டீக்கடை முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை பசுமை புரட்சியை ஏற்படுத்தும் 'ஈகோவேர்'

0

ஆரோக்கியமான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தலைப்புகளிலான விவாதங்கள் இணையதளத்திலும், நேரிலும் நடந்து கொண்டிருக்கிறது. 

நாம் நல்ல, தீய உணவு பழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி விவாதித்து கொண்டிருந்தாலும், நாம் மறந்து விடும் விஷயம் அவற்றை பார்சல் செய்யும் விதம். என்னைப் பொருத்த வரையில் ஒரு ஆரோக்கியமான உணவின் அனைத்து அம்சங்களும், அவை சுத்தமான முறையில் பரிமாறப்படவில்லை என்றால் தொலைந்து போய்விடும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினாலோ அல்லது அதில் ரசாயன கலப்புகள் இருந்தாலோ அவற்றை உட்கொள்ளும் மனிதனுக்கு தீங்காகிவிடும் என்கிறார் ரியா சிங்ஹால்.

ரியா சிங்கால், "ஈகோவேர் சொல்யூஷனின்" (Ecoware) நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர், இந்நிறுவனம் 2009ல் அவருடைய 27 வயதில் தொடங்கப்பட்டது.

அவரை ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு எது உந்தியது என்பது பற்றி பேசிய ரியா, பிளாஸ்டிக்கின் சுமையை குறைக்க வேண்டிய தேவை இருக்கிறது, அதே சமயம் பாதுகாப்பான, மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களைக் கொண்டு ஆராக்கியமான முறையில் உணவை பொட்டளம் செய்ய வேண்டும். பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சிக்குப் பிறகு அனைத்து உணவு வகைகளையும் எடுத்துச் செல்லக் கூடய நீடித்து உழைக்கக் கூடிய ஒரு பொருளை அவர்கள் உருவாக்கினார்கள்.

செயல்படுத்தக் கூடிய தீர்வு

இயற்கைக்கு பாதகமில்லாத பொருள் (ஈகோவேர்) இணையவழியிலும், நேரிலும் கிடைக்கக்கூடிய வகையில் 2010ல் உற்பத்தியைத் தொடங்கியது. இன்று 2 தயாரிப்பு மையங்கள், 100 பணியாளர்கள், ஆண்டு மொத்த வருவாய் ரூ.10 கோடி என பரந்து விரிந்துள்ளது. அதோடு இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் இந்நிறுவனம் கால்தடம் பதித்துள்ளது.

இந்தப் பொருட்கள் அனைத்தும் தாவரங்களின் உயிரியல் பயோமாஸ் மற்றும் உறுதியான விளைச்சலில் இருந்து பெறுவது. இவை நீரில் இருந்து பாதுகாப்பானது, நாகரிகமாக சாப்பிடும் மேஜையில் வைக்கக் கூடியது. அதோடு மக்களுக்கு பாதுகாப்பான உணவையும், பொறுப்பான வாழ்வையும் அமைத்துக் கொடுக்கும் என்கிறார் ரியா.

தாவரங்களின் உயிரியல் பருமன் கூழ் தாவரங்களின் மிச்சத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் வடிக்கப்படுவதால் இவை பாதுகாப்பானவை, அதே போன்று அவை 100% மறுசுழற்சி செய்யப்படுவதோடு, மக்கக் கூடியவை என்கிறார் ரியா. அவர்களின் பொருளுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் அமெரிக்க விவசாயத்துறையின் சான்றிதழ்.

சவால்கள்

“பிளாஸ்டிக்கை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான வேறு நல்ல மாற்று பொருட்கள் கிடைக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்” என்கிறார் அவர்.

ரியாவிற்கு இருந்த மிகப்பெரிய சவால்களில் ஒன்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து இளைய மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மற்றும் விநியோகஸ்தர்களிடம் புத்தொளி பாய்ச்சவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும். பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைரோஃபோமை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பள்ளிகள் மற்றும் புற்றுநோய் ஆதரவு குழுக்களுடன் இணைந்து நாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அதே சமயம் ஈகோவேர் பொருட்கள் சுற்றுச்சூழல் நண்பனாக எவ்வாறு திகழ்கின்றன என்பன பற்றி பயிற்றுவிப்பதோடு அவை குறித்து மக்களிடம் உள்ள சந்தேகங்கங்களுக்கு விளக்கம்அளித்து வருகிறோம்.

ரியாவிற்கு வியாபார சக்தியில் உள்ள பெரிய சோதனையே அவர் ஆண் ஆதிக்கம் நிறைந்த வர்த்தகத் துறையை தீவிரமாக எடுத்துக்கொண்டதே – ஏனெனில் இந்தத் துறையில் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் விநியோகிஸ்தர்கள் மற்றும் பொருட்களைவாங்கும் மேலாளர்கள் என அனைத்திலும் ஆண்களே முன்னிலை வகிப்பர். மற்றொரு சாவல் ஈகோவேருக்கு இருக்கும் எதிர்காலத்தை அனைவருக்கும் புரிய வைப்பது.

துபாய்-லண்டன்-டெல்லி

“ரியா மும்பையில் பிறந்தவர். 1983ல் அவருடைய பெற்றோர் துபாய்க்கு சென்றுவிட்டனர். ரியா துபாய் மற்றும் லண்டனில் வளர்ந்தார். லண்டனில் அவர் தங்கும் பள்ளியில் இருந்த போது தான் அவர் ஒழுக்கம் மற்றும் சுதந்திரமாக இருப்பதற்கான நம்பிக்கை கிடைத்ததாக கூறுகிறார். நான் என் வாழ்வில் அனைத்து விஷயங்களையும் தைரியமாக எதிர்கொண்டேன். அது நான் யார் என்பதை உணர எனக்கு கற்றுக்கொடுத்தது அதே போன்று என்னுடைய நிலைக்காக போராடுவதற்கு பயப்படக் கூடாது என்பதையும் எனக்கு உணர்த்தியது என்கிறார் அவர்.”

ரியா பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பார்மகாலஜி(ஹான்ஸ்) படித்துள்ளார், பட்டப்படிப்பை முடித்ததும் லண்டனின் ஃபிசர் இன்க்(Pfizer Inc).இன் என்ற நிறுவனத்தில் தலைமை மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார். “ஃபிசரில் பணியாற்றிய ஐந்து ஆண்டுகள் எனக்கு வியாபாரத்தை மையப்படுத்துவதை கற்றக் கொடுத்தது, புத்தகங்களில் படித்ததை விட நிச்சயமாக என்னுடைய வேலையில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று உறுதியாகச் சொல்வேன். அது எனக்கு வடிவம் தந்தது, என்னை மேலும் உற்றுநோக்குபவராகவும், முன்எடுத்துச் செல்பவராகவும் மாற்றியதோடு மாற்றம் ஒன்றே மாறாத விஷயம் என்பதையும் எனக்கு கற்பித்தது. நான் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தியதே சிறந்ததாகக் கருதுகிறேன். அதன் மூலம் நான் செய்வதற்கான பலனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

2009ல் நான் ஃபிசரை விட்டு வெளியேறி, என் கணவருடன் டெல்லிக்கு இடம்பெயர்ந்துவிட்டேன்.

டெல்லி சென்ற பின்னர், நான் கண்டறிந்த ஒரு விஷயம் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான உணவு குறித்து இருக்கும் அக்கறை. ஆனால் அதே உணவு பொட்டளம் செய்யும் முறையை விரும்பாததும் எனக்குத் தெரிந்தது என்கிறார் ரியா. 

அவர் ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பினார், அவருக்கு அந்தத் திறமை இருக்கிறது என்பது உணரப்பட்டாலும் சரியான தருணத்திற்காக காத்திருந்தார். சரியான நேரம் அமைந்ததால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களைத் தயாரிக்கும் துறையைத் தொடங்கலாம் என அவர் முடிவு செய்தார்.

வாழ்க்கைத் துணையில் இருந்து இணை நிறுவனர்

ரியா சொந்தத் தொழிலைத் தொடங்கினார், ஆனால் ஒரே ஆண்டில் அவருடைய குடும்பமும் நிறுவனமும் நன்று வளர்ச்சி பெற்றது. அவருடைய கணவரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஈகோவேரில் இணைந்து கொண்டார், தற்போது அவர் அந்த நிறுவனதத்தின் தலைமை செயல்கள் அதிகாரியாக(COO) உள்ளார்.

ரியா புதிய வியாபார மேம்பாடு, விற்பனை, சந்தைப்படுத்தல் என பிராண்ட் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார். தன் கணவருடன் பணியாற்றுவது பற்றி அவர் கூறுகையில், “நாங்கள் இருவரும் அவரவர் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வோம், ஆனால் அவரவர் துறையிலோ அல்லது குழுவிலோ தலையிடமாட்டோம், அவர்கள் இல்லாத நேரத்திலோ அல்லது வெளியூர் சென்றிருந்தால் மட்டுமோ அதை கவனத்தித்துக் கொள்வோம். நாங்கள் தீர்க்கமான பணிக் கொள்கையை பின்பற்றுபவர்கள், அதே போன்று முடிவை நோக்கி நன்கு தீட்டப்பட்டவர்களாக பணியாற்றுவோம். அலுவலக நேரத்தில் அலுவக வேலையை மட்டும் பார்ப்பது, முடிந்த வரை அவற்றை வீட்டிற்கு கொண்டு செல்ல மாட்டோம். அதனால் நாங்கள் வீட்டில் இருக்கும் போது எங்கள் குழந்தைகள் மீது அளவில்லாத அக்கறையையும் பாசத்தையும் காட்ட முடிகிறது.”

தொழில் மந்திரம்

ரியாவின் தொழில் மந்திரம் எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருப்பது, பல்வேறு விதமான கலாச்சாரங்களுக்கு ஏற்றாற் போல மாறிக் கொள்வது இவை அனைத்தையும் விட முக்கியமானது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது.

ஒரே கடையில் அனைத்து விதமான தூக்கி வீசப்படும் பொட்டளங்களையும் மக்கும் பொருட்களாக தயாரித்து விற்பனைக்கு வைக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். அதே போன்று அவரது தயாரிப்புகளை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்துகின்றனரா என்பதை உறுதிபடுத்த வேண்டும், அதாவது நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர டீக்கடைகள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரின் விருப்பம்.

சுத்தத்திற்கு டெட்டாலை குறிப்பிடுவது போல அல்லது இணையதள தேடலுக்கு கூகுளைக் கூறுவது போல பாதுகாப்பான முறையில் உணவை வீட்டில் பார்சல் செய்யும் ஒரு பிராண்டாக ஈகோவேரை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் என்கிறார் ரியா.

ஒரு தொழில்முனைவராக மட்டுமல்ல இரண்டு குழந்தைகளின் தாயாகவும், ரியா பொறுப்பான வாழ்க்கையை முன்எடுத்துச் செல்வதற்கான வாசகத்தையும், அவற்றிற்கான தீர்வுகளையும் வழங்குகிறார். அவை “ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு, அவர்களின் குடும்பம் மற்றும் தலைமுறைகளும் முன்வர வேண்டும்.” தற்போதைய சூழலில் உணவு தொழிலுக்கான ஸ்டார்ட் அப்கள் நல்ல வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், ரியாவின் தயாரிப்புகள் நீடித்தத் தன்மையோடும், சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும் இருக்கும் ஒரு தீர்வைத் தரும் பொருளாக உள்ளது.

ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்