தலைமைப் பொறுப்பில் பெண்கள்; அனுபவம் பகிரும் நந்தினி!

1

குளோபல் லாஜிக் (Global Logic) என்ற நிறுவனத்தில், எஞ்சினீரிங் & டெலிவரி பிரிவு துணைத்தலைவராக ஏ.நந்தினி ஜூன் 2007 ல் பொறுப்பேற்றார். எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சியில், பெரும் பங்கு வகித்துள்ளார். மூன்று திட்டங்கள் மற்றும் ஐம்பது பணியாளர்கள் என்ற நிலையிலிருந்து தற்போது நொய்டா பிரிவில் ஆயிரத்து அரநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நிர்வகிக்கிறார்.

யுவர் ஸ்டோரி, நந்தினியிடம் அவரது வெற்றிப்பயணம், சந்தித்த சவால்கள், அவர் கற்ற படிப்பினைகள் பற்றி உரையாடியது. இதோ அந்த உரையாடலின் சில துளிகள்..

வளர்ச்சிப் பாதை

தமிழராக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் தில்லியில். "என்னுடைய வாழ்கையின் மிகச் சிறந்த தருணங்கள் தில்லி பல்கலைகழகத்தில் அமைந்தது". கணிதத்தில் (ஹானர்ஸ்) பட்டப்படிப்பும், கணினியில் முதுகலை பட்டமும் (MCA ) பெற்ற அவர், பல்கலைகழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். பெரிய நிறுவனத்தில் பணி அமர்ந்தது அவருக்கு கற்றதலுக்கான தளமாகவும், செயல்முறைகளை கடைபிடிக்கவும், பெரிய குழுவுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்தையும் தந்தது.

ஐந்து வருடத்திற்கு பிறகு தொலைதொடர்பு துறையில் செல்ல நினைத்தார். "தொலைதொடர்பு துறையை பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன்". இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அந்த துறை தனக்கானதல்ல என்று உணர்ந்தார். வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொள்ள சிறிய நிறுவனமான "இன்டெர்ரா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜீஸ் (Interra Information Technologies) என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். "நிறுவனத்தின் ஐம்பதாவது ஊழியராக சேர்ந்தேன். அப்பொழுது அங்கு சப்போர்ட் துறையோ, மனித வள மேம்பாட்டுக்கான கொள்கையோ இல்லை. எல்லாவற்றையும் முறையாக வகுக்க நினைத்தோம். இந்த பணியை மேற்கொண்டது பெரிய அனுபவமாக இருந்தது. டாடா யுனிசெஸ் (TATA Unisys) இல் பணி புரிந்த அனுபவம் இதற்கு உதவியது. தொழில்நுட்பம் மற்றும் விநியோகம் மட்டும் அல்லாது எனது நிர்வாக திறன்களை மேன்படுத்தி கொள்ள இது உதவியது. சிஎம்எம் லெவல் 5 (CMM Level 5) சான்றிதழ்கான முயற்சிக்கு தலைமை வகித்தேன்."

குளோபல் லாஜிக்

"நொய்டா பிரிவின் தலைமை பொறுப்பு மற்றும் விநியோக தலைமைப் பொறுப்பும் வகிக்கிறேன். ஆதலால் இந்த பிரிவின் அனைத்து வளர்ச்சிக்கும் பொறுப்பாகிறேன். விநியோக தலைமையாளராக நாங்கள் செய்யும் அத்தனை வேலைகளும் தரமானதாகவும், வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதமாகவும் அமைத்துக் கொடுப்பது எனது கடமை. ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு வருடமும் புதுமையை புகுத்த பாடுபடுகிறோம்".

குளோபல் லாஜிக்கில் அவரது அனுபவங்கள் சந்தோஷமான தருணங்களாக இருந்தது தெளிவாக தெரிகிறது. "இந்த எட்டு வருடங்கள் மிக நிறைவாக இருந்தது. நிறுவனத்தின் வளர்ச்சியுடன் எனது வளர்ச்சியும் கண்கூடாக பார்த்தேன். ஒரே இடத்தில் அனைத்து வகையான கலாச்சாரத்தை பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிக அரிதானது. உக்ரைன், அர்ஜண்டீனா மற்றும் ஸ்லோவாகியா பற்றி அறிய வேறெங்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. மனிதர்களை புரிந்து கொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள்ள இது நல்ல வாய்ப்பு. உலகமயமாக்கல் பற்றி எல்லோரும் பேசுகிறோம், நாங்கள் அதை முற்றிலுமாக எங்களின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகள் மூலம் கடைபிடிக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்."

பிக் டேட்டா (Big Data), loT மற்றும் கலௌட் (cloud ) ஆகியவற்றை வழங்குகிறது குளோபல் லாஜிக் நிறுவனம். தீர்வுகள் என்பது எல்லா துறைகளுக்கானதாக இருக்க வேண்டும். அதுவே எங்களின் மதிப்பு கூட்டல் சேவையாகும். நந்தினியை பொறுத்த வரை இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சார்ந்தவை ஆகும். அதுவே பல சமயங்களில் தனிப்பட்ட தீர்வுகளை செயல் வடிவம் கொடுக்க ஏதுவாக அமைகிறது. எது எப்படியிருந்தாலும் அவரின் கவனம் புதிய தீர்வை நோக்கியே உள்ளது.

தொழில்நுட்பத்தின் போக்கு

"நிதர்ச்சனத்துக்கும் மெய்நிகருக்குமான கோடு மிக மெல்லியதாக ஆனதாகவே நான் பார்க்கிறேன்."

வலையூட்டம் நம் வாழ்கையை எவ்வாறு மாற்றி விட்டது என்று பகிரும் அவர், ஸ்மார்ட் தொழில்நுட்பம் மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் என்கிறார். பிக் டேட்டா மற்றும் பகுப்பாய்வு சூழ்நிலை, புலனாய்வு கொண்டு நாம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது என்கிறார்.

எதிர்கொண்ட சவால்கள்

"ஆரம்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அவை பெரும் சவால்களாகவே அமைந்தது, ஆனால் அதுவே கற்பித்தல்களுக்கும் வழி வகுத்தது. எனது அணிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன், நம் திறமையின் அளவுகோளே அவர்கள் தான்."

குளோபல் லாஜிக்கின் தலைமை அதிகாரி ஷஷான்க் சமன்த் தனக்கு பக்கபலமாக இருந்ததாக கூறுகிறார்.

"ஷஷான்க் எனக்கு மிகப் பெரிய பலம். பிரச்சனைகளின் விளிம்பில் இருந்த பொழுதெல்லாம் அவரது வழிகாட்டுதல் இருந்தது. அவரின் ஊக்கம் எனது பயணத்தை வெகுவாக்கியது."

பாலின வேற்றுமை

நந்தினியை பொறுத்த வரை அப்படி ஒன்று இல்லவே இல்லை. "தங்களது நோக்கை அடைய தவிர்க்கும் கருவியாகவே பெண்கள் இதை மேற்கொள்கின்றனர்." பெரிய பின்புலமோ, வழிகாட்டுதல் இல்லாமல் வெற்றிப் பாதையை அமைத்துக் கொள்ளும் பெண்களை பாராட்டுகிறார்.

அவரது நிறுவனத்தில் நிறைய பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதாய் சொல்கிறார். பெரிய பிரிவின் பொறுப்பில் இருக்கும் அவருக்கு, அதிக பெண்களை பணி அமர்த்தவும், தலைமை பொறுப்பிற்கு பெண்களை பரிந்துரைக்கவும் அவரது தலைமை அதிகாரி கூறுவதாக சொல்கிறார்.

"பெண்களுக்கு ஏதுவான பணியிடமாக குளோபல் லாஜிக் விளங்குகிறது. குழந்தைகள் காப்பிடம் அமைத்துள்ளோம். தனக்கான பணியை குறித்த நேரத்திற்கு முடிக்கும் பட்சத்தில், பெண்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் கொடுக்கிறோம். குறிப்பிட்ட ஏதாவது பிரிவில் பெண் பணியாளர்கள் குறைந்த அளவில் இருப்பதாக அறிந்தால், அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். "

தனது தோழி தொடங்கியுள்ள "வைஸ்" WISE (Women inspired to shine and excel ) என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

ஈடுகொடுத்தல்

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாதது குறித்து வருத்தப்படுகிறார். அதோடு நின்று விடாமல் அதை சரி செய்யும் விதமாக அமைத்து கொள்ளுதல் அவசியம் என்கிறார். பணியில் வெற்றியுடன் செயல்பட ஒரு சூப்பர் பெண்ணாக இருத்தல் அவசியமில்லை. "வார இறுதியில் குழந்தைகளுடன் செலவழிக்கிறேன். அவர்களுக்காக சமைப்பேன். அலுவலகம் செல்ல இரண்டு மணி நேர பயணம் என்பதால், அது மிகவும் அயர்ச்சியானது என்பதாலும், அந்த சமயத்தை முறையாக பயன்படுத்த வண்டி ஓட்டுனரை அமர்த்தியுள்ளேன்."

படிப்பினைகள்

"வேலை அமைந்து விட்டதாலே நாம் மேம்போக்காக இருக்கக்கூடாது. கற்றல் என்பது இடைவிடாது மேற்கொள்ளவேண்டும். நாம் என்றுமே நமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். "

கடின உழைப்பே என்றும் நிலையானது. வெற்றியை அடைய வேறெந்த குறுக்கு வழிகளும் இல்லை. இன்றைய தலைமுறை ஏனோ இதை புரிந்து கொள்ளாமல், உடனடி தீர்வையும் வெற்றியையும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

நிறைவாக அவர் கூறுகையில் "குளோபல் லாஜிக் மிகப் பெரிய வருங்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. இன்றைய நிலையை விட குறுகிய காலகட்டத்தில் எங்கள் வளர்ச்சியை இருமடங்காக உயர்த்துவதே எங்கள் குறிக்கோள்."