நீங்கள் Techsparks 2017-ல் கலந்துக்கொள்ள 17 காரணங்கள்!

0

டெக்ஸ்பார்க்ஸ் 2017’ இந்தியா முழுதுமுள்ள தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழிலதிபர்களை அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடும் விழா ஆகும். Techsparks ஒவ்வொரு வருடமும் அதன் பிரமாண்டத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது. 

சரி, நீங்கள் ஏன் Techsparks 2017-ல் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும்? இதோ அதற்கான ஒன்று, இரண்டு அல்ல 17 காரணங்கள்:

நீங்கள் ஏற்கனவே இதற்கான டிக்கெட்டை வாங்கிவிட்டீர்கள் என்றால் மற்ற ஆர்வமிக்க தொழில் முனைவர்களோடு இதைப் பகிருங்கள். மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை எவ்வாறு தொடங்கிட வேண்டும் என்பதை நோக்கியே இருக்கும், ஆனால் Techsparks மற்ற நிகழ்வு போல் அல்லாமல் இந்த ஆண்டு ’Make It Matter’ என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு வெற்றிகரமான வணிக அளவீடுகள் என்றால் எவை என்பதைக் கண்டறிந்து கொள்ளுங்கள்.

1. தலைசிறந்த வகுப்பு

இந்த மாநாடு வெறும் பேச்சு வார்த்தை சமந்தப்பட்டது அல்ல. பிரச்சனைகளைத் தீர்க்கும் யுத்திகள், ஐபி பரிசீலனைகள் மற்றும் க்ரோத் ஹேக்கிங் போன்ற பல்வேறு வகையான பட்டறைகளில் இருந்து உங்களுக்கு பிடித்ததைத் தேர்வு செய்யலாம். உதாரணமாக, டெக் ஸ்பேஸிற்கு வரும்போது இந்தியாவில் வடிவமைப்பு பற்றாக்குறை உள்ளது என்று கூறப்படுகிறது அதனால் இங்கு நடைப்பெறும் UX மற்றும் பங்கேற்பு வடிவமைப்பு போன்ற பயிற்சி பட்டறைகள் உங்களுக்கு உதவும்.

2. அரசு பேச்சாளர்கள்

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் சீராக அமைவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது மாநில மந்திரிகளிடமிருந்து பிரதம மந்திரி வரை கிடைக்கும் தீவிர ஆதரவு. கர்நாடகா ஐ.டி அமைச்சகத்திலிருந்து NITI Aayog வரை பலர் பேச உள்ளனர். மேல் நிலையில் இருக்கும் இந்த அரசு அதிகாரிகளின் பேச்சை கேட்டு பயனடையுங்கள்.

3. நீங்கள் கலந்துரையாட பல பன்னாட்டு நிறுவனங்கள் குவிகின்றன

பல பன்னாட்டு நிறுவனங்கள் தான் தற்பொழுது தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். TechSparks 2017 மதிப்பு வாய்ந்த நுண்ணறிவு, தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அதுவும் இன்டெல், பேயர், சீமென்ஸ், SAP, மைக்ரோசாப்ட், ஆரக்கிள், GE, என்விடியா, போன்ற பல நிறுவனங்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது.

4. இந்திய தொழில் முனைவோர்களிடம் இருந்து கற்றுக்கொள்க

நிறுவன கலாச்சாரத்தில் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், பெரும் இந்திய நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்திய தொடக்கங்களை தீவிரமாக கையாலுகின்றனர். மேலும் அவர்கள் ஸ்டார்ட்-அப் தொழிலாளர்கள் படிப்படியாக முன்னேற சிறந்த பாடம் அளிக்கின்றனர். ரிலையன்ஸ், டாட்டா, future குரூப், மைண்ட்ட்ரீ, மற்றும் பிற பெருநிறுவன தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வந்து கேளுங்கள்.

5. உலகளாவிய இணைப்பு

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் பல உலகளாவிய நிறுவனங்களை தன் வசம் ஈர்த்துள்ளது. இதில் பெரும் தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், அரசாங்க முகவர் மற்றும் பிற தொழில் முனைவோர் அடங்கும். இந்த ஆண்டு நமது நாட்டின் பங்குதாரர் ஜெர்மன்தான், தொழில்துறை IOT, ஆட்டோமொபைல், ஏவியேஷன் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற துறைகளின் முன்னோடி. சிலிக்கான் வேலியிலிருந்து ஐரோப்பா வரை உள்ள புதிய எல்லைகளை உங்களுக்கு திறக்கிறார்களா என்று வந்து பாருங்கள்.

6. யூனிகார்ன்

இந்திய யூனிகார்ன்கள், உலகளாவிய ஊடகக் கண்ணோட்டத்தில் நம் நாட்டின் சந்தை மதிப்பை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளனர். Shopclues போன்ற இந்திய யூனிகார்ன்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

7. வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்

இந்திய ஸ்டார்ட்-அப் உலகில் தற்பொழுது முக்கிய இடத்தை பிடித்தவர்கள், வளர்ந்து வரும் நாயகர்களான BYJu, MoneyTap, Zoomcar, CureFit போன்ற உயர்நிலை தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சியையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் நிறுவனர்கள் சொல்லக் கேளுங்கள்.

8. எழுச்சியூட்டும் பல கதைகளைக் கேளுங்கள்

தொழில் முனைப்பு தொழில்நுட்பவாதிகளுக்கு மட்டும் அல்ல கலைஞர்களுக்கும் தான். சூசன் கான் மற்றும் திவ்யா தத்தா ஆகியோரின் அமர்வுகளைப் வந்து பாருங்கள்.

9. சிறந்த YS ஊடக குழுவை சந்தியுங்கள்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக யுவர்ஸ்டோரி பல ஸ்டார்ட்-அப், தொழில்முனைவோர், இந்தியாவின் சமூக ஆர்வலர்களின் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர அயராமல் உழைத்துள்ளது. 65000-க்கு மேலான பல எழுச்சியூட்டும் கதைகளை எழுதிய ஊடகக் குழுவை சந்தியுங்கள். உங்கள் எழுச்சியூட்டும் கதைகளை சொல்லுங்கள் yourstory அதை உலகிற்கு காட்டும்.

10. Tech30 காட்சி மற்றும் அறிக்கை

யுவர்ஸ்டோரி, பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒன்று திரட்டி முதல் நிலையில் இருக்கும் இந்தியாவின் முதல் 30 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் களை வரிசைபடுத்தியுள்ளது. மேலும் yourstory தனது வருடாந்திர The Tech30 Report’-ஐ வெளியிட உள்ளது. இதில் இ-காமர்ஸ், எடு-டெக் மற்றும் ஹெல்த் கேரின் விரிவான நுண்ணறிவு உள்ளது.

11. VC-க்களுடன் கலந்துரையாடல்

Techsparks 2017-ல் ஸ்டார்ட்-அப் நுண்ணறிவு தகவல்களை பற்றி பல இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்கள் பேச உள்ளனர். இந்த வருடம் Blume, Kalaari, Inventus, Prime, Stellaris, Aarin மற்றும் IdeaSpring ஆகியவை அடங்கும். அவர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திடம் எதிர்ப்பார்ப்பது என்ன? வியாபாரத்தை கைப்பற்ற எந்த நேரத்தில் அவர்களை அணுக வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

12. வழிகாட்டிகள் மற்றும் ஆலோசகர்களுடன் உரையாடல்

ஸ்டார்ட்-அப் நிறுவனர் மற்றும் முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், நீங்கள் தொழில் நிபுணர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் வியாபார ஆலோசகர்களுடன் தொடர்புகொள்ளலாம். ஸ்டார்ட்-அப் பயணம் நீண்ட மற்றும் கடினமான பயணமாகும், அதற்கு உங்களுக்கு நல்ல நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள், நிபுணர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் ஆதரவு தேவை. அது உங்களுக்கு Techsparks-ல் கிடைக்கும்.

13. உங்களை போன்ற மற்றவர்களை சந்தியுங்கள்!

உங்கள் ஸ்டார்ட்-அப் பற்றி நீங்கள் இன்னும் அறிந்து கொள்ள உதவுவது மற்ற ஸ்டார்ட்-அப்களே! உங்க சக தொழில்முனைவர்களோடு விவாதம் செய்து உங்கள் கருத்து மற்றும் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். இந்தியாவின் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்-அப் முன்னோடிகள் TechSparks 2017 இல் இருப்பார்கள்.

14. கண்காட்சியாளர்களை சந்தித்தல்

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கு கூடுதலாக, துவக்கத்திற்குத் தேவையான வடிவமைப்பு, மார்க்கெட்டிங் மற்றும் திறமை நிர்வாகத்திற்கு ஹோஸ்டிங் சேவைகள் தேவை. 50-க்கும் மேற்பட்ட தீர்வு வழங்குனர்களை சந்தித்து அவர்களிடம் பகிரும் கற்றல் அடைவைகளை கேளுங்கள். உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற தேவையான அனைத்தையும் இங்கே கற்றுக் கொள்ளுங்கள்.

15. சமீபத்திய போக்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

TechSparks ஆண்டின் மிக அதிகமாக வளர்ந்து வரும் டிரென்ட்களை கண்டறியும் இடம் ஆகும் – ஏன்? ஒரு புதிய டிரெண்டை நீங்களும் அங்கு உருவாக்கலாம். எந்த வகையான புதிய அறிவாற்றல் AI உருவாக்கும்? எந்த புதிய உலகத்தை IoT உண்மையில் நமக்கு திறந்து வைக்கிறது? போஸ்ட்-டிமானிடைசேஷன் இந்தியாவின் எதிர்காலம் பிட்காய்னா? இது போன்ற தற்போது போக்கில் இருக்கும் பல கேள்விகளுக்கு TechSparks-ல் விடை காணுங்கள்.

16. தெளிவான காட்சி

இந்திய சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுற்றது- தொழில்முனைப்பு நாட்டின் படைப்பு திறனை அடையும் விடுதலை முயற்சியா? ஸ்டார்ட்-அப் நிறுவனம் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்குமா? டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் தனியுரிமையின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன? இந்தியாவின் இளைஞர்கள் கூட்டம் ஸ்மார்ட்போன் அலையைச் சமாளித்து, கிராமப்புற மக்களின் வாழ்வை எப்படி மாற்றப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

17. பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் காத்திருக்கிறது

போட்டிகளைத் தாண்டி பல கேளிக்கையான விஷயங்களும் பார்வையாளர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

டெக்ஸ்பார்க்ஸ் பெங்களுருவில் செப்டம்பர் 23, 24 நடைபெறுகிறது. Techsparks 2017-இல் கிடைக்கவிருக்கும் உற்சாகத்தை தவற விடாதீர்கள்.  

உங்கள் டிக்கெட்டை பெற க்ளிக் செய்யுங்கள் TS17EXCLUSIVE100 என்ற கோடை பயன்படுத்தி 50 சதவீத தள்ளுபடியை பெறுங்கள்!