கூகிள் சிஇஒ சுந்தர் பிச்சையின் மொத்த ஊதியத் தொகை 2016-ல் இரட்டிப்பாகி 199.7 மில்லியன் டாலர்கள் ஆகியுள்ளது!

0

கூகிள் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு 2016 ஆம் ஆண்டு அளித்த பங்கு அளவின் மதிப்பு 198.7 மில்லியன் டாலர்கள் ஆகும். இதுவே 2015-ல் அவருக்கு கிடைத்த பங்கு மதிப்பான 99.8 மில்லியன் டாலரைவிட இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளின் அடிப்படையில், 2016-ல் சுந்தர் பிச்சைக்கு கிடைத்த மொத்த தொகை 199.7 மில்லியன் டாலர்களாகும். இது 2015-ல் அவருக்கு கிடைத்த 100.6 மில்லியன் டாலர்களை விட இரட்டிப்பு ஆகும்.

2016-ல் பிச்சைக்கு கிடைத்த சம்பளம் 6,50,000 டாலர்களாகும். இது 2015 அவருக்கு கிடைத்த 6,52,000 டாலர்களைவிட சற்று குறைவாக உள்ளது என்ற்ய் சிஎன்பிசி செய்தி குறிப்பிட்டுள்ளது. 

“கூகிளின் இணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் தங்களின் சிஇஒ மற்றும் தலைவர் பதவிகளுக்காக வெறும் 1 டாலர் சம்பளம் வாங்கிய போதும் பிச்சையின் இந்த மாபெரும் சம்பள தொகை தொடர்கிறது.”

ஆனால் பேஜ் மற்றும் ப்ரின் இருவரும் பங்குகள் மூலம் சுமார் 40 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சொந்தக்காரர்கள். மற்றொரு அறிக்கையின்படி, கூகிளின் விற்பனை வருவாய் 22.6 சதவீதம் உயர்ந்தபோதே பிச்சைக்கு பதவியும், சம்பள உயர்வும் கிடைத்தது.