'இந்திய பெண்கள்' விழா– லோகோ வடிவமைக்கும் போட்டி அறிவிப்பு!

0

மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு அமைச்சகம் அக்டோபர் 2017-ல் டில்லி ஹாட் – டில் நடைபெற உள்ள பெருமைக்குரிய 'இந்திய பெண்கள்' விழாவிற்கான இலச்சினை (லோகோ) வடிவமைக்கும் போட்டியை நடத்த உள்ளது.

தேசிய அளவில் தங்களின் வேலைப்பாடு பிரபலம் அடைய வேண்டும் என்று விரும்பும் வடிவமைப்பாளர்களுக்கான வாய்ப்பு இது. 'இந்தியாவின் பெண்கள்' விழா பெண்கள் இயற்கை வழியில் தயார் செய்த அல்லது பயிரிட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும்.

பெண்களுக்கு பொருளாதார ரீதியில் அதிகாரமளித்தல் என்ற முக்கிய திட்டத்தின் அங்கமாக இந்நிகழ்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலமேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. இந்த விழாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல லட்ச பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு அமைச்சகம் பொதுமக்கள் இந்த முக்கிய நிகழ்வை குறிக்கும் அடையாள குறிப்பை வடிவமைக்கலாம் என்று கூறியுள்ளது. இந்த போட்டி குறித்த விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு அமைச்சகத்தின் முகநூல் மற்றும் ட்விட்டர் (@MinistryWCD) பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. உங்கள் இலச்சினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 21, 2017.