தமிழகத்தில் முதன்முறையாக: யுவர்ஸ்டோரி நடத்தும் சிறந்த தொழில் தலைவர்கள் கூடும் விழா!

5

நாட்டில் வணிக முதலீடுகளுக்கு மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்பதனை சுலபமாகச் சொல்லிவிடலாம். சுற்றளவின் அடிப்படையில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பெற்றிருப்பதோ இரண்டாம் இடம்.

கடந்த சில தசாப்தங்களில், பல உற்சாகமான தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகள் யுவர்ஸ்டோரி ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப இயக்கப்பட்ட சேவை (IT and ITES) துறைகளில் சாதித்தோரின் வெற்றிப் பயணங்களை  பகிர்ந்துள்ளோம். Freshdesk முதல் Indix,  Zoho என யுவர்ஸ்டோரி பெருமைப்படுத்திய வெற்றிக்கண்ட தொழில் முனைவோர்கள் எக்கச்சக்கம்.

தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான மாநாடுகளை முன்னின்று கொண்டு செல்வதிலும் யுவர்ஸ்டோரியே முன்னோடி. அந்த வகையில், முதன் முறையாக ‘சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை’ மையப்படுத்திய மாநாட்டையும் தொடங்க இருக்கிறோம். அம்மாநாட்டின் முதன் படியாய் தமிழகத் தொழில் முனைவோர்களை கொண்டாட விரும்புகிறோம்.

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் சேவை ஸ்டார்ட் அப் சூழலில், தலைச்சிறந்த தலைவராக தமிழகம் எவ்வாறு உருவாகலாம்?” என்பதை உள்ளார்ந்து ஆராய்ந்து கண்டறியும் நோக்கில் ஒரே மேடையில், முக்கிய வர்த்தகத் தலைவர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், முதலீட்டார்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை ஒன்று சேர்த்துள்ளோம்.

இவ்வகையான முதல் நிகழ்வில், தமிழகத்தில் ‘சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் தொழிலில்’ வெற்றிக் காண்வதற்கு என்னத் தேவை? என்பது தொடங்கி உங்களுக்குள் இருக்கும் பல தொழில் சார்ந்த கேள்விகளை விருந்தினர்களாக வருகை தரவுள்ள தமிழகத்தின் தொழில் முனைவு சூப்பர் ஸ்டார்களிடம் கேட்டறியலாம். 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன், கலந்து கொண்டு இவ்விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். 

பாரத் மேட்ரிமொனியின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், தைரோகேரின் நிறுவனரும், சிஇஓவும், எம்.டியுமான டாக்டர். ஏ. வேலுமணி,  நேச்சுலர்ஸ் சலூனின் நிறுவனரும், அதன் சிஇஓவாமான சிகே. குமாரவேல், சோஹோ-வின் பிராண்ட் தூதுவர் குப்புலஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் முக்கிய விருந்தினர்கள்.

விழாவின் தொடக்கமாய், ‘யுவர் ஸ்டோரி’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷ்ரத்தா ஷர்மா, ‘வெற்றிகரமான சூழலுக்கான ரகசியம்’ குறித்து பங்கேற்பாளர்களுடன் பேசுகிறார். 

இதனைத் தொடர்ந்து, நடுநிலையாளராக யுவர் ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரத்தா இருக்க, பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனுக்கும், தைரோகேரின் நிறுவனரும், சிஇஓவுமான டாக்டர். ஏ. வேலுமணிக்கும் இடையே கலந்துரையாடல் நடைப்பெறும். 

அடுத்த நிகழ்வாய், நேச்சுலர்ஸ் சலூனின் நிறுவனரும், அதன் சிஇஓவாமான சிகே.குமாரவேல் மற்றும் ஜோஹோ-வின் பிராண்ட் தூதுவர் குப்புலஷ்சுமி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்கும் குழுவிவாதம் நடைப்பெறும்.

நிகழ்ச்சிக்கு எண்ட் கார்ட் போடும் விதமாக, 10 தொழில் முனைவோர்கள் சரியாக 3 நிமிடங்கள் அவர்களது தொழிலில் முட்டி, மோதி, எழுந்து நின்ற எழுச்சிமிக்க கதையை பகிர்ந்துக் கொள்வார்கள்.

எங்கு..? எப்போது..?

தேதி : ஆகஸ்ட் 3ம் தேதி

இடம் : க்ரவுன் பிளாசா (அடையார் கேட்), டிடிகே ரோடு, சென்னை.

நேரம் : மாலை 6 மணி.

எனவே, சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களே, வளர்ந்துவரும் ஸ்டார்அப் நிறுவனர்களே, முதலீட்டாளர்களே மற்றும் சூழல் பயனாளர்களே அனைவரையும் எங்கள் விழாவுக்கு  வரவேற்கிறோம். 

பங்கபெற விரும்புவோர் இங்கே பதிவு செய்யுங்கள்

இந்த அற்புதமான நிகழ்வை நீங்கள் ஏன் மிஸ் பண்ணக்கூடாது? என்பதற்கு நிறைய காரணங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம் என நம்புகிறோம். மிஸ் பண்ணீராதீங்க... அப்பறம் வருத்தப்படுவீக!!!

Related Stories

Stories by YS TEAM TAMIL