காற்று மாசுபாட்டைத் தடுத்து உட்புற செடிகள் அழகாக வளர உதவும் 'எக்கோ வொர்க்ஸ்'

1

மாசுகள் அதிகரிக்கும் நிலையில் கார்பன்டைஆக்சைடு காற்றில் கலந்திருக்கிறது. பசுமையான சூழலை அது நீர்த்துப்போக வைக்கிறது. உட்புறத் தோட்டங்கள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கு பல நகரங்களில் தேவையாக மெல்ல மாறிவருகின்றன. எனினும், அதுபோன்ற தோட்டங்களை பராமரிப்பதில் இடையூறுகள் அதிகம். மண் கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், சரியான சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் தண்ணீர் வசதி எல்லாமும் அதில் இடம்பெறும்.

இந்தப் பிரச்சனைகளை அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ளக்கூடிய பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட "எக்கோ வொர்க்ஸ்" (Eco Works) ஆரம்பநிலை பயோடெக் நிறுவனம், மணமற்ற நீரை உறிஞ்சக்கூடிய பாலிமர் ஜெல்லை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஸ்பாஞ்ச் போல இருக்கும். நீரையும், செடிகளுக்குத் தேவையான நீரையும் சத்துக்களையும் தக்கவைத்துக்கொண்டு தேவையானபோது வழங்கும்.

எக்கோ வொண்டர் ஜெல் (Eco Wonder Gel ) தயாரிப்பு, நகரப் பகுதிகளில் உட்புறங்களில் பசுமையை வளர்க்கிறது. அது பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இடையூறுகள் அற்ற தோட்டத்தைப் பாரமரிக்க இந்த ஜெல் உதவுகிறது. மேலும் தோட்டக்கலையில் ஒரு கால்தடமாக இன்டீரியர் வடிவமைப்பில் ஒன்றாக உட்புறத் தோட்டம் மாறுகிறது.

சுவாசிக்க சுத்தமான காற்று

இஸ்ரேலைச் சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழகம் எடுத்த செயற்கைக்கோள் ஆய்வில், பெங்களூருவில் சராசரியாக 2002 முதல் 2010 வரையில் 34 சதவிகிதம் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வாழும் மாசடைந்த சுற்றுப்புறங்களால் இன்று பெங்களூருவில் 10 சதவிகிதம் பெரியவர்களும் 50 சதவிகிதம் குழந்தைகளும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே கதைான் பெரும்பாலானா நகரங்களில் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறங்களில் பசுமையான சூழல் குறைந்ததுதான்.

ஒரு சுவாரசியம்… இந்த அச்சுறுத்தலுக்கு உயிரியல் ரீதியான தீர்வை முன்வைத்தது யார் தெரியுமா? அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா(NASA). விண்வெளிக்கு மனிதர்களுடன் அனுப்பப்பட்ட விமானத்தில் வளிமண்டல மீட்டுருவாக்கத்திற்கான உயிரியல் அமைப்புகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை அதிக அளவு அனுப்பாமல் ஆய்வு செய்தார்கள். அப்போது உட்புறங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை உட்புறச் செடிகள் சமாளிக்கும் என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இந்த அணுகுமுறை உலகம் முழுவதும் பெருகிவரும் உட்புற காற்று மாசுக்களைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த முழுமையான வசதிகளை பயோஹோம் என்று நாசா அர்ப்பணித்தது. மிஸிஸிபியில் உள்ள ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில் அமெரிக்கா உட்புற காற்று மாசுக்களை உட்புறச் செடிகள்(indoor plants) நீக்குவதை ஆய்வு செய்துபார்த்தது.

நாசாவின் ஆய்வால் உத்வேகம் பெற்று பெங்களூருவில் தொடங்கப்பட்ட எக்கோ வொர்க்ஸ், எக்கோ வொண்டர் ஜெல்லை உருவாக்கியது. உட்புற மாசுக்களை எதிர்கொண்டு சுத்தமான காற்றை உருவாக்க உட்புறச் செடி வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கு உதவ அந்த ஜெல்லை அறிமுகப்படுத்தினார்கள். மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தொடக்க நிறுவனம், பெங்களூருவில் புகழ்பெற்ற விட்டல் மல்லையா அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் வளர்ந்துவந்தது.

நான்கு வாரம் செடிக்கு தண்ணீர் தேவையில்லை

இந்த ஜெல் செடி வளர்வதற்கான சத்துக்களுடன் பாலிமரும் கலந்த ஆதரவு அமைப்பைக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சார்புடைய, அழகியலுடன் பல வண்ணங்களின் கலவையாக ஜெல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் செடி வளரத் தேவையான கார்ப்போஹைட்ரேட்ஸ் மற்றும் நுண் சத்துக்களும் அடங்கியுள்ளன. தேவையான சத்துக்கள் செடியின் வளர்ச்சியுடன் இணக்கமாக இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட தண்ணீர் தேவையுடன் உள்ள அலங்காரமான உட்புறச் செடிகள் மற்றும் அதன் நிம்மதியான வளர்சிதை மாற்றம் ஜெல்லுக்கு சரியான பொருத்தமாக இருக்கிறது.

அடிப்படையில், எக்கோ வொண்டர் ஜெல் உட்புறச் செடிகளின் பாரமரிப்பை உத்தரவாதம் தருகிறது. பராமரிப்பு இலவசம் என்பது சமூகத்தில் அழகான உட்புற பசுமையை ஊக்குவிப்பதாக இருக்கிறது.

எக்கோ வொர்க்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சமீர் வாத்வா, “இன்று நாங்கள் உட்புறச் செடிகள் வளர்ப்பதை அரிதாகத்தான் பார்க்கிறோம். பெரும்பாலும் உட்புறச் செடிகளை பராமரிப்பது கடினமான வேலை. இன்றைய பிஸியான வாழ்க்கையில் அதையெல்லாம் தினமும் பார்த்துக்கொள்வதற்கு யாருக்கும் நேரமில்லை. அவர்களால் செடிகளை கவனிக்கமுடிவதில்லை. அந்தச் செடிகளை இலவசமாக ஜெல் பராமரித்துக்கொள்ளும். மாதத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு முறையோ செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது. மேலும், இந்த ஜெல் ரொம்பவும் சரியாக இருக்கும். அது ஒளியும் பளபளப்புமாக ஊடுருவிச் செல்கிறது. இது ஓர் அழகிய கான்சப்ட்” என்று விளக்கம் தருகிறார்.

சமீர் சொல்வதைப் போல, பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் வீடுகளிலும் செடிகள் வளர்ப்பதை ஒரு இலக்காக வைத்திருக்கிறது எக்கோ வொர்க்ஸ். அது இறுதியில் மற்ற இந்திய நகரங்களில் வளரும். உட்புறச் செடிகள் வளர்ப்பது காற்று மாசுக்களை எதிர்த்துப் போராடுவதோடு, அலுவலகங்களை அழகாக வைத்திருக்க உதவும். அகமதாபாத் ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்த சமீர். தன்னுடைய பெரிய கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு இந்த உன்னதப் பணியை கையில் எடுத்துக்கொண்டார். அதாவது பணியிடங்கள் மற்றும் வீடுகளின் உள்ளே காற்று மாசு இல்லாமல் செய்வது அந்தப் பணி.

இந்த யோசனையைப் பற்றி எக்கோ வொர்க்ஸ் வழிகாட்டியான டாக்டர் அனில்குமார், “காற்றை தூய்மைப்படுத்துவதற்கு ஜெல் தனித்துவமான மதிப்பை அளிக்கிறது. தண்ணீர் போன்ற விலைமதிப்பற்ற மூலப்பொருட்களின் சிறப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மேலும், அது செடியின் சத்துக்களுடன் கலந்து நகர்ப்புறச் சூழலில் உட்புறத் தேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. மண்ணும் உரமும் உள்ள பாரம்பரியமான பூந்தொட்டிகள் அதிகமாக வெளிப்புறத்திற்கு ஏற்றவை” என்கிறார்.

தாவரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் டாக்டர் குஷ். சர்வதேச அளவில் முன்னணி பயோடெக் ஆய்வு நிறுவனங்களான விவசாய ஆய்வுக்கான இந்தியன் கவுன்சில், பிரான்ஸின் பாஸ்ட்டியர் நிறுவனம், அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் மூலக்கூறு மற்றும் செல் பயாலஜி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். விட்டல் மல்லையா அறிவியல் ஆய்வு அறக்கட்டளை (VMSRF) நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

உங்கள் உலகை பசுமையாக்கும் தயாரிப்புகள்

ஏற்கெனவே சந்தையில் பலவிதமான பயோடெக் படைப்புகளை எக்கோ வொர்க்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. எக்கோ வெஜ் வாஷ் ( Eco Veg Wash ), பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் உள்ள பூச்சிமருந்துகள், கிருமிகளை நீக்க உதவுகிறது. நம்தாரிஸ், டோட்டல் மால், புட் வேர்ல்டு மற்றும் பிக் பாஸ்கெட் ஆகிய முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.

நிறைய இயற்கையான தோட்டத் தயாரிப்புகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள், அவற்றை உங்கள் வீட்டிலேயே வளர்த்து ஆர்கானிக் உணவாகப் பயன்படுத்தலாம். பப்பாளியில் இருந்து தயாரிக்கப்பட்ட பல் சொத்தையைப் போக்கும் பல் பாதுகாப்பு தயாரிப்புகளையும் வைத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற புதுமையான முயற்சிகளால் நகர்ப்புறங்களில் பசுமைத்தடங்கள் உருவாக்க நம்பிக்கையை ஏற்படுத்திவருகிறது எக்கோ வொர்க்ஸ்.