'டெக்ஸ்பார்க்ஸ் 2016'-ல் தொழில்முனைவோர் பங்கேற்பதால் கிட்டும் 16 முக்கிய பயன்கள்!

3

நேரம் நெறுங்கிவிட்டது... யுவர்ஸ்டோரி’ இன் பிரம்மாண்ட வருடாந்திர நிகழ்ச்சி ‘டெக்ஸ்பார்க்ஸ் 2016’ நடக்கும் தினம் நெறுங்கிவிட்டது...

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி, பெங்களூர் யெஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவாண்டா’வில் நடைபெறும் யுவர்ஸ்டோரியின் 7ஆவது பதிப்பு டெக்ஸ்பார்க்ஸ், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். இம்முறை தடையற்ற தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட் அப் அடிப்படைகள் என்ற முக்கிய தலைப்புகளை மையமாகக்கொண்டு நடைபெறுகிறது டெக்ஸ்பார்க்ஸ். 

கடந்த ஆறு ஆண்டுகளாக, டெக்ஸ்பார்க்ஸ் பல ஸ்டார்ட் அப்’களுக்கு சிறந்த அடித்தளத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 180 ஸ்டார்ட் அப்’ களில் 97சதவீத நிறுவனங்கள் வளமான வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக ‘டெக்30’ என்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 630 மில்லியன் டாலர் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏழாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் டெக்ஸ்பார்க்ச், நாட்டின் பல நகரங்களில் தனது முன்னோட்ட பதிப்பு கூட்டத்தை நடத்தியது. ஒவ்வொரு இடத்திலும் உள்ள பல்வேறு விதமான ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோர்களை சந்தித்து, இணைப்பை உருவாக்கியது. ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, மும்பை, புனே, ஜெய்பூர், சண்டிகர், டெல்லி, சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் சந்திப்பை நடத்தியது. டெக்ஸ்பார்க்சின் இறுதி பிரம்மாண்ட நிகழ்வு பெங்களுருவில் நடைபெற உள்ளது. இதில் பல நகரங்களை சேர்ந்த தொழில்முனைவோர், தங்கள் நிறுவனங்களை காட்சிப்படுத்தி அவர்களுக்கு தேவையான இணைப்பையும், முதலீட்டாளர்களையும் பெற உள்ளனர். 

இன்னுன் நீங்கள் டெக்ஸ்பார்க்சில்2016 இல் கலந்துகொள்ள பதிவுசெய்யவில்லையா? அதில் கலந்துக்கொள்வதால் நீங்கள் பெறப்போகும் பயன்கள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்...

1. தொடர்புகள் (Networking): 3000த்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ள டெக்ஸ்பார்க்சில், நீங்களும் கலந்துகொண்டு பிறருடன் உங்கள் கதையை பகிரலாம், உங்கள் நிறுவன அனுபவங்களை பரிமாறிக்கொண்டு ஆலோசனை பெறலாம். உங்களை போலுள்ள பிற தொழில்முனைவோர்களை சந்தித்து அவர்களில் அறிவுரைகள் பெறலாம். அதனால் உங்களின் விசிட்டிங் கார்டுகளை கொண்டு வந்து எங்களுடன் கொண்டாடுங்கள். நீங்களும் பேசி மகிழ்வதோடு பிறரின் கதைகளையும் கேட்டு பயனடையுங்கள்.

2. முன்னோடிகளிடம் இருந்து கற்றல் (Learn from the best): தொழில்முனைவோர்களின் முன்னோடிகளான கிஷோர் பியானி, ஃப்யூச்சர் குழுமத்தில் நிறுவனர், Dr.முகுந்த் ராஜன், டாடா சன்ஸ் லிமிட்டன் ப்ராண்ட் கஸ்டோடியன் மற்றும் உறுப்பினர், ஷைலேந்திர சிங், நிர்வாக இயக்குனர் செகோயா கேப்பிடல், மார்டென் ப்ரிமதால், ஜென்டெஸ்க் இணை நிறுவனர், விஜய் சேகர் ஷர்மா,  பேடிஎம் நிறுவனர், ஆஷிஷ் ஹேம்ரஜானி, புக்மைஷோ இணை நிறுவனர் மற்றும் பாவின் துராக்கியா, டைரெக்டி நிறுவனர், இவர்களது அனுபவ பகிரலை கேட்டு நீங்கள் மூழ்கிப்போகலாம் வாருங்கள். சந்தை பற்றிய ஆழ்ந்த அறிவையும் பெறுங்கள்.

3. முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பு (Direct access to investors): 20க்கும் மேலான முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வருகின்றனர். இதைவிட அவர்களிடம் உரையாட உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்காது. வெட்கப்படாமல் உங்கள் நிறுவனத்தின் பெருமையை அவர்களிடம் பகிருங்கள்.

4. ஸ்டார்ட் அப் களுக்கு அரசின் ஆதரவு  (Government’s support to startups): அரசின் ஸ்டார்ட் அப் திட்ட அலுவலர்கள், மற்றும் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. கர்நாடகா அரசின் ஸ்டார்ட் அப் துறை அதிகார்கள் இதில் கலந்துகொள்கின்றனர். பிற மாநில அதிகாரிகளும் வரவிருப்பதால் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

5. பயிற்சி பட்டறைகள் (Workshops): இந்த் ஆண்டு டெக்ஸ்பார்க்சில் 9 பயிற்சி பட்டறைகள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவை பெருக்கிக்கொள்ளவும், வாய்ப்புகளை அறிந்துகொள்ளும் வகையிலும் இருக்கப்போகிறது. 

6. தொழில் வளர்ச்சி உதவியாளர்கள் (Access to industry enablers): டெக்ஸ்பார்க்ஸ் 2016இல் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தலைவர்கள் தவிர தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய, தீர்வு அளிக்கக்கூடிய நிறுவனங்களான ஆக்சிஸ் பேங், Akamai, AWS, மைக்ரோசாப்ட் மற்றும் டிஜிட்டல் ஓஷன் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

7. கருத்து (Feedback): சிறிய தொடக்க நிறுவனங்கள் தங்களின் சேவை, தயாரிப்பு பற்றி இங்கு கிடைக்கக்கூடிய கருத்துகள் அடிப்படையில் செயல்பட உதவியாக இருக்கும். நீங்கள் இங்கு சந்திக்கும் நபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் உங்களின் தயாரிப்பு பற்றிய புரிதலும், அதில் உள்ள குறைபாடுகளும் தெரியவரும். இது சந்தையின் தேவையை அறியச் செய்வதோடு உங்களை சரியான பாதையில் இட்டு செல்லும். 

8. டெக்30 (Tech 30): 2600 விண்ணப்பங்களில் இருந்து இந்த ஆண்டிற்கான சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தேர்ந்தெடுக்கப்படும். இது இந்தியாவின் சிறந்து விளங்கக்கூடிய நிறுவனமாக இருக்கக்கூடும். அவர்கள் ஏன் சிறந்தவர்கள்? அந்த இடத்தை அடைய என்ன செய்துள்ளார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. அவர்களில் யார் வெற்றிப்பெற்று ரூ.10 லட்சம் பரிசை வெல்லப்போகிறார்கள் என்றும் காணத்தவராதீர்கள்.

9. தொழில்துறை அறிக்கை (Industry report): யுவர்ஸ்டோரி ஒவ்வொரு ஆண்டும் தனது ‘தி டெக் 30 அறிக்கை’ ஒன்றை வெளியிடும். அதில் தொழில்நுட்பத்தின் முக்கிய பகுதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். 

10. கூட்டு முயற்சி (Partnership): அனுபவமிக்க பிரபல நிறுவனங்களுக்கு சந்தையின் அடிப்படையில், கூட்டுமுயற்சிகள் ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். புதிய நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தவும், தீர்வுகள் வழங்கவும் டெக்ஸ்பார்க்ஸ் உதவிகரமாக இருக்கும். 

11. வேலைவாய்ப்பு (Job opportunities): வேலை தேடும் அல்லது வேலை மாற விரும்புவோருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இது. ஸ்டார்ட் அப்’ இல் பணியாற்ற விரும்புவோர் இங்கு வந்து உங்களுக்கு ஏற்ற துறையில் செயல்படும் நிறுவனங்களை சந்தித்து வேலைவாய்ப்பை பெறமுடியும். 

12. காட்சிபடுத்தி விளக்கம் (Launch and Demo): புதிய தயாரிப்பு லான்ச் மற்றும் விளக்க நிகழ்வை தவறவிடாதீர்கள். புதிய தயாரிப்புகளை டெக்ஸ்பார்க்சில் வெளியிட்டு உங்கள் உள்ளங்களை பலர் கவர உள்ளனர். 

13. கண்காட்சியாளர்கள் (Exhibitors): 70க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் டெக்ஸ்பார்க்சில் கலந்துகொள்ள உள்ளனர். நீங்கள் அவர்களின் ஸ்டால்களுக்கு சென்று அவர்களுடன் பேசி, அவர்களின் சேவை, புதிய தயாரிப்புகள் பற்றி அறிந்து பயனடைய முடியும். 

14. உத்வேகம் அடையுங்கள் (Get inspired): தொழில்முனைவோர் ஆக விரும்புவோர் இங்கே வந்து வேண்டிய உத்வேகத்தை பெறலாம். தொழில் தொடங்க குழப்பத்தில் இருப்போர் இங்கே வந்தால் தெளிவு பெறலாம். அனுபவமிக்க தொழில்முனைவோரிடம் ஆலோசனை பெற்று உங்கள் முடிவை எடுக்கலாம். நீங்கள் அடுத்த ஆண்டின் டெக் 30 க்கு விண்ணப்பம் கூட போடும் அளவு உயரலாம். 

15. பரிசுகள் வெல்லுங்கள் (Win prizes): சமூக ஊடகத்தில் டெக்ஸ்பார்க்ஸ் பற்றி பதிவிடுங்கள். உங்களுக்கு அதில் பிடித்தது என்ன பிடிக்காதவை என்ன, ஆன்லைனில் கருத்து பறிமாற்றம் செய்யுங்கள். #tsparks என்று பதிவிடுங்கள்... சிறந்த மற்றும் அதிக பதிவுகள் போடுவோருக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. உங்கள் போனை நன்கு சார்ஜ் செய்து எடுத்து வாருங்கள் ட்வீட் செய்து பரிசுகள் வெல்லுங்கள். 

16. யுவர்ஸ்டோரி குழுவை சந்திக்கலாம் (Meet the YourStory team): யுவர்ஸ்டோரி குழுவை டெக்ஸ்பார்க்சில் சந்தித்து உங்கள் கதையை எங்களுடன் பகிருங்கள். உங்களைப்பற்றிய மெயிலை எங்களுக்கு editorial@yourstory.com அனுப்புங்கள்!

தகவல்களுக்கு: TechSparks2016