நண்பர்கள் தொடங்கிய 'டாயிட்' மது வடித்தல் மையத்தின் கதை! .

0

"பால் குழந்தைகளுக்கு! நீங்கள் வளர்ந்த பிறகு பீர் தான் குடிக்க வேண்டும்" - அர்னால்ட் ஸ்வாஷ்னேகர்

சிங்கப்பூரில் வசதியான ஒரு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனது சிறுவயது கனவான மதுவடித்தல் மையத்தை பெங்களூருவில் அமைத்து, வார இறுதியில் 2000 கோப்பை பீர்களை பரிமாறி வருகிறார்!

விதை விழுந்த கதை

2008 ஆம் ஆண்டு, சிபி வெங்கடராஜு மற்றும் அருண் ஜார்ஜ் தங்களது வேலையை முடித்துவிட்டு பீர் பருக சிங்கப்பூரில் இருந்த ஒரு மது வடித்தல் மையத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது ஹரியானா மாநிலத்தில், குர்கான் நகரில் உள்ள இந்தியாவின் முதல் மது வடித்து பரிமாறப்படும் பப் "ஹொவ்ஸ்சட்" குறித்து பேச்சு வந்தது. ஒரு உணவகம் தொடங்க வேண்டும் என்பது சிபி கொண்டிருந்த கனவு. எனவே நீ ஏன் பெங்களுருவில் அதை துவங்க கூடாது என அருண் கூறினார். இந்த சாதாரண உரையாடலே, இன்று "டாயிட்" (Toit) உருவாக காரணமாக அமைந்தது.

சிபி அருண் மற்றும் முகேஷ் தோலாணி மூவரும், பெங்களுருவில் பிரான்க் அந்தோணி பப்ளிக் பள்ளியில் படிக்கையில் இருந்து நண்பர்கள். சிபி தனது பட்டப்படிப்பை நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரில் இருந்து பெற்றார். அருண் மற்றும் முகேஷ் பெங்களுரு கிரைஸ்ட் பல்கலைகழகத்தில் பயின்றனர். பின்பு அருண் நான்யாங் டெக்னலாஜிகல் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பயில சிங்கப்பூர் சென்றபோது, அங்கு சிபியோடு இணைந்தார்.

நண்பர்கள் இருவரும் தொழில் முனையும் யோசனையை வைத்துக்கொண்டு பங்குதாரர் தேடியபடி இருக்க முகேஷ், அதற்கு முன்னரே ப்ரோகா கிராண்டே என்ற உணவகத்தை, "ஸ்வீட் சாரியட்" பாஸ்டரி சங்கிலி கடைகளின் கிலென் வில்லியம்ஸ்யோடு இணைந்தது வெற்றிகரமாக நடத்தி வந்தார். எனவே இவர்கள் யோசனையை முகேஷ், அறிந்து, அவரும் கிலெனும் அணியில் இணைய, டாயிட் உருவானது.

Toit Team
Toit Team

ஆரம்பம்

நண்பர்கள் நால்வரும், ஆரம்ப முதலீட்டை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெற்று 2010 ல் டாயிட்டை உருவாக்கினர். மேலும் நால்வரும் அவர்கள் நிறுவனம் ஒரு இயந்திரம் போன்று பழுதடையாது சீராக இயங்குவதை உறுதி செய்தனர். மேலும் மிக முக்கியமான எந்த முடிவாக இருந்தாலும், ஓட்டு மூலமே தீர்மானிக்கின்றனர். சிபி அங்காடி நடவடிக்கைகளை கவனிக்க, முகேஷ் நிதியைகையாள்கிறார். அருண் நிறுவனத்தின் விளம்பரங்களை கவனிக்க, கிலென் அவர்களின் சமையல் அறையை நிர்வாகிக்கின்றார்.

ஆனால் ஒருவர் விடுப்பு எடுத்து செல்ல மற்றொருவர் அவர் வேலைகளை செய்வதும் உண்டு. மேலும் நால்வரும் பீர் வடிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டனர். ஆனால் நிறுவனத்திற்காக தொழில் முறை பீர் வடிப்பவர் ஒருவர் உள்ளார்.

நண்பர்களோடு இணைந்து தொழில் முனைவது எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, அது நாம் இணையும் நண்பர்களை பொருத்தது மற்றும் அவரவர் குணம், நம்மை இணைக்கும் விஷயத்தை பொருத்தது. மற்றபடி எங்கள் நால்வர்க்கும் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருப்பதால், கடினமான தருணங்களும், எளிதாக கடந்துபோகும்.

வாடிக்கையாளர் மிகவும் விரும்புவது

அவர்கள் தயாரிப்புகளில் "டாயிட் வெய்ஸ்" என்ற பவேரியா பகுதிகளை சார்ந்த ஒரு பீர் வகையே வாடிக்கையாளர் மிகவும் விரும்பி பருகுவதாக நிறுவனர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த வகை மது தயாரிப்பு எளிதான காரியம் அல்ல. பவேரியா மக்கள் தயாரிப்பது போன்று அதே சுவை கொணர்வது எளிதல்ல என்கின்றனர். ஆனால் எங்களால் அதை சரியாக செய்வதற்கு முக்கியகாரணம் எங்களிடம் ஜெர்மானியர்கள் உபயோகிப்பது போன்று ஒரு மது வடித்தல் மையமும், இந்த பீர் வகைக்கென்றே பிரத்தியேகமாக பயன்படும் திறந்து கொதிக்க வைக்கும் இயந்திரமும் உள்ளது.

பாரம்பரியமாக, திறந்துள்ள கொதிக்க வைக்கும் இயந்திரம் காற்றில் உள்ள பாக்டிரியா நொதித்தலுக்கு உதவும் என்பதால் தான். அவை இன்றும் ஜெர்மனியில் உபயோகத்தில் உள்ளன. மேலும் காற்றில் உள்ள பாக்டீரியாக்களை மட்டும் நம்பாமல் ஈஸ்ட்டும் நொதித்தலுக்காக அந்த தொட்டியில் சேர்க்கப்படுகிறது.

புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ள பெங்களுருவின் இரவு வாழ்க்கைக்கு ஈடு கொடுக்குமா டாயிட் ?

தற்போது பெங்களுருவில் 12 சிறுஅளவில் மதுவடித்தல் மையங்கள் உள்ளன. தற்போது இந்த சந்தை வளர்ந்துவரும் சந்தை என்றும், மற்ற நிறுவனங்கள் வளர்ந்து வருவது சந்தை வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று டாயிட் நிறுவனர்கள் கருதுகின்றனர். மேலும் மற்ற சில மதுவடித்தல் மையங்களோடு நல்ல நட்புறவில் தற்போது இருப்பதாகவும், விரைவில் அவர்களோடு இணைந்து செயல்பட உள்ளதாக கூறுகின்றனர்.

தற்போது வாரஇறுதி நாட்களில், இரவு வாழ்க்கை நீண்டிருப்பது தொழிலிற்கு நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால் வார நாட்களில், அடுத்த நாள் வேலைக்கு செல்ல வாடிக்கையாளர் விரைவாக சென்றுவிடுவதால், நீண்டநேரம் கடை திறந்து வைப்பது கடினமான ஒன்று என்றும் கூறுகின்றனர்.

எதிர்கால திட்டம்

தற்போது டாயிட் நிறுவனர்கள் தங்கள் வெற்றிக்கு காரணமாக கூறுவது, தங்களுக்கு உதவிகரமாக உள்ள வேலையாட்கள் மற்றும் தங்களின் விசுவாசமான வாடிக்கயாளர்களைத்தான். அவர்களின் வாடிக்கையாளர்களுக்கென தனியே ஒரு மன்றமும் துவங்கியுள்ளனர். அதன் பெயர் "குடிக்ஸ் கிளப்" (kudix club).

மேலும் இதை துவங்கியதில் இருந்து, சோமேடோ மற்றும் பர்ப் ஆகிய உணவு தொடர்பான செயலிகளில் இவர்களுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

மேலும் ஆரம்பித்ததில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களிடம் கேட்கும் கேள்வியாக "இப்போது தயாரிக்க பட்டதா??" என்ற கேள்வியை சிபி நினைவு கூறுகிறார் (பீர் உருவாக்க குறைந்த பட்சம் 4 வாரங்கள் ஆகும்) தற்போது தங்கள் கிளைகளை புனே மற்றும் மும்பையில் துவங்க யோசனைகளில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ஆக்கம் : மனு ஸ்ரீவத்சவா |தமிழில் : கெளதம் தவமணி