கழிவு மேலாண்மை பிரிவில் செயல்பட்டு 2.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் கேரள நிறுவனம்! 

ஒரு மாதத்திற்கு 450 டன் உலர் கழிவுகளை நிர்வகிக்கிறது கோழிக்கோடு சார்ந்த ஸ்டார்ட் அப் ’க்ரீன்வோர்ம்ஸ்’

1

ஜபீர் கரத் 2014-ம் ஆண்டு உருவாக்கிய ஸ்டார்ட் அப் ‘க்ரீன்வார்ம்ஸ்’ (Greenworms). 80 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ள கோழிக்கோடு பகுதியைச் சார்ந்த இந்த நிறுவனம் கழிவு மேலாண்மை பிரிவில் செயல்படுகிறது.

ஜபீர் கரத்; கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமரச்செரி நகரில் வளர்ந்தவர். இவரது அப்பா உள்ளூர் உணவகங்ளுக்கு வாழை இலை விநியோகித்து வந்தார். பள்ளிப்படிப்பு முடித்ததும் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெறுவதற்காக டெல்லி சென்றார். பட்டப்படிப்பை முடித்ததும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கண்டு உந்துதல் ஏற்பட்டது. பசுமை தீர்வுகளில் பங்கேற்க தீர்மானித்தார். புதுடெல்லியின் கைவல்யா கல்வி அறக்கட்டளையின் காந்தி ஃபெலோஷிப்பிற்கு தேர்வானார். மும்பையின் குடிசைப்பகுதிகளில் பணியாற்ற முடிவெடுத்தார். கழிவு மேலாண்மை துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். குப்பைக்கிடங்குகளை பார்வையிட்டார். இந்தியாவின் நகர்புற கழிவு மேலாண்மை சார்ந்த தகவல்களைத் தெரிந்துகொண்டார். 

கழிவு மேலாண்மை பகுதியில் செயல்பட தீர்மானித்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கையில், 

“கல்லூரி படிப்பும் காந்தி ஃபெலோஷிப் பணிகளும் முடிந்ததும் வளர்ந்து வரும் துறையில் பணியாற்ற விரும்பினேன். வருங்காலத்தில் நம் நாடு சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொள்ள பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தேன். விஞ்ஞானபூர்வமற்ற கழிவு அகற்றும் முறை தீர்வுகாண வேண்டிய ஒரு பிரச்சனையாக இருக்கும் என்பதையும் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் செயல்படும் வணிகமாக இந்தப் பிரிவு மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் கண்டறிந்தேன்,” என்றார்.

2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டுடன் கோழிக்கோடு பகுதியில் ‘க்ரீன் வோர்ம்ஸ்’ துவங்கினார் ஜபீர். தொலைதூர கிராமத்தில் ஐந்து பேர் அடங்கிய குழுவுடன் செயல்படத் துவங்கினர். முதல் ஒன்றரை ஆண்டுகள் அதிக போராட்டங்களை சந்தித்தனர். இருமுறை தற்காலிகமாக நிறுவனத்தை மூடினர். க்ரீன் வோர்ம்ஸ் நிறுவனத்தை மீண்டும் துவக்குவதற்காக ஆறு மாதங்கள் மற்றொரு ப்ராஜெக்டில் ஜபீர் ஈடுபட்டார்.

இன்று இது 120 ஊழியர்களுடன் கேரளாவின் வடக்குப் பகுதியில் ஐந்து மாவட்டங்களில் செயல்படுகிறது. ஒரு மாதத்திற்கு 450 டன் உலர் கழிவுகளை நிர்வகிக்கிறது. மூன்று மறுசுழற்சி யூனிட்களையும் கழிவுப் பொருட்களை பிரித்தெடுத்து வகைப்படுத்தும் 11 பிரிவுகளையும் இயக்கிவருகிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2.5 கோடி ரூபாயாகும்.

க்ரீன் வோர்ம்ஸ் இதுவரை 80 லட்ச ரூபாய் மூலதனத் தொகை உயர்த்தியுள்ளது. கழிவுகள் உற்பத்தியாகும் அளவு மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேவைப்படும் சேவையின் அடிப்படையிலும் கழிவுகளை அகற்றுவதற்கான மாதாந்திர கட்டணம் கழிவுகளை உற்பத்தி செய்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. வகைப்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களிலிருந்தும் அதை மறுசுழற்சி செய்வதன் மூலமாகவும் கூடுதல் வருவாய் ஈட்டப்படுகிறது. அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்களை உரமாக்க பயன்படுத்தப்படும் தொட்டிகள், சமூகம் சார்ந்த உரமாக்க பயன்படுத்தப்படும் தொட்டிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வெட்டுகருவிகள் ஆகியவற்றை மறுவிற்பனையும் செய்கின்றனர்.

தனிப்பட்ட வீடுகள், குடியிருப்புகள், கேட்டட் கம்யூனிட்டீஸ், பள்ளி உணவகங்கள், ஷாப்பிங் மால் போன்றோர் இவர்களது தற்போதைய வாடிக்கையாளர்கள் தொகுப்பில் அடங்குவர். 

கழிவுகளை சேகரிப்பதுடன் வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் உரமாக்குவதற்வான தீர்வுகளையும் வழங்குகின்றனர். அத்துடன் திருமணங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற பிரத்யேக நிகழ்வுகளுக்கான கழிவு மேலாண்மை சேவைகளையும் வழங்குகின்றனர்.

விஞ்ஞான முறைப்படியிலான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏறுபடுத்தும் முயற்சியாக க்ரீன் வோர்ம்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்கிறது. அத்துடன் உள்ளூர் மாநகராட்சிகளுக்கு கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனையும் வழங்குகின்றனர். 

”இந்த வணிகத்தில் அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். அரசு அமைப்புகளுடன் சிறப்பாக பணிபுரிவதைப் பொருத்தும் பணியின் தரத்தைப் பொருத்துமே இந்த வணிகத்தில் வெற்றியடையமுடியும். திறமையான கழிவு மேலாண்மை அமைப்பை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுடன் இணைத்து செயல்படவேண்டியதன் அவசியத்தை பல்வேறு நகராட்சிங்கள் உணர்ந்துள்ளது,” 

என்று கூறி கழிவு மேலாண்மை பகுதியில் தனியார் மற்றும் பொதுத் துறைகள் இணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டார் ஜபீர்.

”கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு விரிவடையவேண்டும் என்பதே எங்களது உடனடி திட்டமாகும். உள்ளூர் அமைப்புகளின் ஆதரவு கிடைத்தால் நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்பட விரும்புகிறோம். 2028-ம் ஆண்டில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டவேண்டும் என்பதே எங்களது நோக்கம். இரண்டாம் கட்டமாக நிதி உயர்த்தும் முயற்சியில் இருக்கிறோம். இதன் மூலம் செயல்பாடுகள், ப்ராண்டிங், திறமையானவர்களை பணியிலர்த்துதல் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்தை இணைத்து வளர்ச்சியடையமுடியும்,” என்று விரிவடையும் திட்டம் குறித்து ஜபீர் பகிர்ந்துகொண்டார்.

உள்ளூர் அரசு அமைப்புகள் விஞ்ஞானப்பூர்வமான முறைகளைக் கொண்டு கழிவு மேலாண்மை பிரச்சனைக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதனால் பெரும்பாலான இந்திய நகரங்கள் பிரச்சனைகளை சந்திக்கிறது. சமூக பிரச்சனைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு க்ரீன் வோர்ம்ஸ் போன்ற சமூக நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்கமே சான்றாகும். கழிவு மேலாண்மை பகுதியில் தனியார் துறைகளுக்கான சந்தை ஒழுங்குபடுத்தப்படாமலும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பொருந்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்திய நகராட்சி திட கழிவு மேலாண்மை சந்தை 2025-ம் ஆண்டில் 13.62 பில்லியன் மதிப்புடன் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 7.14 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சந்தை ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனமான நோவோனஸ் (Novonous) அறிக்கை தெரிவிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : வல்லப் ராவ்

Related Stories

Stories by YS TEAM TAMIL