வெற்றி நிறுவனம் ஓர் இரவில் கட்டமைக்கப் படுவதல்ல: வெற்றியாளர்கள் பகிரும் வழிகள்!

0

ஒரு வணிகத்தை துவங்குவது கடினம். அதை உருவாக்கி நிலைத்திருக்கச் செய்வது அதைவிடக் கடினம். வணிக வளர்ச்சிக்கான நிதி கிடைப்பது கொண்டாடத்தக்க விஷயம் என்றாலும் அது மட்டுமே வெற்றிக்கான அடையாளம் அல்ல.

வெற்றிகரமான வணிகத்தை உருவாக்கும் வழிமுறைகள்: 

இந்தியாவில் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்கி நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளை ’மேக்மைட்ரிப்’ தீப் கால்ரா, ’பேடிஎம்’ விஜய் சேகர் ஷர்மா, ’தைரோகேர்’ ஆரோக்கியசாமி வேலுமணி, ’புக்மைஷோ’ ஆஷிஷ் ஹேமரஞ்சனி ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

”பொறுமையுடன் செயல்படவேண்டும். சந்தையின் தேவைக்கேற்றவாறு வணிகத்தை உருவாக்கவேண்டும்,” என்கிறார் தீப் கால்ரா.
”இந்தியா வெவ்வேறு கலாச்சாரம், மொழி, விருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நாடு. நீங்கள் செயல்பட விரும்பும் இடத்தின் தேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் உங்கள் வணிகம் அமையவேண்டும்,” என்கிறார் ஆஷிஷ்.
“பெரிய நிறுவனங்களைக் கண்டு பயந்து உங்களது வாய்ப்பை வேறொருவரிடம் இழந்துவிடக்கூடாது. நீங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாரானால் உங்களுக்குத் தேவையான பத்து மடங்கு கூடுதல் வளங்கள் கிடைக்கும். பெரியளவில் செயல்படுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் நிச்சயம் வெளியேறவேண்டிய சூழல் ஏற்படும்,” என்கிறார் விஜய் சேகர் ஷர்மா.
“முதல் ஐந்தாண்டுகள் சந்தையில் உங்களது தயாரிப்பு அல்லது சேவையை மக்கள் வாங்குவதற்கு சம்மதிக்கவைக்கவேண்டும். புதிதாக இருப்பவற்றை இந்திய நுகர்வோர் நம்புவதில்லை,” என்றார் ஆரோக்கியசாமி வேலுமணி.

ஆங்கில கட்டுரை : யுவர் ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா

செய்திச்சுறுக்கம்

எரிபொருள் விலையுயர்வு

எரிபொருள் விலையுயர்வு நடுத்தர வர்க்கத்தை பாதிப்பிற்குள்ளாக்கியது. ஆனால் டெலிவரி ஊழியர்களும் வாடகை கார் ஓட்டுநர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக டெலிவரி ஊழியர்கள் வருவாயையும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு பணியை திட்டமிடுவார்கள். ஆனால் எரிபொருள் விலையுயர்வு அவ்வாறு தேர்வு செய்ய இயலாத சூழலை உருவாக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அவர்களது ஊக்கத்தொகை குறைந்து வருகிறது.

மின்னணு கட்டண நிறுவனங்கள்

மின்னணு கட்டண நிறுவனங்கள் உள்நாட்டு இந்திய பயனர்களின் கட்டண தரவுகள் சேமிப்பு தொடர்பான அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சமர்பித்த பின்னர் அனைத்து மின்னணு கட்டண நிறுவனங்களும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஒழுங்குமுறைகளை தணிக்கை செய்து இணக்க அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்காத சூழலில் மத்திய வங்கி அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

Stories by YS TEAM TAMIL