ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்டோர் பட்டியலில் இடம்பிடித்த டெல்லி பல்கலைக்கழக்கத்தால் நிராகரிக்கப்பட்ட தீர்தக் சாஹா

0

தீர்தக் சாஹா டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்தார். குடும்பத்தில் அனைவரும் பணிவானவர்கள். அவரது அப்பா பள்ளி ஆசிரியர். அம்மா தபால் துறையில் பணியாற்றினார். அமெரிக்காவின் 11 மாநிலங்களிலுள்ள 5.4 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் அமெரிக்கன் எலக்ட்ரிக் பவர் (AEP) நிறுவனத்தில் தீர்தக் சாஹா பணியாற்றுகிறார். 

ஃபோர்ப்ஸ் இந்த வருடம் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்டோர் 30 பேர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 20 வெவ்வேறு துறைகளில் ஒவ்வொரு துறைக்கும் 30 பேர் வீதம் 600 சாதனையாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள். முன்மொழியப்பட்ட 15,000 பேர்களிலிருந்து தீர்தக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தீர்தக் கல்லூரியில் சேர்ந்து வான் இயற்பியல் படிக்க விரும்பினார். இயற்பியலுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகம் இருக்கவேண்டும் என்பதால் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர முடியவில்லை. அவரது விருப்பத்திற்கேற்ப அந்தக் கல்லூரியில் சேர முடியாததால் பொதுவாக பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படுவதைப் போலவே தீர்தக்கின் பெற்றோரும் அவரது எதிர்காலம் குறித்து கவலைப்பட்டனர். இறுதியாக அவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் ’இண்டர்நேஷனல் செண்டர் ஃபார் அப்ளைட் சயின்ஸ்’-ல் சேர்ந்தார். 

ஃபிலடெல்ஃபியாவின் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அவருக்கு உதவிக்தொகையும் வழங்கப்பட்டது. அங்கு பிஎஸ்சி படித்தார். நாசா பென்சில்வேனியா ஸ்பேஸ் க்ராண்ட்டில் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. செயற்கைக்கோள்களுக்கான ஆரிகமி சார்ந்த மாடுலர் சோலார் பேனல் வடிவமைத்தார்.

தீர்தக் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் பேசுகையில்,

இது எனக்கு கௌரவமளிக்கும் விஷயம். ஒருவரது ஒட்டுமொத்த வாழ்க்கைப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அங்கீகாரம் அளிக்கப்படும். அவர்கள் எதிர்பார்க்கும் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கே இந்த கௌரவம் வழங்கப்படும். இது வாழ்நாள் சாதனை விருதைப் போன்றது. ஆனால் முப்பது வயதுக்குட்பட்டோருக்கானது.”

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி தீர்தக் வகிக்கும் க்ரிட் மாடர்னைசேஷன் என்ஜினியர் என்கிற பதவியே இதற்கு முன்பு இல்லை. இவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பதவியாகும்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL