தடகள வீராங்கனை சாந்திக்கு மகளிர் தடகள பயிற்றுநர் பணிக்கான அரசாணை இன்று அளிக்கப்பட்டது!

0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள காதக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தராஜனுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்றுனராக பணியமர்த்தம் செய்யும் அரசாணை இன்று அளிக்கப்பட்டது. இவரை சிறப்பினமாகக் கருதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் இன்று, அந்த பணி நியமன ஆணையினை சாந்தியிடம் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதியில் மகளிர் தடகள பயிற்றுநகராக சாந்திக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி, 12 சர்வதேச பதக்கங்களையும், பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். 2006 நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் சாந்தியின் பாலினம் குறித்த சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு அந்த பதகத்தை திருபித்தருமாறு, ஆன்லைன் தளம் மனு ஒன்றை தொடங்கியது. தான் பெண்ணினத்தை சேர்ந்தவர் என்றும் தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் வீடியோ மூலம் கோரிக்கை வெளியிட்டு இருந்தார் சாந்தி.