இவர்கள் வழி தனி வழி: சாகச பயணத்திற்காக "ஆல்ட்டிட்யூட் சின்றோம்"

0

சாகச பயண நிறுவனம், "ஆல்ட்டிட்யூட் சின்றோம்" இந்த வருடத்தின் ஆரம்பத்தில், ட்ரெக்கிங்கை, மிகவும் விரும்பும் இருவரால் அவர்களது கார்பரேட் வேலைகளை துறந்து, துவங்கப்பட்டது. அவர்களது நோக்கம் ஒன்றே.

ஆரம்ப கட்டத்தில், இவர்கள் எண்ணம், ட்ரெக்கிங் அனுபவம் உள்ளவர்கள் மத்தியிலும், ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்பவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வருடத்தின் முதல் 6 மாதங்களில், ஆல்ட்டிட்யூட் சின்றோம், உத்தர்காண்டில், 6 ட்ரெக்கிங் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் 7 ட்ரெக்கிங், பூட்டான், நேபால், உத்தர்காண்ட் ஆகிய இடங்களில் நிகழ உள்ளது.

sajeesh and randeep
sajeesh and randeep

நிறுவனத்தின் நோக்கம் :

ஆல்டிட்யூட் சின்றோமின் வணிக மாதிரி, அவர்களது நோக்கத்தை அடித்தளமாக கொண்டது. மக்களுக்கு, மலைகளின் போதையூட்டும் தன்மையை உணரவைப்பது தான் அது என்கிறார் சஜீஸ். இவர்களை பொறுத்தவரை ட்ரெக்கிங் என்பது, நமது பயணப்பட்டியலில், ஒரு தளத்தை முடிப்பது அல்ல.

இவர்களின் தனித்தன்மை :

நீண்ட பயணங்கள் : மோசமான வானிலை மற்றும் அனுபவமில்லா ட்ரெக்கர்கள் இதன் மூலம் பயனடைவர். குழுவில் மிகவும் மெதுவாக நடப்பவர் கூட, பயணத்தை அனுபவித்து மகிழ்ந்து, இறுதி புள்ளியை அடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் ரந்தீப். மேலும் வயது அதிகமாகி விட்டது, உடல் நிலை ஒத்துழைக்காது போன்ற காரணங்களால் பலர் ட்ரெக்கிங் வருவது இல்லை. ஆனால் ட்ரெக்கிங் என்பது காட்டுக்குள் ஒரு நடை மட்டுமே. உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களும் ட்ரெக்கிங் செல்லலாம் என்பதே நாங்கள் வலியுறுத்தும் கருத்து என்கிறார் அவர்.

  • சிறிய குழுக்கள் :

எங்கள் அனுபவம் மூலம், நல்ல ஒரு ட்ரெக்கிங் பயணத்திற்கு 12 பேர் கொண்ட குழு தான் சிறந்தது என்று அறிந்தோம். ஆனால் 5 பேர் கொண்ட குழு மற்றும் 15 பேர் கொண்ட குழுவாகவும் நாங்கள் ட்ரெக்கிங் அழைத்து செல்கின்றோம், என்கிறார் சஜீஸ். இவர்கள் நம்புவது, குழுவின் அளவு சிறிதாகும் பொழுது அனுபவம் நன்றாக இருக்கும் என்பதே. மேலும் சூழ்நிலையும் நன்றாக அமையும் என நம்புகின்றனர்.

  • கலாச்சார அனுபவம் :

ட்ரெக்கிங் பயணம் எப்போதும், செல்லும் இடங்களில் நடைபெரும் திருவிழாக்களை ஒட்டியே திட்டமிடப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மக்களோடு தங்கி, அவர்கள் உணவை பகிர்ந்து கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

  • தேர்ந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள் :

ஆல்டிட்யூட் சின்றோமிற்கு இமயமலை தொடரில், வழிகாட்டி, சுமைதூக்குவோர்,சமையல் செய்வோர் என பலரோடு தொடர்புகள் உள்ளது. மேலும் தங்களோடு இணைந்து இத்துறையில் பணிபுரிய சரியான துணை நிறுவனத்தை இவர்கள் தேடியும் வருகின்றனர்.

நிறுவனத்தின் நிறுவனர்கள் இருவரும், இப்படி பட்ட ஏற்பாடுகள், இவர்களது விலை பட்டியலை பதம் பார்ப்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், சராசரி பயண ஏற்பாட்டாளரோடு ஒப்பிட்டு பார்க்கையில் எங்கள் விலை பட்டியல் சிறிதளவு தான் அதிகம்.மேலும் இத்துறையில் முன்னிலையில் இருப்போர் தரும் சேவையை காட்டிலும் எங்கள் சேவை உயர்வானது என்கிறார் சஜீஸ். மற்றவர்கள் அளிக்கும் சேவை மிக விலை அதிகமாகவோ அல்லது, மிகவும் செலவு குறைவானதாகவோ உள்ளது. ஆனால் நாங்கள் அளிப்பது 20 முதல் 50 வயது வரை வசதியாக, அதே நேரம் உண்மையான அனுபுவமாக வேண்டும் என எண்ணம் உள்ளவர்க்கானது.

விளம்பரம் :

நிறுவனத்திற்கு வாடிகையளர்கள் தற்போது முகநூல் பக்கம், வலைத்தளம் மூலமாகவும், வாய் வார்த்தையாகவும் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தனிப்பட்டவர்களுக்கான ட்ரெக்கிங், கார்பரேட் நிறுவனங்களுக்கான ட்ரெக்கிங் என பல்வேறு சேவைகள் அளிக்கின்றனர்.

சஜீஸ் மற்றும் ரந்தீப் தற்போது, வணிக மாதிரியை வெளிநாடுகளில் செயல்படுத்த முயன்று வருகின்றனர். தற்போது கவனம் இமயமலை மீது இருந்தாலும், தங்களது கிளைகளை நாடெங்கும் பரப்பவும், வெவ்வேறு கலாச்சார அனுபவங்களை தங்கள் ட்ரெக்கிங்கில் இணைக்க உள்ளனர். உதாரணமாக, "யோகா ட்ரெக்" என்று உத்தர்காண்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால், ஒரு நிலைக்கு மேல் வளர்வதிலும் இவர்களுக்கு உடன் பாடில்லை. தனிப்பட்ட கவனிப்பு மற்றும் அதற்கேற்றபடி திட்டமிடுவது ஆகியவையே எங்கள் பலம். மிக வேகமாக வளரும் போது, அவை பாதிக்கப்படும் என்கிறார் சஜீஸ்.

முதலீடு :

தற்போது இந்நிறுவனத்திற்கு, நிறுவனர்கள் இருவரும் அவர்கள் சேமிப்பில் இருந்து, சம்பாத்தியத்தில் இருந்து, செலவழித்து வருகின்றனர்." இந்த யோசனையை பலர் விரும்பி, எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது சில முதலீட்டளர்கள் எதிர்காலத்தில் இலவச ட்ரெக்கிங் என்ற வார்த்தையின் மீதும், மேலும் சில யோசனையை விரும்பியும் எங்களோடு இணைந்துள்ளனர்" என்கிறார் சஜீஸ்.

மேலும் இத்துறையில் நாங்கள் தற்போதுதான் வளர்ந்து வருகின்றோம். எங்களுக்கு முதலீடு தேவைப்படும் பொழுது, பயணிப்பதில் விருப்பம்'உள்ளவராக பார்த்து, எங்கள் முதலீட்டை அவரிடமிருந்து பெறுவோம். எங்கள் வழி எது என்று தீர்மானிக்கும் வரை, பொறுமையாக இருக்கவுள்ளோம். ஆனால் வழி எதுவாயினும் சேரும் இடம் வடக்காகத்தான் இருக்கும் என்கின்றனர் இருவரும்.

இணையதள முகவரி: Altitude Syndrome