அன்னமிர்தா மதிய உணவு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு உணவு வழங்கி உதவும் ஐஸ்வர்யா ராய் 

0

இந்திய திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் 1,000 நலிந்த குழந்தைகளுக்கு இலவச உணவளிக்க உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளார். அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தால் (இஸ்கான்) நிறுவப்பட்ட அன்னமிர்தா மதிய உணவு திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த உள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஐஸ்வர்யாவிற்கு 44 வயது நிரம்பியது. அவரது பிறந்த நாளான அன்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இந்த செயல் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்கான் தலைவர் ராதாநாத் ஸ்வாமி மஹராஜ் தெரிவித்தார்.

மும்பை பகுதியிலுள்ள 500-க்கும் மேற்பட்ட நகராட்சி பள்ளிகள் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள 2,000 பள்ளிகள் இந்த மதிய உணவு திட்டத்தால் பயனடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் 20 ஹைடெக் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற சமையலறைகளிலிருந்து சத்தான உணவு வழங்கப்படுகிறது.

ராதாநாத் ஸ்வாமி மஹராஜ் குறிப்பிடுகையில்,

2004-ம் ஆண்டு ஒரு சிறிய அறையில் வெறும் 900 குழந்தைகளுக்கு மட்டுமே உணவு தயாரிக்கும் விதத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்தியாவில் ஏழு மாநிலங்களிலுள்ள 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது.

ராதாநாத் ஸ்வாமியின் குருவான பக்திவேதாந்த ஷ்ரிலா பிரபுபாத் அவர்களை பாதித்த ஒரு சம்பவமே இந்த திட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது. ஒரு நாயும் ஒரு குழந்தையும் குப்பைத்தொட்டியில் வீசியெறியப்பட்ட உணவுக்காக சண்டையிடுவதைக் கண்டார். அப்போதுதான் குழந்தைகளுக்கு உணவளிக்கும் பணியில் ஈடுபட தீர்மானித்தார்.

10 மைல் தொலைவிற்குள் இருக்கும் எந்த குழந்தையும் பசியுடன் இருக்கக்கூடாது என்று இஸ்கான் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக சுற்று வட்டாரத்திலுள்ள ஏழைகளுக்கு கிருஷ்ண பிரசாதமாக கிச்சடி விநியோகப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோருக்கு அன்னமிர்தா ஃபவுண்டேஷனின் திட்டங்களின் கீழ் உணவளிக்கப்படுகிறது.

ராதாநாத் ஸ்வாமி மஹராஜ் மேலும் குறிப்பிடுகையில்,

எந்த குழந்தையும் ஆரோக்கியமான முழுமையான உணவு கிடைக்கப்படாத காரணத்தால் கல்வி கற்க இயலாத சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ’அன்னமிர்தா திட்டம்’ உருவாக்கப்பட்டது. அன்னமிர்தா உணவு வழங்கப்படும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் அவர்களின் செயல்திறனில் முன்னேற்றம் இருப்பதாகவும் பள்ளிகள் தெரிவிக்கின்றன.

மாநில கொள்கையின்படி தற்சமயம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மேல் வகுப்பில் படிக்கும் நலிந்த குழந்தைகளுக்கும் உணவுத் தேவை உள்ளது.

சமீபத்தில் 17 பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் படிக்கும் 5,099 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக நவி மும்பை நகராட்சி இஸ்கான் அமைப்புடன் இணைந்துள்ளது.

நவி மும்பை மேயர் சுதாகர் சோனாவன், நகராட்சி கமிஷனர் என் ராமசாமி, கூடுதல் நகராட்சி கமிஷனர் ரமேஷ் சாவன், கல்வி அதிகாரி சந்தீப் சங்கவே மற்றும் பிற பிரமுகர்களுடன் ராபேல் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இந்த முயற்சி துவங்கப்பட்டது.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL