சென்னை ஐசிஎப்-ல் தயாரான இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லா ரயில்!

0

இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லா ரயில், அக்டோபர் 29 அன்று தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. 30 வருடங்களாக இயங்கிக் கொண்டு வந்த சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்-க்கு பதிலாக இந்த எஞ்சின் இல்லா ட்ரெயின்-18 இயங்கவுள்ளது.

பட உதவி: ட்விட்டர்
பட உதவி: ட்விட்டர்

இந்த ரயில் சென்னை ஐசிஎப்-ல் 20 மாதங்களில் தயார் செய்யப்பட்டு இன்று சோதனை ஓட்டத்திற்கு தயாராகி உள்ளது. 16 கோச்கள் கொண்ட இந்த அதி வேக ரயில் 80 சதவீத இந்திய தயாரிப்பில் 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டதாகும். தோற்றத்தில் புல்லட் ரயிலை போல காட்சி அளிக்கும் ட்ரெயின்-18 மணிக்கு 160கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றதாகும்.

நேற்று ஐசிஎப் சென்னை வளாகத்தில் இருந்து ரயில்வே வாரியத்தலைவர் அஸ்வனி லோஹாணி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சோதனையோட்டம் நடந்தது. நீண்ட தூரம் பயணிக்கும் இந்த முதல் எஞ்சின் இல்லா ரயில் இன்னும் சில மாதங்கள் சோதனையோட்டம் செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பட உதவி: ட்விட்டர்
பட உதவி: ட்விட்டர்
எஞ்சின் இல்லாதது மட்டுமின்றி இதில் இன்னும் பல வியக்கவைக்கும் அம்சங்கள் அடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் போல முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில் நம் நாட்டின் அதிவேக ரயிலாகும் வாய்ப்புள்ளதாக வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார். 

16 சேர் கார் கோச்சுகளை கொண்ட இந்த இரயில் இரண்டு வகுப்பாக பிரிக்கப்படுகிறது. அதாவது இரண்டு எக்ஸ்சிகியுடிவ் கோச் மற்றும் 14 நான்- எக்ஸ்சிகியுடிவ் கோச். அடுத்த ஆண்டு முடிவிற்குள் சென்னை ஐசிஎப் இன்னும் 5 கொச்சுகளை தயார் செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்சிகியுடிவ் கோச்சில் 56 வசதியான முழுமையாக சுழற்றக்கூடிய பயணிகள் இருக்கையும் நான்- எக்ஸ்சிகியுடிவ் கோச்சில் 78 இருக்கைகளையும் பொருத்தியுள்ளனர். மேலும் ரயில் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மெட்ரோ ரயில் போல் தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு என பல அமைப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதோடு வை-பை வசதியும் கொண்டு வர முயற்சிகள் செய்கிறது ரயில்வே துறை.

பட உதவி: ட்விட்டர்
பட உதவி: ட்விட்டர்

இதோடு கழிவுகள் இல்லா பையோ வாக்யும் கழிப்பறைகள், மாற்று திறநாளிகளுக்கான தனி இடம் மற்றும் கோச்சுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு பயணிகள் நடக்க இட வசதிகளும் இதில் உள்ளது.

கூடிய விரைவில் இந்த நவீன ட்ரைன்-18 டெல்லி-போப்பால் வழியில் 707கிமீ தூரத்தை கடக்க தயாராகி வருகிறது.

தகவல் உதவி: பெட்டர் இந்தியா மற்றும் எக்கனாமிக் டைம்ஸ் | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்