ரூ.11 லட்சத்தில் துவங்கி ரூ.1122 கோடி மதிப்பு நிறுவனத்தை உருவாக்கிய தொழில் முனைவர்! 

0

பிரமோத் ராவ் நிறுவிய மும்பையைச்சேர்ந்த 'ஜைகாம் எலக்ட்ரானிக் சிஸ்டம்' (Zicom electronic system), ஏடிஎம் கண்காணிப்பு சேவைகள் உள்ளிட்ட பாதுகாப்பு செயலிகளை உருவாக்கி வருகிறது.

1980 களில் ஃபேக்ஸ் இயந்திரங்கள் வர்த்தக செயல்பாட்டை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தன. இந்த தொழில்நுட்பம் நீண்ட காலமாக இருந்தாலும், இந்த கால கட்டத்தில் தான் விலை குறைந்ததால், வர்த்தக உலகில் பரவலாக பயன்படத் துவங்கியது.

பிரமோத் ராவ்
பிரமோத் ராவ்

இந்த கருத்தாக்கத்தால் கவரப்பட்டு, ஃபேக்ஸ் இயந்திரங்களை விற்பனை செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பிரமோத் ராவ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் நிறுவனம் ஒன்றை துவக்க தீர்மானித்தனர். 

“இருவரும் தலா ரூ.2,500 போட்டு, ஜெயந்தி பிஸ்னஸ் மெஷின்சை துவக்கினோம். நிறுவனம் சிறப்பாக செயல்பட்டாலும், எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டு 1994ல் பிரிந்தோம். இதன் காரணமாக, வெளியே நிலுவையில் இருந்த என் தனிப்பட்ட பங்கு தவிர வேறு எதுவும் இல்லாமல் வர்த்தகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது,” என்கிறார் ப்ரமோத் ராவ்.

பின்னணி

பிரமோத்திடம் தொழில்முனைவு ஆர்வம் இருந்ததால் தொழில் துவங்குவது இயல்பாக இருந்தது. கல்வியில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை. அவரது அம்மா, பாபா அணு ஆய்வு மையத்திலும், அப்பா நேவல் டாக்யார்ட்சிலும் பணியாற்றினர். 

“எனக்கோ முதுகலை படிப்பிற்கு பின் என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்கிறார் பிரமோத்.

மும்பையில் ஓராண்டு காலம் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றியவர் பின்னர் விஜயா பிளக்சிபில் எனும் பேக்கேஜிங் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் தொழில்முனைவில் கால் ஊன்றினார்.

ஜெயந்தி பிஸ்னஸ் மெஷின்ஸ் நிறுவனத்திற்கு பிறகு, அவர் புதிதாக மீண்டும் தொழில் துவங்க தீர்மானித்தார். கையில் இருந்த ரூ.11 லட்சம் சேமிப்பை திரட்டி மும்பை பந்த்ராவில் 100 சதுர அடி அலுவலக இடத்தை வாங்கி ’ஜைகாம் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி சிஸ்டம்’ நிறுவனத்தை துவக்கினார். அப்போது பிரபலமாக இருந்த மோடம் மற்றும் பேஜர்களை நிறுவனம் விற்றது.

மின்னணு பாதுகாப்பு சாதனங்கள்

இன்று இந்நிறுவனம், மோடம், பேஜர்களை கடந்து, மின்னணு பாதுகாப்பு அமைப்புகளில் வலுவான கவனம் செலுத்தும் ரூ.1,122 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

1990 களின் இறுதியில் பேஜர் வர்த்தகம் தேங்கிய போது மொபைல் போன்கள் பிரபலமாயின. அப்போது தான், நேவல் டாக்யார்டில் சரக்கு கப்பலில் பணியாற்றிக் கொண்ட்ரிருந்த பிரமோத்தின் தந்தை மங்களூரு வினாயக் ராவ், தனக்கிருந்த கண்காணிப்பு காமிராக்கள் பரீட்சயத்தை கொண்டு புதிய சாதனங்களில் கவனம் செலுத்துமாறு கூறினார். இதனையடுத்து நிறுவனம் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் செலுத்தியது. பிரமோத்தின் தந்தை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகனுடன் தொழில்நுட்ப இயக்குனராக இணைந்தார்.

“நாங்கள் பயணத்தை துவங்கிய போது, இந்திய சந்தை மின்னணு பாதுகாப்பு கருத்தாக்கம் அல்லது சாதனத்திற்கு தயாராக இலை. முதல் பாதுகாப்பு அமைப்பை விற்க ஆறு மாத காலம் தேவைப்பட்டது,” என்கிறார் பிரமோத்.

அவர் அமெரிக்கா சென்று, அங்கு பாதுகாப்பு அமைப்புகளை விற்ற முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பினார்.

“மும்பை டி.என்.சாலையில் இருந்த ஏஎன்.இசட் கிர்ன்லேஸ் வங்கி தான் முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்தது. நிறுவனம் பரிசீலித்த தொகையை விட எங்கள் மேற்கோள் தொகை ரூ.60 லட்சம் குறைவாக இருந்தது. இருப்பினும் எங்களுக்கு வர்த்தகம் அளிக்க தயங்கினர். எங்கள் நம்பகத்தன்மையை சோதிக்க மற்றும் ஒப்பந்த நிறுவனம் பற்றி அறிய வங்கி ஊழியர் ஒருவர் அமெரிக்கா சென்று வந்தார்,” என்கிறார் பிரமோத்.

வர்த்தக வளர்ச்சி

2000-ல் மோட்டரோலா நிறுவனத்தை சந்திக்க பிரமோத் சிங்கப்பூர் சென்ற போது வர்த்தகம் வளர்ச்சி அடைந்தது. இந்த சந்திப்பில் அவர் ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அதை இந்தியா கொண்டுவர தீர்மானித்தார்.

“இந்த தொழில்நுட்பத்தை ஜைகாம் பொருட்களில் பயன்படுத்துவதன் மூலம், சந்தையில் இருந்து வெற்றிகரமான ரூ. 22 கோடி திரட்டினோம்,” என்கிறார் பிரமோத்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு அமைப்புகளுக்கான தேவை பெருகியது. இப்போது பாதுகாப்பை ஒரு சேவையாக வழங்கும் வர்த்தகம் மூலம், நிறுவனம் ரூ.50 கோடி வருவாய் பெறுகிறது.

இன்று ஜைகாம் சாதனங்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு பிரிவுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப சாதனங்கள் பிரிவில் 10 முதல் 15 சதவீத லாபம் மற்றும் சேவை பிரிவில் 40 முதல் 60 சதவீத லாபம் அமைகிறது. .

மைய வர்த்தகம்

பாதுகாப்பு அமைப்பை ஒரு சேவையாக வழங்குவதில் இருந்து 2013 ல் ஐஒ.டி பிரிவில் நிறுவனம் ஈடுபடத்துவங்கியது. நிறுவனம் ஏடிஎம் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜிமன் எனும் செயலியை அறிமுகம் செய்தது. மைகேட் ஆப் போல இந்த செயலி, ஆதார் எண் மூலம் பாதுகாவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் நம்பகத்தன்மையை சரி பார்த்து சொல்கிறது. இவைத்தவிர, பிற சேவை மற்றும் செயலிகளை வழங்கி வருகிறது.

7,000 க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம்களை நிறுவன குழு கண்காணிக்கிறது. இரு வழி தகவல் தொடர்பு மற்றும் சென்சார்கள் மூலம் பாதுகாப்பு பணியாளர்களை இதை செய்கின்றனர்.

பாதுகாப்பு அமைப்பை சேவையாக வழங்கும் வர்த்தகம் மூலம் நிறுவனத்திற்கு ரூ.50 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த மேடையை விரிவாக்க தனியார் சமபங்கு நிதி திரட்டி, அடுத்த சில ஆண்டுகளில் இந்த பிரிவு வர்த்தகததை ரூ.200 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐஐஎப்.எல், குழுமம் ஜைகாம் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை கோரிய போது, 24 மணி நேர டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புக்கு மாற விரும்பியது. ஜைகாமுடன் இணைந்து, ஐ.ஐ.எப்.எல் நெட்வொர்க்கில் உள்ள கிளைகளில் அமைந்திருக்கும் அமைப்புகளை மேற்பார்வை செய்ய முடிகிறது என்கிறார் குழுமத்தின் நிர்வாக அதிகாரியான எஸ்.வேணு.

எதிர்காலம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மின்னணு பாதுகாப்பு சேவை அமைப்புகள் 25 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18 சதவீத வளர்ச்சி அடையும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 2020 ல் இந்த சந்தை ரூ.18,000 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரப்பில், நியான் இசட் இந்தியா, செக்யூரன்ஸ், சைக்னோவெட் மற்றும் சிபி பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியாளராக உள்ளன.

ஜைகாம் வழங்கும் சாதனங்கள் ரூ.6,500 முதல் ரூ.80,000 வரை இருக்கின்றன.

“எங்கள் ஆண்டு விற்றுமுதல் ரூ.450 கோடியாக இருக்கிறது. மூன்று நாடுகள் மற்றும் 1,100 நகரங்களில் செயல்பட்டு வருகிறோம்,” என்கிறார் பிரமோத்.

அடுத்த சில ஆண்டுகளில் சேவை பிரிவு வர்த்தகம் ரூ.2,00 கோடியை தொடும் என நிறுவன குழு நம்புகிறது. 2022 ல் ஐ.ஒ.டி பாதுகாப்பு வர்த்தக பிரிவில் சந்தை 1 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், இதில் 20 சதவீதத்தை அடைய விரும்புவதாகவும் கூறுகிறார்.

“ஐஒடி சேவை விரிவாக்கம் மூலம், ஜைகாம் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் வர்த்தகத்தை ரூ.800 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக,” பிரமோத் கூறுகிறார்.

மொபைல் செயலிகள், ஐ.ஒ.டி மற்றும் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் பலவகை பாதுகாப்பு சேவை வழங்கும் நான்கு மேடைகளை துணை நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“வாகன மற்றும் பயணிகள் பாதுகாப்பு தீர்வான ஸ்டிரீட் ஸ்மார்ட் சேவையை அண்மையில் அறிமுகம் செய்துள்ளோம். ஆட்டொமொபைல் துறையில் விரிவாக்கம் செய்வதற்கான முதல் படி இது. அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்டீரிட் ஸ்மார்ட் மூலம், ஐ.ஓடி மேடையை பயன்படுத்தி வாகன மற்றும் பயணிகள் பாதுகாப்பு பிரிவில் 20 முதல் 30 சதவீத சந்தையை அடைய திட்டமிட்டிருப்பதாக’ பிரமோத கூறுகிறார்.

இணையதளம்: http://zicom.com/

ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL