சமூக சீர்திருத்தத்தை நிலைநாட்டிய துறவி ராமானுஜரின் 1000-வது ஆண்டு கொண்டாட்டம்: சிறப்பு தபால்தலை வெளியீடு!

0

மாபெரும் சமூக சீர்திருத்தவாதியும் துறவியுமான ராமானுஜாச்சார்யாவின் ஆயிரமாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படம் அடங்கிய, 25 ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை நேற்று புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறிய மோடி, ராமனுஜரின் வரலாறு மற்றும் பெருமையை கூடி இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்றும் மோடி தெரிவித்தார். 

துறவி ராமானுஜரின் வாழ்க்கையின் தத்துவமே அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயம், மதம் மற்றும் வேதாந்தம் ஆகும். எது நடந்ததோ அல்லது எது நடக்க உள்ளதோ அது இறைவனின் வெளிப்பாடு என்ற கொள்கையின் அடிப்படையை நம்பினார். இறைவனில் மனிதனையும் மனிதர்களில் இறைவனையும் கண்டவர். இறைவனின் பக்தர்கள் அனைவரும் சமமானவர்களாக அவர் கண்டார்.

சாதிப்பாகுப்பாடு மற்றும் அதிகார அடுக்கு அமைப்பு சமுதாயம் மற்றும் மதத்தின் உள்ளார்ந்த அம்சங்களாக அங்கீகரிக்கப்பட்டபின், ஒவ்வொருவரும் தங்களை இந்த அதிகார அடுக்கில் மேலும் கீழும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். இதை துறவி ராமானுஜர் தனது வாழ்க்கைமுறை மற்றும் மத போதனைகள் மூலம் எதிர்த்தார். இதனால் தான் சுவாமி விவேகானந்தர், துறவி ராமானுஜரின் இதயத்தில் இருந்து பேசினார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக அழுத பெரிய இதயம் அவர். அந்த காலகட்டத்தில் ஒருவர் ஒடுக்கப்பட்டவர் என்றால் அது அவரவர் விதிப்பயன் என்று மக்களால் ஏற்கப்பட்டிருந்தது. இதனை துறவி ராமானுஜர் உடைத்தெறிந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து அவர் முன்னே யோசிக்கத் தொடங்கினார்.

இந்த ஆயிரம் ஆண்டு மூத்த துறவியான ராமானுஜரின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒடுக்கப்பட்டவர்களின் மறைக்கப்பட்ட, சொல்லொண்ணா விருப்பங்களை உணர்ந்தார். 

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, சாதியில் இருந்து விலக்கப்பட்ட மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மதத்தினுள் மட்டுமின்றி சமூகத்தினுள்ளும் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார் ஏழைகளின் தேவைகளை சமூக பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவையையும் துறவி ராமானுஜாச்சார்யா இணைத்தார்.

உதாரணத்திற்கு அவர் மேல்கோட்டை என்ற இடத்திற்கு அருகே தொண்டனூர் என்ற இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் செயற்கை ஏரியை ஏற்படுத்தினார். இந்த ஏரி இன்றும் துறவி ராமானுஜரின் மக்கள் நலப் பணிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இன்றும் இந்த ஏரி 70க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளை சமாளிக்கிறது.

ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அவர் கடவுளாக தென்பட்டார். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதை அவர் முற்றிலுமாக மாற்றினார். நிர்வாகத்தின் பிரிவுகளை அவர் ஒவ்வொரு வகுப்பினருக்கும் வழங்கினார். இதில் பெண்களுக்கும் நிர்வாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மக்கள் சேவையும் இதில் இடம் பெற்றிருந்தது ஏழைகளுக்கு உணவு, மருந்து, உடை மற்றும் தங்குவதற்கு இடம் ஆகியவற்றை வழங்கும் விதமாக ராமானுஜர், ஸ்ரீரங்கம் கோவிலின் செயல்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

சாதி பின்பற்றும் முறைக்கு ஒரு சவாலாக தனது வாழ்க்கையை அவர் எடுத்துகாட்டினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையே அவர் விழிப்புணர்வை கொண்டு வருவதுடன் சமூக வாழ்கையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர அவர் பாடுபட்டார். இதனால் தான் அவரை அனைத்து சமுதாயத்தையும், ஜாதியையும் சேர்ந்தவர்கள் அவரை பூஜித்தனர். 

பலருக்கு தெரியாத விஷயம் ஒன்றை தெரிவிக்கிறேன். துறவி ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலில் இஸ்லாமிய தில்லி இளவரசி பிபி நாச்சியார் சிலையை நிறுவினார். இங்கே குழுமியுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியா 2022ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ஆம் ஆண்டில் நுழையும் போது, நம்மை பின்னோக்கி இழுக்கும் நம் பலவீனத்திலும், கட்டுப்பாடுகளுக்கும் எதிராக நாம் பாடுபட்டு வரும் நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள் நல்வாழ்வு மற்றும் ஏழைமக்கள் நல்வாழ்விற்காக பாடுபடவேண்டும். துறவி ராமானுஜரின் பெயரால் அஞ்சல் தலையை வெளியிடும் வாய்ப்பினை வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் மோடி.