கனரக தொழிற்சாலைகளை நஷ்டத்தில் இருந்து காக்க உதவும் ஐஐடி சென்னை குழு உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனம்!

0

இந்தியாவிலுள்ள இளம் தொழில்முனைவோர்கள் இ-காமர்ஸ், உணவுத்தொழில்நுட்பம், ஹைப்பர்லோக்கல் என ஒரே மாதிரியான துறைகளில் மட்டுமே விருப்பம் காட்டுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல.

ஐஐடி சென்னையில் சமீபத்தில் பட்டம் பெற்ற இந்த இளம் பொறியாளர் குழு ஒரு முக்கியத் துறையில் கவனம் செலுத்துகிறது. ’டிடெக்ட் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ இருபத்தி இரண்டு வயதான டேனியல் ராஜ். 40 ஹார்ட்கோர் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் ஒன்றிணைந்து கனரக தொழிற்சாலைகள் குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குகின்றனர்.

அவர்களது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence AI) மற்றும் மிஷின் லேர்னிங் ஸ்டார்ட் அப் ட்ரோன்-ஆஸ்-ஏ-செர்வீஸ் (drone-as-a-service) நிறுவனம். உற்பத்தி தொழிற்சாலைகள் சொத்து ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது. இதனால் பணிநிறுத்தம் வாயிலாக ஏற்படும் கிட்டத்தட்ட 6 -9 கோடி ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்படும்.

ஐஐடி சென்னையில் துவங்கப்பட்ட இந்த குழுவினர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஐந்து வருடங்கள் செலவிட்டு இரண்டு தயாரிப்புகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். முதலில் சென்சார் (பேடண்ட் தொழில்நுட்பத்துடன் கூடியது). இது எண்ணெய் மற்றும் எரிவாயு பைப்லைனில் ஏதேனும் லீக்கேஜ் இருந்தால் கண்டறியும். அடுத்தது இண்டஸ்ட்ரியல் ட்ரோன் (ப்ரொப்ரைட்டரி அல்காரிதம்களைக் கொண்டது). அதிக கொள்ளளவு கொண்ட பாயிலர் மற்றும் ஸ்டேக்குகளை ஆய்வு செய்து மதிப்பிடக்கூடியது. இவை அன்றே அறிக்கையை உருவாக்கும் திறன் கொண்டது.

இக்குழுவினர் ஐஐடி சென்னையிடமிருந்து சீட் நிதியை உயர்த்தியுள்ளனர். விரைவில் ப்ரீ-சீரிஸ் A சுற்றை முடிக்கும் தருவாயில் உள்ளனர்.

”எங்களது ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவாயை ஈட்டி வருகிறோம்.” என்றார் டேனியல். சாத்தியக்கூறுகள் நிறைந்த க்ளையண்டுகளை அணுகிய அனுபவம் சவால் நிறைந்ததாக இருந்தது என்றார். “சற்றே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே தாடி வளர்க்கவேண்டியிருந்தது,” என்றார் புன்னகைத்தவாறே.

எனினும் இந்தக் குழுவினர் வெற்றிகரமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கையொப்பமிட்டுள்ளனர். அதன் பிறகு துறையில் இருக்கும் மற்றவர்களை அணுகுவது எளிதாக இருந்தது.

துறையிலிருக்கும் வழிகாட்டிகளை அணுகுவதும் கடினமாக உள்ளது என்றும் இருப்பினும் துறையில் இருக்கும் சிலருடன் இணைவதற்கு ’ஆக்ஸிலர்’ உதவியது என்றும் குறிப்பிட்டார் டேனியல்..

இந்திய சந்தையில் செயல்படுவதுடன் இக்குழுவினர் சர்வதேச அளவில் செயல்படவும் விரும்புகின்றனர். “இந்தியாவைக் காட்டிலும் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சந்தையின் அளவு மிகப்பெரியதாகும்.” என்றார் டேனியல். சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு டேனியல்,

 “தொழில்முனைவோராக வாழ்க்கையின் உண்மைகளை மெதுவாக உணர்ந்து வருகிறோம். ஆய்வகத்திலிருக்கும் வாழ்க்கையைக் காட்டிலும் நிஜ உலகு வெகு தொலைவில் உள்ளது,”என்கிறார்.

குழுவின் உற்சாகம் மற்றும் அதிக ஆற்றலைக் கொண்டு சிறப்பாக முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த இளம் தொழில்முனைவோர்.

தனது ப்ராடக்ட் மற்றும் பேடண்டட் தொழில்நுட்பம் மூலமாக அவர்கள் வழங்கும் தீர்வு ஆகியவற்றைக் குறித்து டேனியல் பேசும் வீடியோ இதோ :

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்