Techsparks 2017 பிரம்மாண்ட விழா: ஒரு பார்வை! 

டெக்ஸ்பார்க்ஸின் 8-வது பதிப்பு விழாவில், சக்திவாய்ந்த, வலிமைமிக்க, பிரபலமானவர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டு தொழில்முனைவோர் எனும் சூப்பர்ஹீரோக்களை கொண்டாடினார்கள்!

0

ஸ்டார்ட் அப்களுக்கு கொள்கைகளும் கட்டுப்பாடும் அவசியம் என்றபோதும் தொடர்ந்து உந்துதலளிக்கப்படுவதும் ஊக்கமளிக்கப்படுவதும் மற்றொரு முக்கிய அம்சமாகும். தாஜ் விவந்தாவில் நடைபெற்ற நிகழ்வில் இரண்டாவது சிறப்பான விஷயம் நடிகர் மற்றும் தொழில்முனைவோரான ரானா டகுபாட்டி மற்றும் யுவர் ஸ்டாரியின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல்.

நடிகர் என்கிற தனது பங்கை ஸ்டார்ட் அப் நிறுவனருடன் ஒப்பிடுகிறார் ரானா. நடிகர்கள் ஸ்டார்ட் அப்பில் ஈடுபடுவதை எப்போதும் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதற்கான சான்றாகும். 

பட உதவி: தீப்தி வர்மா
பட உதவி: தீப்தி வர்மா
கதை சொல்லுவதில் தனக்கு அதிக ஈடுபாடு உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தினார். இதை திரைப்படம், விஷுவல் எஃபெக்ட்ஸ், ஆக்மெண்டட் ரியாலிட்டி போன்றவற்றை பயன்படுத்திச் சொல்லலாம் என்றார். 

கேள்விகளுக்கு மிகவும் லாவகமான சுலபமாக பதிலளித்தார். தொழில்நுட்பம், பாகுபலி திரைப்படத்தின் வெற்றி உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்துகொண்டார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் குறித்து குறிப்பிடுகையில், 

“அதுதான் என்னுடைய அலுவலகப் பணி.” என்றார்.

ஃபிண்டெக் எவ்வாறு டிஜிட்டல் இந்தியாவை சாத்தியப்படுத்துகிறது என்றும் தி லேபிள் லைஃப் நிறுவனர் ப்ரீதா சுக்தன்கர் மற்றும் ஸ்டைல் எடிடர் சூசன் கான் ஆகியோர் இந்தியாவில் ப்ரைவேட் லேபிளை உருவாக்குவதில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் மற்ற குழு விவாதங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

”நான் மனோதிடம் நிறைந்தவர். நான் முயற்சியை கைவிடமாட்டேன்,”

என்றார் இண்டெல் இந்தியா நிறுவனத்தில் பொது மேலாளர் மற்றும் இண்டெல் கார்ப், டேட்டா செண்டர் க்ரூப்பின் VP நிவ்ருத்தி ராய். ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அளித்தார். நிவ்ருத்தி ராய் புதுமைகளால் உந்தப்படும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும் என்றும் புதுமைகளை புகுத்துதல் என்பது ரிஸ்க் எடுப்பதும் அதிகளவு தோல்விகளை சந்திக்க நேர்வதும் நிறைந்த காலகாட்டம் என்பதையும் விவரித்தார்.

மக்கள் புதிய சிந்தனைகளை செயல்படுத்துவன் மூலம் மதிப்பை உருவாக்குவதே புதுமை என்று விளக்கமளித்தார்.

த்ரூபிட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ அபிஷேக் கோபால் ப்ளாக்செயின் வணிகம் குறித்து பேசினார். வீவொர்க் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் கரண் விர்வானி திங்கட்கிழமை பணிக்கு செல்ல கடினமாக தோன்றும் ஒரு சூழலை மாற்றியமைத்து ஒரு மாறுபட்ட பணிச்சூழலுக்கு செல்வது குறித்து விவரித்தார்.

ப்ரைம் வென்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பார்ட்னர் சஞ்சய் சாமி முதலீட்டாளர்கள் ஃபிண்டெக் நிறுவனங்களின்மீது ஏன் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது குறித்து பேசினார். அவர் தனது உரையைத் துவங்குகையில் தன்னுடன் செக்புக்கை உடன் எடுத்து வந்திருப்பதாகக் கூறி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

2014-ம் ஆண்டு துவக்கத்தில் ஆக்சிஸ் வங்கி மேலாளர்கள் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் குறித்து ஆராய்ந்தனர். ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நேப்டீல் நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு பங்குகளைக் காட்டிலும் வென்சர் கடனின் முக்கியத்துவத்தை வங்கி உணர்ந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு மே மாதம் ஒரு வென்சர் கடன் குழுவை அமைத்தது. இதன் மூலம் சராசரி டிக்கெட் சைஸ் 12 கோடி ரூபாயுடன் 17 டீல்களை 15 மாதங்களில் முடித்தது.

”நீங்கள் மூலதனத்தை உயர்த்துகையில் பங்குடன் கடனும் இணைந்தே இருக்கும். நீங்கள் பங்கை இழக்கமாட்டீர்கள். உங்கள் தயாரிப்பு வளர்ச்சியடையவோ அல்லது வொர்கிங் கேப்பிடலை நிர்வகிக்கவோ பணத்தை பயன்படுத்துவீர்கள்,” 

என்று டெக்ஸ்பார்க்ஸ் 2017-ல் குறிப்பிட்டார் ஆக்சிஸ் வங்கியின் கார்ப்பரேட் பேங்கிங்கின் Deputy Vice President விவேக் ஆதவ்.

கலாரி கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வாணி கோலா இந்திய ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார். மற்ற வென்சர் கேப்பிடலிஸ்ட்ஸ் அந்த தருணத்திலான தங்களது கருத்துக்களை பதிவுசெய்தனர்.

வெற்றிகரமான வெளியேற்றம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வெற்றிகள் சார்ந்த ஏன் மற்றும் எதற்காக போன்றவை மற்ற அமர்வுகளில் விவாதிக்கப்பட்டது. ஜெர்மன் கான்சல் ஜெனரல் ஹெல்விக் போட் (Hellwig-Boette) இந்திய ஜெர்மானிய ஸ்டார்ட் அப் இணைப்பு அமைப்பது குறித்துப் பேசினார்.

டெக்ஸ்பார்க்ஸ்2017 இரண்டாம் நாள் அதிகமான கற்றல், அறிவு, உந்துதல் போன்றவை சமமான அளவுகளில் கிடைக்கும்.