புதுயுக தொழில்முனைவு சிந்தனைகளுக்கான போட்டி 'ஆரம்பம்' அறிவிக்கப்பட்டுள்ளது!

0

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் நவீன தொழில்முனைவுகளின் மேம்பாட்டிற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும் நேடிவ்லீடு அமைப்பு, அகில இந்திய அளவில் செயல்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) இளைய தலைமுறைக்கான உட்பிரிவான யங்-இந்தியன்ஸ் (Yi) என்ற அமைப்புடன் இணைந்து "ஆரம்பம்" என்ற நவீன தொழில்முனைவு சிந்தனைகளுக்கான போட்டியின் இரண்டாம் பதிப்பை அறிவித்துள்ளது.

தமிழக இரணடாம், மூன்றாம் கட்ட நகரங்களை சேர்ந்த ஆக்கபூர்வமான தொழில் சிந்தனைகளை கொண்ட இளம்தொழில்முனைவோர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இந்த போட்டி மதுரையில் நடக்கவிருக்கிறது.

யங்-இந்தியன்ஸ் அமைப்பின் மதுரை பிரிவுத் தலைவர் திரு.K.தியாகராஜன் மற்றும் நேடிவ்லீடு அமைப்பின் நிறுவனர் R.சிவராஜா ராமநாதன் ஆகியோர் கூறியதாவது: 'புத்தாக்கம்(innovation) சார்ந்த நவீன தொழில்முனைவு மற்றும் சுயதிறன் வளர்த்தல்' என்ற சிந்தனையை தனது இந்த வருடத்திற்கான செயல் திட்டமாக யங்-இந்தியன்ஸ் அமைப்பு நிர்ணயித்துள்ளது. நேடிவ்லீடு அமைப்பானது இதே நோக்கத்தை தனது ஒற்றைச் சிந்தனையாகக் கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் நவீன தொழில்முனைப்பு வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. இந்த இயல்பான ஒத்திசைவின் அடிப்படையில் தென்தமிழகத்தில் புதியதொழில் சிந்தனைகளை ஊக்குவிப்பதற்காக "ஆரம்பம்" என்ற போட்டி நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க...

இளம்தொழில்முனைவோர்களும் மாணவர்களும் தங்கள் தொழில்முனைவு சிந்தனைகளை www.araambam.in என்ற வலைதளம் மூலம் பதிவு செய்யலாம்.

தேர்வு தேதிகள் ...

மதுரையில் 9.01.2016 அன்றும் & விருதுநகரில் 10.01.2016 அன்றும் முதல்நிலை தேர்வுகள் நடைபெறும். தொழில் முனைவோர் பிரிவிலிருந்து 10 விண்ணப்பங்களும், மாணவர் பிரிவிலிருந்து 10 விண்ணப்பங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு 19.1.2016 அன்று மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு பிரிவிலிருந்து மூன்று தலைசிறந்து தொழில்சிந்தனைகள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வாளர்களாக அனுபவம் மிக்க தொழில்முனைவோர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்வார்கள். வெற்றிபெரும் மாணவரல்லாத தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் "நேடிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க்" என்ற முதலீட்டாளர் அமைப்பின் மூலமாக முதலீடுகள் பெறுவதற்கும் பரிந்துரைக்கப்படும். மாணவர்களுக்கு வெற்றிச்சான்றிதழும் பரிசும் வழங்கப்படும்.

இப்போட்டியின் முதல் பதிப்பில் வெற்றி பெற்ற "ஹாப்பி ஹென்ஸ்" என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 5,00,000/- நிதி Native Angel Network (NAN) முலம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: Araambam