Pyoopel.com மூலம் நுழைவு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி பெறுங்கள்!

0

பி.டெக் பட்டதாரியான பிரசாந்த் தேஷ்வால் எப்போதும் சொல்லப்படும் சான்றோர் மொழியை நம்புகிறார்: இலவச சாப்பாடு போல எதுவுமில்லை. வங்கி வேலைக்கு செல்வதற்காக IBPS தேர்வை அவர் எழுத முடிவுசெய்தபோது, அதற்கான ஆயத்தங்களுக்காக பணம் செலவழிக்க மனதளவில் தயாரானார்.

எனினும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பின்தங்கிய பிஜ்னூர் நகரில் வாழ்ந்ததால், அவருக்கு பயிற்சி நிலையங்களோ பயிற்றுநர்களோ கிடைக்கவில்லை. இணையத்தில் தேடியபோது அவருக்குக் கிடைத்தது பையோபெல். காம் (Pyoopel.com). அவர்கள் ஆய்வுக்கு உட்பட்ட பாடங்களை வைத்துக்கொண்டு ஆன்லைன் வீடியோ பயிற்சி கொடுப்பதைப் பற்றி தெரியவந்தது.

இப்போது அது, 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவசமான எட்டு பயிற்சிகளை நடத்துகிறது. முதலில் இலவசமாக பயிற்சித் தேர்வு நடத்துவதாகச் சொல்வார்கள். பிறகு பணம் வசூலிப்பார்கள் என்று கூறப்படுகிற இணையதளங்களில் இருந்து பையோபெல். காம் வித்தியாசப்பட்டிருந்து. இந்த இணையதளம் உண்மை யில் முழுவதுமாக பாடங்களை அளித்துவருகிறது.

பையோபெல்லின் இணை நிறுவனரான பரத் பட்டோடி, இந்தியாவில் பயிற்சி நிலையங்களில் இன்னமும்கூட முறைசாராமல் இருக்கிறது. “அவர்கள் வசூலிக்கும் தொகையில் எந்த நிலையையும் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தாறுமாறாக வசூலித்தார்கள். எங்களுடைய முயற்சி குறைந்தபட்சம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதாக இருந்தது” என்கிறார் அவர்.

தற்போது, பையோபெல் 150 விரிவுரைகள் உள்பட எட்டு பயிற்சி தேர்வுப் படிப்புகளை வைத்திருக்கிறது. இந்தக் குழு 1000 கேள்விகளை புதியதாக தொகுத்துள்ளது என்கிறார் பரத். இந்த தேர்வும் கேள்வி பதில்களும் உண்மையானவை மற்றும் போட்டிக்குத் தகுதியானவை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “நாங்கள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரமான தேர்வு பயிற்சிகளை வழங்குகிறோம். அது கற்றலுக்கான அனுபவத்தை முழுமை ஆக்குகிறது” என்று பரத் விவரிக்கிறார்.

பயிற்சித் தேர்வுகள் உள்பட இலவசமான தேர்வு பயிற்சிகள் IBPS, CAT, CMAT, CLAT, GRE, SSC, NDA மற்றும் CDS தேர்வுகளுக்கு www.pyoopel.com ல் லாக் இன் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் குழு பகுப்பாய்வை தங்களுடைய அணுகுமுறையில் கொண்டவர்கள். உதாரணமாக, சுயஊக்கத்தையும் தாண்டி அவர்கள் விரிவுரைகளைக் கேட்கத் தொடங்கியதில் இருந்து, 15 விரிவுரைகளுக்குப் பிறகு மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அறிந்துகொள்கிறார்கள். “உலகம் முழுவதும் ஆன்லைன் பாடங்களை வழங்கும் இணையதளங்கள் ஒரே மாதிரியான மாற்றத்தை எதிர்கொண்டன. நாங்கள் ஒவ்வொரு நாளும் பாடங்களை மேம்படுத்துகிறோம். எங்களுடைய பாடங்கள் சீரானவை. எங்களது தியரி பாடங்கள் ஒவ்வொன்றும் ஏழு நிமிடங்களுக்கு குறைவானவை. பயிற்சிக்கு 15 நிமிடங்கள்” என்கிறார் பையோபெல் இணை நிறுவனரான ஸ்வாதி செளத்ரி.

“மேலும், நாங்கள் கூட்டு நிதி சேர்ப்பதற்கான நிகழ்வைத் தொடங்கினோம். இன்னும் கூடுதலான வீடியோ பாடங்களை எடுப்பதற்காகவும் இதைவிட சிறந்த ஸ்டுடியோவுக்காக நிதி தேவைப்பட்டது. எங்களுடைய நிதி திரட்டல் indiegogo.com டிரண்டிங் ஆகியிருக்கிறது. இதுவரை 80 சதவிகித நிதி சேர்ந்துவிட்டது” என்று கூறுகிறார் அவர்.

Pyoopel இன் முக்கிய மாணவர்கள்

எப்எம்எஸ் மேலாண்மைக் கல்லூரி மாணவரான பரத், கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தொழில் பக்கம் வந்துவிட்டார். மும்பை ஐபிஎஸ் மேலாண்மைக் கல்லூரியில் எம்பிஏ முடித்த ஸ்வாதி, ஐசிஐசிஐ வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இருவரும் சேர்ந்து இந்தூரில் 2014ம் ஆண்டு டிசம்பரில் பையைபெல்.காம் இணையதளத்தைத் தொடங்கினார்கள். கூட்டு நிதி திரட்டலைத் தாண்டி சில ஸ்பான்சர்களின் உதவிகளைப் பெற்றார்கள்.

இந்தூரில் உள்ள பரத்தின் வீட்டில் ஒரு சிறிய அறையில்தான் பையோபெல்லின் அலுவலகம் இருந்தது. “புகழ்பெற்ற பயிற்சி நிறுவனத்தில் கேட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது பயிற்சிக் கட்டணத்திற்கு பகுதிநேர வேலைபார்த்தேன். அப்போதுதான் ஸ்வாதியை சந்தித்தேன். இருவரும் பயிற்சிக்காக அதிகம் பணத்தை மாணவர்கள் செலவழிப்பது பற்றி கவலைப்பட்டோம். அந்த இடைவெளியைத்தான் நாங்கள் இணைக்க முயற்சி செய்தோம்” என்கிறார் பரத், அருகில் ஸ்வாதியும் இருக்கிறார். இவர்கள் சில நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.

எதிர்காலத்தில் சாதிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? “நாங்கள் தற்போது எங்களுடைய படிப்புகளுக்கு உதவி கேட்டு இன்ஸ்டியூட்டுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் பேசிவருகிறோம். எடுத்துக்காட்டாக, சிமேட் தேர்வுக்கு ஒரு மேலாண்மைக் கல்லூரி உதவி செய்யலாம். இதுவொரு நல்ல அணுகுமுறை. பல்கலைக்கழகங்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தால், கூடுதல் கட்டணம் கட்டாமல் மாணவர்களின் சுமை குறையும். பையோபெல் விரைவில் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் வருமானம் பெற்றுவிடும்” என்று தகவல் தருகிறார் பரத்.

இந்த சந்தை எவ்வளவு பெரியது?

ஐபிபிஎஸ் எனப்படும் வங்கித் தேர்வுகளை எட்டு லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் கேட் தேர்வை இரண்டு லட்சம் பேர் எழுதுகிறார்கள். பையோபெல் ஏற்கனவே இந்த சந்தையைப் பிடித்துவிட்டது. அவர்களுடைய இலக்கு இந்த ஆண்டின் இறுதியில் CET மற்றும் GMAT தேர்வுகளுக்கான இலவச பயிற்சியையும் அளிக்கவேண்டும் என்பதுதான். இத்துடன் பத்து பயிற்சித் தேர்வுக்கான படிப்புகளை இலவசமாக கற்றுத்தருவார்கள்.

“இந்த ஆண்டின் கடைசியில் 20 ஆயிரம் மாணவர்களை அடையவேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்கிறார் நம்பிக்கையுடன் ஸ்வாதி. அவர்களுடைய வழிகாட்டிகள் யார்? “உண்மையில் யாருமில்லை. நாங்கள் தொடக்கநிலை பயணத்தில் நிறைய சிரமங்களைச் சந்தித்தோம். அதுவே எங்களுக்கான பாடங்கள்” என்று கூறுகிறார் பரத்.

மாணவர்களின் வளர்ச்சியில் உத்வேகம் பெற்ற தன்னார்வலர்கள் பலர் இவர்களுக்காக பணிபுரிய விருப்பம் தெரிவிக்கிறார்கள். ராய்ப்பூரில் உள்ள டிபிஎஸ் கல்லூரி மாணவரான 17 வயதாகும் அக்சத் திரிபாதி, ஆன்லைனில் உதவி கிடைக்குமா என்று தேடியபோது இங்கே வந்தடைந்தவர். “மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைனில் சொல்லித்தருகிறார்கள் என்று உணர்ந்தபோது, அவர்களுடன் இணைய விரும்பினேன். இது மாணவர்கள் உலகத்திற்கான நல்ல முயற்சி. தற்போது அவர்களுக்காக கேட் தேர்வுக்கான பாடங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் அக்சத்.

மாணவர்கள் சமூகத்தில் எல்லாவற்றையும் முழுமையாக ஆன்லைனில் தரும் புரட்சியை பையோபெல். காம் உருவாக்கிவருகிறது. இரு நிறுவனர்கள், ஒரு தன்னார்வலர் மற்றும் ஒரு நிக்கான் கேமரா சேர்ந்து மிகப்பெரிய காரியங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். மேலும் பல தன்னார்வலர்கள் அவர்களுடன் எதிர்காலத்தில் இணையக்கூடும்.

இணையதள முகவரி: Pyoopel

ஆக்கம்: MUKTI MASIH | தமிழில்: தருண் கார்த்தி