படி முடிந்தது என்று நான் உங்களுக்கு காட்கிறேன்.

ஒரு இடைவேளைக்குப் பிறகு தீபாவால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை, அவருடைய நண்பர்களின் பைக்குகளைத் திருடி அவற்றை ஒட்டி, அவர்களிடம் பிடிபட்டு, வசவுகளைப் பெறும் காலம் திரும்பாது என நினைத்தார்.

ஒரு இளம் அதிகாரி, தீபா ஒரு கலைக் கூடத்தில் ஆடம்பரமிக்க ஜப்பானிய பைக்கோடு இருப்பதை ஒரு நாள் கண்டார். அந்த பைக்குடைய உருமையாளர் ஒரு நளினமான பெண் என்று தெரிந்ததும் வியந்து போனார்.

அவர் தீபாவிடம் பைக் பற்றி என்ன தெரியும் எனக் கேட்டார், அதற்கு தீபா அளித்த பதில், “சாவியை என்னிடம் கொடுங்கள் அதை எப்படி ஓட்டுவது என்று காட்டுகிறேன் என்றார்.”

அவர் பைக் சாவியை மட்டும் தீபாவிடம் கொடுக்கவில்லை, அடுத்த நாள் நன்கு கோட் சூட் அணிந்து வந்து தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கரம் பிடிக்கக் கேட்டார். “ஐயா, நான் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா, இதனால் நாங்கள் இருவரும் எங்கள் பைக்கை ஒரே பாதையில் மகிழ்ச்சியோடு செலுத்துவோம்” என்றார்.

வரலாறு தனக்குள்ளாகவே திருப்பித் தருகிறது

அவர்கள் தங்களது அழகான வாழ்வை ஒன்றாக உருவாக்கினார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கான முதல் அடையாளம், தேவிகா. ஆனால், விதி அந்த வரலாற்று தவறை திரும்பவும் அளித்தது.

என்னுடைய மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது அவர் ஒரு பைக் விபத்தில் சிக்கினார். அவருடைய மூளையின் உட்புறத்தில் ரத்தகசிவு ஏற்பட்டது, அவருடைய நரம்புகள் உணர்விழந்தன, முடிவில் அவர் இடது பக்கம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டது. நாங்கள் அவரை பூனேவில் இருந்த கமண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் இருந்த அதே வார்டு, அதே படுக்கையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.”

“என்னுடைய இயலாமையை நான் என்னுடைய மகளுக்குத் தந்துவிட்டேன் என்று என்னைப் பற்றி புரணி பேசினார்கள். ஆனால் இந்த சமுதாயத்தின் கண்ணில்தான் ஊனம் இருப்பதாக நான் நினைத்தேன். நான் குழந்தையாக இருந்த போது என்னை பாதுகாத்தார்கள் ஆனால் இப்போது என் மீது விஷத்தை கக்குவதாக நான் கருதுகிறேன். கடவுள் அடுத்தடுத்து சவால்களை கொடுத்துக் கொண்டே தான் இருப்பார், அதில் நீயும் ஒருவர் உனக்கு கடவுள் இதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று என் தந்தை என்னிடம் கூறுவார்.”

தீபாவும் அவருடைய கணவரும் தங்களின் மகளுக்கு தளராமல் இரவு பகல் பாராமல் உதவி செய்தனர், அவருடைய பெற்றோர் செய்தது போல. தீபாவுக்கு இன்னொரு மகளும் உள்ளார், அவர் அம்பிகா, உண்மை நிலையில் இருந்து அந்த குடும்பத்தின் கவனத்தை திசை திருப்பும் ஒரே ஊன்றுகோல். “என்னுடைய சவால்களை கடவுள் இதுவரை தீர்க்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். 1999ல் என் கணவருக்கு கார்கிலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் சென்ற சில நாட்களிலேயே என் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவருடைய குடும்பமே நிலைகுலைந்துவிட்டது.”

“ஆனால் கடவுள் இந்த சவால்களை திட்டமிட்டுவிட்டார், அவர் அதை நல்ல முறையில் திட்டமிட்டிருந்தார் என்று கூட சொல்லலாம்! என்னுடைய கணவர் போருக்காக சென்றிருந்த போது நான் இந்த தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டேன் – விபத்தும், துரதிஷ்டமும் தினம்தினம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நான் மிகவும் உணர்ச்சிவசத்தோடு நாட்களை கழித்தேன், என்னுடைய கவனம் ஒரு நிலையில் இல்லை, நான் வாழ்ந்தாக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தேன். ஏனெனில் என் கணவரின் விதி என்ன என்று எனக்குத் தெரியாது. எனக்குள் இருந்த தாய்மை, என் குழந்தைகளுக்காக நான் வாழ வேண்டும் என்று எனக்குள் பிடிவாதத்தை விதைத்தது.”

போரில் நிகழ்ந்த விபத்தால் மொத்த மருத்துவமனையும் ஐசியூவாக மாறி இருந்தது. “எந்த உடல்நலக்குறைவோ, அல்லது நோய் பாதிப்போ இல்லாமல் நாட்டுக்காக போராடி கைகள், கண்கள், கால்களை இழந்தவர்களோடு எனக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனக்கு புகார் செய்ய காரணம் இல்லை. என் மூளை இது போன்ற விஷயங்களை பார்த்து பழகிக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டுவிட்டது.”

ஒரு தீவிர சிக்கலுக்குப் பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அது என்னவென்றால் அவருடைய மொத்த மூளையில் உள்ள குழாய்களிலும் கசிவு ஏற்பட்டது. மூன்றாவது அறுவை சிகிச்சையை மேற்கொண்ட போது, அவர் 25 நாட்கள் கோமா நிலையில் இருந்தார். அது ஒரு முடிவல்ல; ஆனால் சிலர் இதை முடிவின் தொடக்கம் என்றும் கூட சொல்லுவார்கள்.

“என்னுடைய அடுத்த அறுவை சிகிச்சைக்கு முன்னர், எனக்கு ஒரு டீலை அவர்கள் கூறினார்கள் – அதாவது என்னுடைய எஞ்சிய காலம் முழுவதும் நான் சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டும் என்பது அது. நான் என்னுடைய நடைபயணத்தை கொண்டாட எனக்கு ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது.”

அவரால் அதை நம்பமுடியவில்லை; அந்த ஏழு நாட்களில் அவர் தன்னுடைய வீட்டை சக்கர நாற்காலியில் அவருடைய காலத்தை கழிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தார். தன்னுடைய தனி அறையில் பெரும்பாலான நேரத்தை தன்னைப் போல பாதிக்கப்பட்ட சர்வதேச சமூகத்தினரோடு செலவிட்டார். இந்த பிரச்னைக்கு தீர்வு தருபவர்களுடனும், நம்பிக்கை அளிப்பவர்களுடனும் நீண்ட நேரம் உரையாடினார்.

தீபாவின் கணவர் போரில் இருந்து நல்ல முறையில் திரும்பினார், ஆனால் மக்கள் அவரை விட்டு அவர் கணவர் பிரிந்து சென்றுவிடுவார் என்றே அனுமானித்தனர். “சமுதாயத்தின் கண்களுக்கு நான் ஒரு நடைபிணம். ஆனால் நான் சாவை பார்த்துவிட்டேன். அது எனக்காக அல்ல. வாழ்வில் எனக்கான அனைத்தும் அப்படியே இருக்கிறது.”

அவருடைய நிலையை மாற்றிக் கொள்ள அவரிடம் இருக்கும் இரண்டு ஆயுதங்களில் ஒன்று சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம், மற்றொன்று அவருடைய நகைச்சுவை உணர்வு.

“இயல்பாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல! நாளையே நான் ஒரு அரசியல்வாதியானால் நான் என்னுடைய நாற்காலியைவிட்டுத் தரமாட்டேன்! நான் நீண்ட ரயில் பயணம் பற்றியோ அல்லது படக்காட்சிகளை பார்க்க முடியாது என்றோ கவலைப்படவில்லை. நான் எப்போதும் எதற்கும் தயாராக இருப்பேன், நான் மகிழ்ச்சியோடு டயரை பொருத்திக் கொள்வேன்!”

இதற்கு அப்பாற்பட்டு, அவர் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான செயல்களையே எப்போதும் செய்கிறார். “நான் எப்போதும் என்னுடைய சக்கரங்களில் இருக்கிறேன். என்னை ஏன்? சக்கர நாற்காலியில் முடங்கி இருப்பதாக நினைக்கிறீர்கள், நான் சக்கரநாற்காலியில் சுதந்திரமாக இருக்கிறேன். அசோக சக்கரத்திற்கு சக்கரம் இருக்கிறது; நான் அனைவரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என சொல்வேன், உங்களுக்கான உந்துகோல் நீங்கள் தான் உங்களைத் தவிர வேறு யாருமில்லை!”

வதந்திகளும், மீட்சி பெற்றதும்

மீண்டும் அனைவரின் ஒரே மாதிரியான எண்ணங்களுக்கு நான் இரையானதாக நினைத்தேன் – ‘அவருக்கே வெளியில் இருந்து உதவி தேவைப்படும் நிலையில், அவர் எப்படி தன்னுடைய மகள்களுக்கு கற்றுத் தருவார்?’ எனக்குள் இருந்த ஏதோ ஒன்று இது தவறான எண்ணம் என்று அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று என்னைப் போராட தூண்டியது.

தன்னுடைய அடையாளத்தை தேடிக்கொள்வதற்கான போராட்டம் முடிவதற்குள், அவருடைய கணவருக்கு சான்சாட் போருக்கான அழைப்பு வந்துவிட்டது. இந்த முறை, ஒரு ஸ்குவாட்ரோஸ் கமாண்டரின் மனைவியாக அவர் கணவனை பிரிந்து இரவு முழுதும் தனிமையில் இருக்கும் 30 குடும்பங்களை பாதுகாக்க வேண்டும்.

அப்போது தான் அவருக்கு வெளியில் எடுத்துச் செல்லும் கேட்டரிங் சேவை எண்ணம் உதித்தது, அதற்கு முன்னர் ராணுவ குடியிருப்பில் அந்த வசதி இல்லை. தன் வீட்டு வேலையாட்கள் மற்றும் சில பெயின்ட்டர்களைக் கொண்டு அறையை அலங்கரித்தார். தன்னுடைய பண்ணைவீட்டின் ஒரு மூலையில் அவர் கார்டன் உணவகத்தைத் தொடங்கினார், முதலில் வீட்டில் இருந்து டெலிவரி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது, ஆனால் அது பிரபல ரெஸ்டாரண்ட்டாக மாறிவிட்டது.

“நான் முதலில் 250 மக்களுக்கு உணவளிக்கும் வகையில் உணவகத்தைத் தொடங்கினேன், அதோடு தினந்தோறும் 100 வீட்டு டெலிவரி ஆர்டர்களையும் செய்து வந்தேன்.” அவர் அங்கு பணியாற்றும் சிறுவர்களுக்கு அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுத உதவினார். “மற்ற பெண்களுக்கு என்னை பற்றி ஒரு சந்தேகம் இருந்தது, எப்படி நான் என் சொந்த குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, அவர்களையும் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று.”

ஏதோ ஒன்று குறைந்தது

அனைவருக்கும் பிடித்த இடமாக அது மாறியது, இளம் அதிகாரிகள் தங்கள் காதலியோடு வந்து சந்தோஷமாக கலந்து பேசுவர். ஒரு நாள் தீபாவை பார்த்து ஒரு இளைஞர் நீங்கள் ஏன் மீண்டும் பைக் ஓட்டக் கூடாது என்று கேட்டார். அந்த இளைஞர் உடனடியாக கூகுள் செய்து எப்படி வெளிநாட்டில் வாழும் தீபாவைப் போன்றோர் இதை செய்கின்றனர் என்று காண்பித்தார்.

“எனக்கு ஒரு உண்மையான சோதனை அது. எனக்கு கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் வேலை செய்யாது. என்னுடைய காயங்களை விட பெரியது. என்னுடைய தோள்கள் சமமாக இல்லை, முறையான உணர்வுகள் இல்லை, நுரையீரல் சரிவர செயல்படாது, சீதோஷண கட்டுப்பாடு இல்லை. என்னுடைய நரம்புகள் அங்கங்கே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. என்னால் தாடையை மூடி எச்சிலைக் கூட கட்டுப்படுத்த முடியாது. நான் உணவகத்தை நடத்துவதே ஒரு அதிசயம் தான்!”

ஆனால் அந்த இளைஞர் பிடிவாதமாக இருந்தார். இதை நிச்சயம் செய்ய முடியும் என்று அவர் தீபாவை சம்மதிக்க வைத்தார்.

தீபா முழு நேர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு உடற்பயிற்சி நீச்சல். ஒரு சிலர் அவருடைய நீச்சல் பயிற்சியை தொலைக்காட்சியில் கண்டு, வரவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் அவரை பங்கேற்க செய்ய வேண்டும் என்று விளையாட்டு அதிகாரிகளை உஷார்படுத்தினர். மஹாராஷ்டிரா தீபாவை தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்தது.

“எனக்கு 36 வயது. என்னால் ஏன் முடியாது? என நான் நினைத்தேன், வாய்ப்பு கதவைத் தட்டுகிறது, கதவைத் திறந்து அதை வரவேற்பவர்களே வெற்றியாளர்கள். நானும் அதையே செய்தேன், அதன் பயனாக பதக்கங்களை வென்றேன். 2006ல் நான் கொலாலம்பூர் சென்று, ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றேன்.”

விளையாட்டு வீரர் என்ற பெயர் கிடைத்ததும், அவருடைய சிஎஸ்ஆர்க்கு ஒரு பிராண்டை கட்டமைத்து கொடுத்தது, முடிவில் விஜய் மல்யா தீபாவிற்கு ஸ்பான்சர் வழங்கினார். ஆனால் இந்தியாவில் யாரும் அவருக்கு ஏற்ற ஒரு பைக்கை தயாரிக்க முன்வரவில்லை, அடுத்த நாளே, ரோடீஸ் குழு அவரை அழைத்தது.

“நீங்கள் பைக்கராக வேண்டும்? எங்களுடைய தேசிய தொலைகாட்சி ஷோவில் நீங்கள் உங்கள் பைக்கை ஓட்டுங்கள், என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.”

தீபா மாலிக் மூளையில் நினைக்கும் அனைத்தும் செயலுக்கு வந்தது. நீங்கள் பொறுமையாக இருந்தால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் இந்த உலகம் உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார், அது தான் அவருடைய ரகசியத்திற்கான பெரிய ஃபாலோயர்.

54 தேசிய தங்கபதக்கம், 13 சர்வதேச அளவில், மூன்று உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள், ஒரு வெள்ளி பதக்கம், அதுமட்டுமின்றி அனைத்திலும் டாப் ஐந்து இடத்தை பிடித்தவர். போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில், அவர் பாரா – விளையாட்டுகளுக்கான ஐக்கானாகவும் இருந்தார்.

“பைக்கிங்கும், விளையாட்டும் சக்கர நாற்காலியில் இருப்பவர்களைப் பற்றிய மக்களின் ஒரே மாதிரியான மனநிலையை தகர்த்தெரிய அவருக்கு நல்ல வழியை காட்டியுள்ளது. இதை கேட்கவேண்டுமெனில் நீங்கள் ஒரு சாதனையாளராக வேண்டும். இந்த கூக்குரலில் இருந்து வெளிவர நினைத்தால், நீங்கள் புத்திசாலித்தனமாக ஏதேனும் செய்ய வேண்டும்.”

தற்போது அவர் யமுனை நதியை கடந்து, தன் செயல்பாட்டின் மூலம் நான்கு லிம்கா உலக சாதனையாளர் பதிவை பெற்றுள்ளார். அதே போன்று இமயமலை பந்தயம், பாலைவனப் புயலிலும் பங்கேற்றுள்ளார். இரண்டு கடினமான வழித்தடங்களில் இமாலயன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்(H.M.A) மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியாவோடு இணைந்து அவர் மைனஸ் ஜுரோ டிகிரியில், 18 ஆயிரம் அடி உயரத்தில் எட்டு நாட்கள் 1,700கி.மீ தூரம் பைக் ஓட்டியுள்ளார்.

“மக்கள் நான் ஒரே அறையில் என்னுடைய முகத்தை பார்த்தே இறந்து போவேன் என்று நினைத்தார்கள் – ஆனால் இது தான் நான், இரண்டு முழு கடவுச்சீட்டுகளுடன்(passports) நான் உலகைச் சுற்றுகிறேன்! ஒரு நாள் ஜான் ஆப்ரஹாம் பக்கத்தில் சவாரி அல்லது என்னுடைய மற்றொரு கையில் அர்ஜுனா விருது தவழ்ந்து கொண்டிருக்கிறது.”

அவர் அடுத்த ஆண்டு ரியோவில் பங்கேற்க தயாராகி வருகிறார், தன்னுடைய குண்டுஎரிதல் திறனால் உலகை வியக்கச் செய்ய உள்ளார். @deepaathlete ல் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவியுங்கள்.

ஆக்கம் : Binjal Shah | தமிழில்: Gajalakshmi Mahalingam