அடுத்த பில்லியன்: புதிய கைபேசி பயனாளர்களை வாடிக்கையாளர்கள் ஆக அடைய உதவும் MobileSparks 2017 

0

முதல் முதலில் 2007-ல் ஐபோனை அறிமுகப் படுத்தியப்போது இவ்வளவு பிரபலமாகும் என எவரும் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். 2007-ல் 122 பில்லியன் ஸ்மார்ட்போன் மற்றும் 270 மில்லியன் கணினிகள் விற்றனர்.

பத்து வருடம் கழித்து இன்று அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது - 2.3பில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 3.8 பில்லியன் மக்கள் ஆன்லைனில் உள்ளனர். ஆனால் கணினிகள் மட்டும் 270 மில்லியனில் நின்று விட்டது. நமக்கு தெரிந்து ஆப்பிள் மற்றும் கூகுள் உலகையே மாற்றி விட்டது. ஸ்மார்ட்போன் ஒரு சாதனமாக மட்டும் அல்லாமல் நமக்கே போட்டியாக கொண்டுவந்துள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் நமக்கு பல அதிகாரங்களை அளித்துள்ளது. நம் உள்ளங்கையில் பல தகவல்களின் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இவையே அதிக செல்பி, மீம்ஸ், உருவாக காரணமாய் உள்ளது, மேலும் இதுவே நம் தனியுரிமை மற்றும் அந்தரங்கத்தை கொல்கிறது.

இணையத்தை பயன்படுத்த உதவும் மிகப் பெரிய ஒரு முக்கிய சாதனமாக ஸ்மார்ட்போன் உள்ளது. வளர்ந்து வரும் நாட்டில் ஒரு பில்லியன் மேலான மக்கள் ஆன்லைனில் இணைய முக்கியக் காரணம் இந்த ஸ்மார்ட்போன்.

முகநூல், உபர், டென்சென்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிகாரம் பெற்று வளர்ந்தது ஸ்மார்ட்போனால் தான். இணையத்தை பயன்படுத்த பெரும்பாலான மக்கள் முதலில் எடுப்பது கை பேசிகளை தான்; இதனாலே கணினி மீதும் மடிக்கணினி மீதும் நம் பார்வை திரும்புவதில்லை.

இவை எல்லாமே ஸ்மார்ட்போனின் தொடக்கம் மட்டுமே, இன்னும் பல மக்கள் ஆன்லைனிற்கு வரவில்லை. ஆன்லைனிற்கு வரும் அடுத்த பில்லியன் மக்களின் பொருளாதார ஆற்றல் உண்மையானது தான், ஆனால் அவர்களின் தேவை விருப்பத்தேர்வு மற்றும் மொபைல் இணைப்புகளின் எதிர்பார்ப்புகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த புதிய பில்லயன் மக்கள் ஏற்கனவே இருக்கும் பில்லியன் மக்களை விட மாறு பட்டவர்கள்.

“தேவை இடைவெளியை நிரப்புவதற்கு எங்கள் தயாரிப்பில் புதுமை வேண்டும்,” என்கிறார் மேட்ரிக்ஸ் பார்ட்னர் சஞ்சோத் மாலி.

இந்தியாவில் இந்த இடைவெளியை நிரப்பும் தொழில்முனைவர்கள், ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்நுட்பவர்களை நாம் கண்டுக்கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த தளம் நம்முடைய தனித்துவமான MobileSparks மாநாடு.

MobileSparks தான் கைபேசிகளுக்கான அனைத்தும் உள்ள இந்தியாவின் பிரதான விழா ஆகும். கடந்த ஐந்து வருடமாக கண்டுபிடிப்பாளர்கள், தொடக்க நிறுவனர்கள், மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்று சேர்த்து பல மாற்றங்களை MobileSparks கொண்டு வந்துள்ளது.

MobileSparks 2017, ஆறாம் பதிப்பு, புது பில்லியன்களை மையமாகக் கொண்டுள்ளது. மொபைல் சூழலில் இருக்கும் அனைத்து முன்னணி தலைவர்களையும் ஒன்று சேர்த்து கலந்துரையாடி, விவாதித்து, ஆராய்ந்து, பல கேள்விகளுக்கு இந்த தளத்தில் பதில் காணலாம்.

இதை இன்னும் சுவாரசியம் ஆக்க இந்தியாவில் திகழும் கைபேசி சூழலை பற்றி பேச முன்னணி பேச்சாளர்களை இணைத்துள்ளோம்.

தொழில் முனைவோர் சமூகத்தில் இருந்து, குணால் ஷா, Freecharge நிறுவனர்; லிசி சாப்மேன் - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, ஜெஸ்ட் மணி; அரவிந்த் பானி - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, Reverie டெக்னாலஜிஸ்; ஜானதன் பில் - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி கிரெடிட் மேட் கலந்து கொள்ள உள்ளனர்.

தொழில்நுட்ப சூழலில் இருந்து, பிரமோத் ஜாஜூ – சிடிஒ, BigBasket.com; அருண் பாபு, மூத்த Android பொறியாளர், உபர்.

மேலும் தொழில் வல்லுனர்கள், தொழில் முனைவோர், டெவலப்பர்கள் மற்றும் மொபைல் வல்லுனர்கள் விவாதம் செய்து புதிய பில்லியன் பயனாளர்களின் கீழே குறிப்பிட்டவைக்கு தீர்வுகளை காண்பார்கள்.

• வீடியோ அல்லது புகைப்பட உள்ளடக்கம் (எழுத்து அல்ல)

• குரல் செயலாக்கத்தைப் பயன்படுத்தவும், படங்கள் / வீடியோவைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளவும்

• சிறந்த புத்திசாலியான புதிய தொலைபேசி வசதியைத் தயார் செய்ய உள்ளனர்

• இந்திய மொழி இணையம் மற்றும் உயர்ந்த உள்ளூர் நுகர்வு ஆகியவற்றின் பின்னணியில் அளவிடப்படுகிறது

• ஆப்லைனில் வேலை செய்யும் ஆப்

ஒரு சந்தையாக, பல்வேறு மாறுபட்ட, வளர்ந்து வரும் பொருளாதாரம் குறிப்பிட்ட பிரச்சினைகள் பூர்த்தி செய்யும் தீர்வுகளை இந்தியாவால் காண முடியும். கைபேசி சுற்றி உள்ள அனைத்து கேள்விகளுக்கும் முதுகெலும்பாக இருக்கும் இந்தியாவின் மொபைல் தொழில்முனைவோர் பதிலளிக்க தயாராக உள்ளனர்.

MobileSparks-ல் நீங்கள் உங்கள் தயாரிப்பை காட்சிப் படுத்த விரும்பினால், இங்கு தொடர்பு கொள்ளவும். ஸ்பான்சராக இருக்க விரும்பினால் ezhilan@yourstory.com and neha@yourstory.com தொடர்புக்கொள்ளவும். 

[MobileSparks 2017: December 16, 2017 | ITC Gardenia | Bengaluru | Book your slot today]