'தில் இருந்தா எதையும் சாதிக்கலாம்'

0

ஒரு ஆப்பிள் பயிரிடும் விவசாயி, ஒரு புகைப்படக் கலைஞர் - இருவருக்கும் பொதுவாய் இருந்தது மலைகளின் மேல் அவர்கள் வைத்திருந்த காதல்தான். பிரணவ் ராவத் மற்றும் அபிஜித் சிங் ஆகிய இருவரும் தங்கள் சக்திக்கு மீறிய சாதனை ஒன்றை செய்துவிடத் துடித்தார்கள். இதுவரை இந்தியாவில் யாரும் அப்படி ஒரு முயற்சி மேற்கொண்டதில்லை என்றாலும் துணிந்து இறங்கினார்கள்.

அவர்களின் நோக்கம்? ஒரு உறைந்து போன நீர்வீழ்ச்சியில் ஏறுவது. இது ஆபத்துகள் அதிகம் நிறைந்த பேராசை. உறைந்த பனி எந்நேரமும் உருகி உயிருக்கு உலை வைக்கலாம். போதாக்குறைக்கு எப்படி ஏறுவது என கற்றுக்கொடுக்கவும் யாருமில்லை. காரணம் இப்படி உறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறுவது இந்தியாவில் இதுவே முதன்முறை. இதை எல்லாம் அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.

ஏறுவது என்றவுடன் கயிற்றை கட்டி விறுவிறுவென ஏறிவிட முடியாது. நீண்ட ஆராய்ச்சியும், தீவிர திட்டமிடலும், அதீத பயிற்சியும் தேவை. லடாக்கின் ஸான்ஸ்கார் பள்ளத்தாக்கில் உள்ள 60 அடி உயர நீர்வீழ்ச்சி ஒன்றை அவர்கள் ஏறுவதற்காக பார்த்து வைத்திருந்தார்கள். ஆனால் அங்கே ஏற்பட்ட நிலச்சரிவு அவர்களின் முயற்சியை ஒரு ஆண்டுகாலம் தள்ளிப்போட்டது. இந்த காலகட்டத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் இன்னும் உயரமான நீர்வீழ்ச்சி இருப்பதை கண்டறிந்தார். கடல் மட்டத்தில் இருந்து 12,500 அடிகள் மேலே 260 அடி உயரத்தில் இருந்து விழும் அந்த பிரம்மாண்ட ஷேலா நீர்வீழ்ச்சியில் ஏறுவது மிகவும் சிரமம் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

இது போதாதென்று இந்த சாதனைக்காக நிதி திரட்டுவதும் குதிரைக்கொம்பாக இருந்தது. Indian Mountaineering Federation, Mountain Dew ஆகியவை தக்க நேரத்தில் கை கொடுக்க அவர்களின் முயற்சி சாத்தியமானது.

அவர்களின் பயணம் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல கூர்மையான ஐஸ்கட்டிகள் அவர்களின் கையை பதம் பார்த்தன. ஒரு கட்டத்தில் மெலிதான உறைபனிக்கு கீழே இன்னும் நீர் ஓடுவதை அறிந்து மேலே செல்ல யோசித்தார்கள். காரணம், அவை சட்டென நெகிழ்ந்துவிடும். பின் அசம்பாவிதம்தான். ஆனாலும் தைரியமாக முன்னேற முடிவெடுத்தார்கள். வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இறுதியில் எட்டினார்கள். அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டது இந்த ஒற்றை தாரக மந்திரம்தான் - 'தில் இருந்தா எதையும் சாதிக்கலாம்'.

அவர்களின் இந்த புல்லரிக்க வைக்கும் பயணத்தை ஹாட்ஸ்டாரில் கண்டு களியுங்கள்.

தமிழில் - சமரன் சேரமான்