ஃப்ரீசார்ஜின் இளம் பொறியாளர்: திரு.நம்பிக்கை என அழைக்கப்படும் 'கோரத் பால்'

0

ஃப்ரீசார்ஜின் இணை நிறுவனராகிய குணால் ஷா, தங்களை 'நம்பகம், நியாயம், உதவிக்கரம்’ இவையெல்லாம் உள்ள ஒரு நிறுவனமாக வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். ‘’தங்கள் தளத்தை, தொலைபேசிக்கு கட்டணம் செலுத்துவது முதல், ரீச்சார்ஜ் செய்வது வரை உடனடியான சேவை அளிக்கும் ஒரு நம்பகத் தன்மை கொண்ட இடமாகவும், பில் செலுத்துவது சட்டென்று முடிந்து விடுகிற ஒரு இனிய அனுபவமாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறுகிறார் குணால்.

மென்பொறியாளர் கோரத்பால், மென்பொருள் இன்ஜினியர் ‘2010 ஆம் ஆண்டு ஃப்ரீசார்ஜ் துவக்கப்பட்ட பொழுதிலிருந்து அங்கு சிறந்த ஊழியராக இருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை ஸ்னாப்டீல் கையகப்படுத்தியது. இவ்வாண்டு தொடகத்தில் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உருவாக்கியுள்ளாது. இதன்படி மொத்த முதலீடு 120 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகியுள்ளது.

சுதந்திரமான செயல்பாட்டைக் கொண்டுள்ள ‘ஃப்ரீசார்ஜ்’ நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது 200 பேர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று கருதுகிறார்கள்.

ஒரு தொழில்முன்முயற்சியின் ஊழியரான் கோரத், சிறுவனாக இருந்தபோதே புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அந்த ஆர்வம் ஜிங்காவில் கணினி அறிவியல் நுட்ப பட்டத்தை (b tech in computer science) பெறுவதற்கு இட்டுச் சென்றது. ஜிங்கா கணினிப் பொறியாளர் குழுவில் கோரத்’தும் அங்கம் வகித்தார். ‘’நான் ஜிங்காவில் இருந்து கொண்டு பல புதிய விஷயங்களை கற்றேன். அதே போல் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள ‘ஃப்ரீசார்ஜ்’ மிகவும் உதவி புரிந்தது’’ என்கிறார்.

2013 நவம்பர் 18 ஆம் நாள் கோரத், ஃப்ரீசார்ஜில் இணைந்தார். ஒரு பெரிய நிறுவனத்தில் செய்து கொண்டிருந்த வேலையை உதறி விட்டு வந்ததால் புதிய நிறுவனத்தில் இணைந்தது அவருக்கு ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. ஃப்ரீசார்ஜின் வலைதளக் குழுவில் பணியாற்றும் கோரத், இன்றுவரை தனது பங்கை முழுமையாக நிறைவேற்றி வருகிறார்.

‘’எமது உற்பத்தியில் இடம்பெற்றுள்ள பிற குழுவினரும் விரிவான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு, கோரத் உதவி புரியக் கூடியவர் அதனால் வெகு சீக்கிரமாகவே அவர் உற்பத்தி ஆதாரக் குழுவில் செயலாற்றும் மூத்த மென்பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று விட்டார்’’ என்கிற குணால். மேலும் கூறுகையி இணையதளம் மூலம் தொலைப்பேசிக் கட்டணம் செலுத்துதலும், கட்டணத் தொகை செலுத்துதலும் மிகுந்த வருமானம் ஈட்டும் துறை. எம்மைச் சார்ந்துள்ள புற வாடிக்கையாளர்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபட்டு சூழலுக்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். கோரத் தன் தனித்திறத்தால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்.

தற்போது கோரத், தொகை செலுத்தப்படுகிற பணம் புழங்கும் உள்ளாதாரக் குழுவில் பணியாற்றுகிறார். ஃப்ரீசார்ஜைப் பராமரிக்கிற ஆற்றல் மிகுந்த உற்பத்தித் திறனைக் கட்டமைப்பதிலும், மிகு நுட்பமான அளவீட்டுச் சூழலை நிர்வகிப்பதிலும் கோரத் நிறைய சவால்களை எதிர் கொள்கிறார். ‘’பல நேரங்களில் உற்பத்திச் சூழலில் நிலவும் தவறுகளைக் களைவதற்கும், சில பிரச்சனைகளைக் கண்டறியவதற்குமான வாய்ப்பு எனக்கு ஏற்படுகிறது. இத்தகைய நெருக்கடி எங்களது செயல்பாட்டுமுறை மீது ஆழ்ந்த புரிதலை உருவாக்குகிறது. தொழிலில் தோன்றும் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் நான் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறேன்’’ என்கிறார் கோரத்.

ஃப்ரீசார்ஜில் நிலவும் பணிக் கலாச்சாரம், புதிய புதிய முடிவை மேற்கொள்வதற்கும், முன்னோக்கிச் செல்வதற்குமான வாய்ப்பை வழங்குவதாக பெருமிதம் கொள்கிறார் கோரத்.

நாங்கள் மிகவும் மென்மையான, வெளிப்படையான, இணக்கமான பணிச்சூழலைப் பெற்றுள்ளோம். அந்தந்த நேரத்திற்கு அவசியமான வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். சந்தைக்கு வருகிற புதிய தொழில்நுட்பங்களைத் தேடியடைவதிலும் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறோம். இங்குள்ள மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் குறிப்பிட்ட துறைகளில் ஆழமான ஞானம் உடைய வெவ்வேறு விதமான ஆட்களுடன் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது என்பது தான்.

தற்போது நம்பிக்கை தரும் புதிய நுட்பங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று கலந்துரையாடும் நான்கு பேர் கொண்ட குழுவில், தான் அங்கம் வகிப்பதாகக் கூறுகிறார் கோரத்.

ஃப்ரீசார்ஜில் வேலை செய்கிறபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் ஏதேனும் உண்டா என்று கேட்டோம். நிறைய உண்டு என்றார். ஃப்ரீசார்ஜின் வலைத்தள வழங்கி (server) பொருத்துதலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்தத் தருணத்தில் ஏற்பட்ட வியப்பிற்கு அவரது குரலே சாட்சியாக இருந்தது. ‘’வலைத்தள வழங்கியை நள்ளிரவுப் பொழுதில் பொருத்தத் திட்டமிட்டிருந்தோம். உற்பத்திக் குழூவில், குறியில் இடையீடு செய்வதும் மாற்றியமைப்பதுபோன்றவை என்னுடைய முதல் அனுபவம். மொத்தக் கட்டமைப்பும் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது. சேவையை எப்படி வழங்குகிறது என்பதை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்வதற்கு அந்த அனுபவம் தான் எனக்கு உதவிகரமாக இருந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது’’ என்றார் புன்னகையுடன்.

எத்தகைய சவாலையும் எதிர்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதே கோரத்தின் தனிச் சிறப்பு என்கிறார் குணால். எந்த வேலையையும் என்னால் முடியாது என்றே கூறமாட்டார். வெளித் தெரியாத பல பெரிய திட்டங்களிலும் கோரத் மகத்தான பங்களிப்பை ஆர்ப்பாட்டம் இன்றி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு புதிய நிறுவனத்தில், கோரத் பணியாற்றுவதற்குப் பொருத்தமான நபர் என்றே கூறுவேன் என்கிறார் குணால். மேலும் "ஒரு தொழில்முன்முயற்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற பலருக்கு நானே முன் மொழிவேன், ஏனென்றால் இதுதான் நிகழ்வுகளுக்கான களம், இங்குதான் உங்களுக்கு அளவற்ற வாய்ப்புகள் வழங்கப்படும், தினமும் ஒவ்வொரு புதிய விஷயங்களை கற்க உதவும் இடம் இதுவே" என்றார் நிறைவாக.