கார்ப்பரேட்டில்  தலைமைப் பொறுப்பு, சமூக ஆர்வலர், பெண்கள் மேம்பாட்டில் ஈடுபாடு என பன்முகம் கொண்ட மீரா மேனன்! 

கார்ப்பரேட் பணியுடன் எண்ணற்ற சமூக நோக்கங்களுக்காகவும் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த மீரா ஜே மேனன், தற்போது கோவை ஆம்பயர் எலக்ட்ரிக் நிறுவன சிஓஓ-வாக இணைந்துள்ளார்.

0

மீரா மேனன் ஊபர் கார்ப்பரேட் இந்தியாவுடன் பணியாற்றியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அதன் காப்பீட்டுக் கொள்கைகளை வடிவமைக்க உதவியுள்ளார். பணவசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்களது படிப்பை முடிக்க உதவுவதற்காக ஒரு அரசு சாரா நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இவ்வாறு இவர் செயல்படாத பிரிவுகளே மிகவும் குறைவு எனலாம்.

கார்ப்பரேட் வாழ்க்கையையும் சமூகப் பொறுப்புகளையும் தொடர்ந்து சிறப்பாக சமன்படுத்தி வந்தார். வெவ்வேறு பொறுப்புகளையும் மிகவும் எளிதாகக் கையாண்டார். இவையே அவர் ஒரு நம்பகமான தலைவர் எனபதற்கான அறிகுறிகளாகும்.

மீரா ஜே மேனன் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவின் முன்னணி நிறுவனமான ஆம்பயர் வெஹிகில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சிஓஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் தலைமைப் பொறுப்புகளை சிறப்பாக வகிக்கமுடியாது என்கிற தவறான நம்பிக்கையைத் தகர்த்து தனது பணி வாழ்க்கை முழுவதும் இதை நிரூபித்தார்.

மீரா சென்னையில் வளர்ந்தார். அவருக்கு வான் இயற்பியல் பகுதியில் ஆர்வம் இருந்தது. அதில் வாய்ப்புகள் குறைவு என்பதால் மீரா பட்டயக் கணக்காளரானார். முதலில் எல்ஐசி-யில் கார்ப்பரேட் நிதிப்பிரிவில் இருந்தார். பிறகு தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு மாறினார். இந்தப் பிரிவில் அதிக ஆர்வம் இருந்ததை உணர்ந்தார். டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்து ஆலோசகர், ட்ரெயினிங் ஹெட் என இறுதியாக லைஃப் அண்ட் பென்ஷன்ஸ் க்ளோபல் ஹெட் ஆனார். உலகம் முழுவதும் பயணித்தார்.

சமூக மேம்பாடு

ஆனால் தாம் செயல்படுவதிலிருந்து மாறுபட்ட ஒன்றில் ஈடுபடவேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டதால் மீரா சற்றே நிதானித்து தனக்குள் கேள்வியெழுப்பிக்கொண்டார்.

”டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்கும் தகுதிபெற்றபோது தொழில் ரீதியாக சாதித்திருந்தபோதும் சமூகத்திற்கு எந்த விதத்திலும் பங்களிக்கவில்லை என்கிற உணர்வு ஏற்பட்டது. டிசிஎஸ் நிறுவனத்தில் முழு நேரப் பணியில் இணைவதற்கு பதிலாக சிக்கலான சூழலில் மட்டும் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.” 

வெவ்வேறு அரசு சாரா நிறுவனங்களைத் துவங்கி வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டேன். பாரம்பரியமாக பின்பற்றும் பணிகள் அல்லாத நர்சிங், கார் அல்லது ஆட்டோ ஓட்டுதல், டிடிபி ப்ரொஃபஷனல்கள் உள்ளிட்ட பணிகளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஏழை பெண்களின் திறன்களை மேம்படுத்த உதவும் ANEW மேலாண்மைக் குழுவில் இருந்தேன். ANEW வளர்ச்சிக்கு பங்களித்ததும் எனக்கு அதிக உற்சாகம் பிறந்தது. சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைல்ட் ஹெல்த்தில் புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு விளையாட்டு வாயிலாக சிகிச்சையளிக்கும் CANSTOP–ல் தன்னார்வலராக இணைந்தேன்,” என்றார்.

சுகாதாரத் துறையில் இணைந்த பிறகு இதில் மேலும் பங்களிக்கத் தூண்டியது. சமூக நோக்கத்துடன் செயல்படும் குழந்தை மருத்துவரான சாய்லஷ்மி பலிஜெபள்ளி உடன் இணைந்து சுகாதாரத் துறையின் பொது-தனியார் கூட்டாண்மையில் கவனம் செலுத்தும் ஏகம் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் ட்ரஸ்டி ஆனார். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றினார்.

உதவிக்கரம்

கோயவைக்கு குடிபெயரவேண்டியிருந்ததால் மீராவின் சமூக வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும் கார்ப்பரேட் பொறுப்புகளின் தீவிரம் குறைந்தது. 

”பணப்பற்றாக்குறையுள்ள குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்கிற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் INTRUST என்கிற அரசு சாரா நிறுவனத்தைத் துவங்கினேன். இதன் மூலம் அந்தக் குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தைக் கட்டுவதற்கோ அல்லது மருத்துவ ரீதியாக நலம்பெறுவதற்கோ உதவுகிறோம். ஒவ்வொருமுறை INTRUST ஒரு குழந்தையின் படிப்பிற்கு உதவும்போதும், அவருக்குப் பணி கிடைத்து அந்தக் குடும்பம் சமூகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சிப்பாதையில் பயணிக்க உதவுகிறோம் என்கிற மனதிருப்தி ஏற்படுகிறது,” என்கிறார் மீரா.

மேலும் தலசீமியா வெல்ஃபேர் சொசைட்டியின் கோவை சேப்டரை துவங்கினார் மீரா. “உள்ளூர் மருத்துவமனையுடன் இணைந்து அந்தப் பகுதியின் குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்க உதவுகிறோம். தொடர் சிகிச்சை மூலமாகவும் நிதி மற்றும் வழிகாட்டல் மூலமாகவும் தலசீமியா பாதித்த குழந்தைகள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறோம்,” என்றார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

ஆம்பயர் நிறுவனர் மற்றும் சிஇஓ ஹேமலதா அண்ணாமலை அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது வருங்கால சந்ததியினருக்காக கிரகத்தை பாதுகாக்கவேண்டும் என்கிற ஆர்வம் அங்கு பூர்த்திசெய்யப்படும் என்பதை உணர்ந்தார். இவ்வாறுதான் ஆம்பயரில் சிஓஓ-வாக அவரது புதிய பொறுப்பு துவங்கியது.

”ஆம்பயர் புதிய தொழில்நுட்பம், புதிய தயாரிப்புகள், வளர்ந்து வரும் துறையின் சவால்கள், பெரிய சந்தைப்பகுதி, ஆரோக்கியமான போட்டி என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தது. உருவாக்குதல், ஆவணப்படுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்முறைகளில் ஈடுபடத் துவங்கி அதே நேரம் அந்தச் செயல்முறைகள் மீண்டும் நடக்கும் விதத்திலும் கணிக்கும் விதத்திலும் அமைத்தேன்.”

அரசாங்கம் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு பெரியளவு உந்துதல் அளித்து வருவதால் அனைத்து முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கியுள்ளனர்.

”நம்மை நிலைப்படுத்திக்கொள்ள நாம் வளர்ச்சியடையவேண்டும். எனவே உற்பத்தியை அதிகரிப்பது, ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல், ’மேக் இன் இந்தியா’ கனவை செயல்படுத்துதல் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்த தீர்மானித்தேன். உற்பத்தியில் பெண்கள் எளிதாக ஈடுபடுவது ஆச்சரியத்தை அளிப்பதால் அதை சாதகமாக்கிக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் மீரா.

இளம் பெண்களை குறிப்பாக ஆம்பயர் பணிபுரியும் கிராமப்புற அமைப்புகளில் இருக்கும் பெண்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முற்றிலும் பெண்களைக் கொண்ட இ-சைக்கிள் உற்பத்தி யூனிட்டை கோவையில் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார் மீரா.

”தொழிற்சாலையில் உள்ள பெண்கள் தைரியமற்றவர்களாக இருப்பது போல் தோன்றினாலும் அவர்கள் வலுவாகவும் முழுமையை அடையும் நோக்கத்துடனும் பணிபுரிகின்றனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து சவாலாக இருப்பதால் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் ஒரு வரப்பிரசாதமாகும். பெண்களின் சக்தியையும் சைக்கிளுக்கான சந்தையும் இணைக்கும் வகையில் கோயமுத்தூர் சந்தைக்கு சேவையளிக்கும் உற்பத்தி யூனிட்டை உருவாக்க உள்ளேன். நான்தான் எனது முதல் வாடிக்கையாளர். எங்களது சைக்கிளை சோதனை செய்ய வார இறுதிநாட்களில் நான் அதில் பயணம் செய்வேன். வெவ்வேறு பாகங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் பார்ட்னர்ஷிப்பில் இணைவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது,” என்றார் அவர்.

ஆம்பயரில் தனது பொறுப்புகள் குறித்து மேலும் விவரிக்கையில் ஆண்களை மையமாகக்கொண்ட நிறுவனங்கள் என்பது மாறிவருகிறது என்கிறார். 

“எங்களது கொள்கைகளை பெண்களை மையமாக் கொண்டுள்ளதாக உருவாக்குவதில் தீவிரமாக உள்ளோம். உதாரணத்திற்கு நெகிழ்வான பணி நேரம், படைப்புத்திறனுடன்கூடிய அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தல், தொழிற்சாலையில் வசதியான ஆடையணிதல், குறைவான சுமைகளை சுமக்கும் வகையில் பொறுப்புகள் வழங்குதல் உள்ளிட்ட கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.”

வணிகங்களில் பெண்கள் சிறப்பிக்கின்றனர்

பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் விதம் மாறுபட்டது என்கிறார் மீரா. எனவே அவை குடும்பம் சார்ந்ததாகவும் குறைவான லட்சியங்களைக் கொண்டதாகவும் அடுத்தவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. உண்மையில் பெண்கள் மக்களை சிறப்பாக கையாள்வார்கள், சிறப்பான மேலாளர்களாக இருப்பார்கள், ஆர்வத்துடன் முயற்சியில் ஈடுபடுவார்கள், தோல்வியைக் கண்டு அஞ்சி பின்வாங்கமாட்டார்கள். பல்வேறு பணிகளை திறம்பட செய்துமுடிக்கும் குணாதிசயம் அவர்களது உடன்பிறந்ததாகும். பல்வேறு பொறுப்புகளையும் சிரமமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.

”பெண்கள் பல போராட்டங்களை சந்தித்து அவற்றை எதிர்கொண்டு உயர் பதவி வகிக்க முடியும் என்பதோ அவர்களால் வணிகத்தை சிறப்பாக வளர்ச்சியடையச் செய்யமுடியும் என்பதோ அதிகமாக பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. சமூகம், அரசியல், வணிகம் என அனைத்திலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உயர் நிலையை எட்டுவது சாதனையாக வெளிப்படுத்தப்படுவதில்லை என்பது உலகளவிலான பொதுவான கருத்தாகும். ஆனால் இந்தியா, அமெரிக்கா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்த வேறுபாட்டை உற்றுநோக்குகிறது.”

வளர்ச்சியை நோக்கி…

சிஓஓ-வாக ஆம்பெயர் நிறுவனத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மீரா. ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் முதலில் கோவை நகரையும் பின்னர் அதன் பகுதிகளையும் தலசீமியா பிறப்புகளற்ற பகுதியாக மாற்றும் திட்டத்திலும் பணியாற்றி வருகிறேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன்

Related Stories

Stories by YS TEAM TAMIL