தந்தையின் மறைவுக்குப் பின் பேப்பர் போட்டு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பெண்!

0

எட்டு, ஒன்பது வயது குழந்தைகள் தங்களுக்கான பொறுப்பகள் பற்றி கவலையில்லாமல் சுற்றித்திரிவார்கள். ஆனால் அரினா என்ற எட்டு வயது சிறுமி, அதிகாலை 5 மணிக்கு எழுந்து செய்தித்தாள்கள் போடும் வேலையை செய்துவருகிறார். காலை ஏஜென்சிக்கு சென்று, நியூஸ்பேப்பர்களை வாங்கிக்கொண்டு, வீடு வீடாக சென்று பேப்பர் போட்டுவிட்டு பள்ளிக்கு செல்வார் அரினா.

ஜெய்பூரைச் சேர்ந்த அரினா ஏழு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் பெரிய குடும்பத்தில் வாழ்கிறார். அரினாவின் தந்தை பேப்பர் போடுவார், அப்போது அவருடன் விளையாட்டாக செல்வார் இந்த பெண். அப்பாவோடு சைக்கிளில் சென்று வீடுவீடாக பேப்பர் போட உதவுவார். ஆனால் திடிரென அரினாவின் தந்தை இறந்து போக அவரின் வாழ்க்கையில் பெரிய பொறுப்பு வந்தது.

அரினாவின் அப்பா இறந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அவள் பேப்பர் போட்டு வருகிறார். பள்ளிப்படிப்போடு இந்த வேலையை செய்வது கடினமான இருந்தாலும் குடும்பத்துக்காக அதைச் செய்தார். ஆனால் ஒருபோதும் மனம் தளராமல் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். 

பணியை முடித்துவிட்டு பள்ளிக்கு தாமதமாக செல்வார் அரினா. அதற்கு முதல்வரிடம் அடிக்கடி திட்டும் வாங்குவார். அதனால் அப்பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின் அவரின் நிலை அறிந்து மற்றொரு பள்ளி அரினாவுக்கு இடம் அளித்தனர். 

அரினா ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, குடும்பத்தின் நிதிநிலை மிகவும் மோசமானது. பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவமனை ஒன்றில் நர்சாக ஆனார் அரினா. அடுத்த மூன்று ஆண்டுகள் ராமா ஹாஸ்பிடலில் சேர்ந்து பணியாற்றினார். அவர் தன் குடும்பப் பொறுப்பு மொத்தத்தையும் ஏற்று, சகோதர-சகோதரிகளை படிக்க வைத்தார்.

2010-ல் உயர் நீதிமன்ற ஜட்ஜ் மனீஷ் பண்டாரி, அரினாவை வீரமான பெண் என்று அங்கீகரித்து விருது ஒன்றை வழங்கினார். அவர் அந்த விருதை கிரன் பேடி கைகளில் இருந்து வாங்கினார்.

அரினா தற்போது ராஜஸ்தான் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பில் முழு நேரமாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India