எந்த மதத்தையும் சாராதிருக்கும் உரிமை: பொதுநல வழக்குத் தொடுத்து தீர்ப்புக்காக காத்திருக்கும் தம்பதி!

0

2010-ல் என் இளைய மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது, பள்ளி நிர்வாகம் விண்ணப்ப படிவத்தில் எங்களின் மதத்தை குறிப்பிட வலியுறுத்தினார்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. 

ராமகிருஷ்ண ராவ், இவர் தான் நீண்ட நாட்களாக, அரசு சம்மந்தப்பட்ட விண்ணப்படிவங்களில் மதம்/ஜாதி பெயர்களை குறிப்பிடுவதை எதிர்த்து போராடி வருபவர். 

ராமகிருஷ்ணா குடும்பத்துடன்
ராமகிருஷ்ணா குடும்பத்துடன்

டிவி.ராமகிருஷ்ண ராவ் மற்றும் அவரது மனைவி க்லாரன்ஸ் க்ருப்பாலினி ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். தற்போது ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி போராடி வருகின்றனர். விண்ணப்ப படிவங்களில் ஜாதி/மதம் பெயர்கள் குறிப்பிடவேண்டிய பகுதியை முழுவதுமாக நீக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஜாதி/மதத்தை திணிக்கக் கூடாது என்று நம்புபவர் ராமகிருஷ்ண ராவ். ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த ஜோடி தொடர்ந்த பொது நல வழக்கை அடுத்து நோடீஸ் ஒன்றை பிறப்பித்தது. இதற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் அளித்தது. 

ராமகிருஷ்ணா இது சம்மந்தமாக பல அரசு அதிகாரிகள் மற்றும் மனிதவள அதிகாரிகளை சந்தித்து வருகிறார். மத்திய அரசு மனிதவள அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டுள்ளார்.

”நான் ஹைதராபாத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களிடம் பேசி உள்ளேன். டெல்லி மனிதவள மேலாண்மை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியபோது, இது ஒரு மாநில பிரச்சனை என்று பதிலளித்துள்ளனர்,”

என்று நியூஸ் மினிட் பேட்டியில் கூறியுள்ளார். பொதுவாக எல்லா விண்ணப் படிவங்களிலும் ஆறு மதப் பெயர்கள் குறிப்பிட்டும், மற்றவை என்னும் பகுதியும் உள்ளது. ஆனால் மதசார்பாற்றவர் என்ற ஒரு பிரிவு அதில் இல்லை. ராமகிருஷ்ணாவின் மகள் படிக்கும் பள்ளி, விண்ணப்பப்படிவத்தில் ஜாதிப்பெயரை குறிப்பிட்டால் மட்டுமே எல்லா விஷயங்களும் சுமூகமாக நடைபெறும் என்று வலியுறுத்தி உள்ளனர். 

”7 ஆண்டுகள் கழிந்தும் அதே நிலையில் தான் இப்போதும் உள்ளோம். இப்போது என் மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதற்கான தெலுங்கானா போர்ட் ஆன்லைன் விண்ணப்படிவத்தில் ஜாதிப் பெயரை குறிப்பிடாமல் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை,” என்றார் வருத்தத்தோடு. 

தான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கை பற்றி குறிப்பிட்ட ராமகிருஷ்ணா, ஒருவரது விருப்ப மதத்தை பின்பற்றுவதற்கு உரிமை இருப்பது போல எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமையே என்றார். இந்திய அரசியலமைப்பும் இதை உறுதி செய்கிறது. எனவே நீதிமன்றம் இவரது பொதுநல வழக்கை முக்கியமாக கருதி விரைவில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ராமகிருஷ்ணா. 

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL