பாலின பாரபட்சத்தை வெளிச்சம் போட்டு காட்டும் Freshworks நிறுவனம்

0

Freshworks நிறுவனத்தில் கடந்த வாரம் ஒரு சுவாரசியமான நிகழ்வை அரங்கேற்றி வைத்துள்ளனர். எளிமையான மற்றும் நம் கண்களை திறக்கூடிய நிகழ்வை அந்நிறுவனத்தின் மனிதவள ஆர்வலர் சிந்துஜா பார்த்தசாரதி நடத்தினார். ஒரே மாதிரியான பாலின செயல்களுக்கு சவால் விடும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது.

நாம் அறியாமலே இந்த சமூகத்தின் போக்கின் படியே பலவற்றில் பாரபட்சம் பார்க்கிறோம். இனவாதம் அல்லது பாலியல் வேறுபாடுகளை நாம் பார்ப்பதில்லை என்றாலும். நாம் செய்யும் பாரபட்சம் அதையும் தாண்டி கொடுமையானது என்பதை நாம் அறிவதில்லை.

நடத்தப்பட்ட சவால்

இது மிகவும் எளிமையானது, நீங்கள் அன்றாடம் கேட்கும் அல்லது எதிர்கொள்ளும் பாரபட்சத்தை ஒரு பலகையில் எழுதி அத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும். நம் வாழ்வின் வேலை அல்லது வாழ்க்கையில் நாம் எடுத்த முடிவுகளில் பாரபட்சம் செய்யும் சூழல்களை இந்த சவால் வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.

காலையில் இந்த நிகழ்வை தொடங்கிய பொழுது வெறும் ஒரு சில பதிப்புகளே வந்தது ஆனால் மதிய நேரத்திற்குள் இது அலுவலகம் முழுவதும் பரவி பல பதிவுகள் வந்தவண்ணம் இருந்தது.

நான் பார்த்த சில பதிப்புகள்:

எனக்கு பைக் ஓட்ட பிடிக்கும். ஏன் ஆண்கள் மட்டும் தான் பைக் ஓட்டவேண்டுமா?

எனக்கு சமைக்க பிடிக்கும். அதென்ன பெண்களின் வேலை மட்டுமா? 

உங்களை நீங்கள் கவனித்து கொள்வதில் தவறு ஏதும் இல்லையே? ஆண்கள் பாதங்களை பராமரிப்பதில் தவறென்ன? என்று இவர் கேட்கிறார்.

அழகாக தெரிவது தவறு இல்லையே? நான் என்னை அலங்கரித்துக்கொள்ள 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்வேன். 

ஆண்களும் பேசலாமே?

அனைத்தையும் பார்த்துக்கொள்ள நேரம் உள்ளது. குழந்தை + பணி வாழ்க்கை

இதில் என்ன தவறு? என் மனைவியை விட என்னிடம் அதிக ஷூக்கள் உள்ளது, என்கிறார் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரீஷ். 

சமுதாயம் வரையறுக்கப்பட்ட சில கருத்துகளால் நம் வட்டத்தை நாம் சுருக்கி கொள்ள வேண்டாம். இதை நாங்கள் சமூக வலைதளத்தில் கொண்டு வர உள்ளோம். என்ன தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூலில் #UnconsiousBias #ChallengeGenderStereotypes #Freshworks #Freshperspectives என டாக் செய்து உங்கள் பதிப்புகளை பகிருங்கள். . 

Related Stories

Stories by YS TEAM TAMIL