'எனது வீட்டுக்கு விருந்தினராக வாருங்கள்..​' வெள்ளத்தில் சிக்கியவர்களை அழைத்த மம்மூட்டி!

0

சென்னையில் வாழ்ந்து வரும் கேரளா மெகா ஸ்டார் மம்மூட்டியின் காலம் அறிந்து செய்த உதவி மழை வெள்ளத்தில் சிக்கிய சென்னை மக்களுக்கு பேர் உதவியாக அமைந்தது.

ஒரு பக்கம் சென்னையை மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அடையாறு பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்ததால் சென்னையே வெள்ளக் காடானது. தத்தளிக்கும் மக்களின் நிலைமையை உணர்ந்த மம்மூட்டி உடனடியாக ஃபேஸ்புக்கில் வாயிலாக களத்தில் குதித்தார். se

அண்ணா ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன்களில் சிக்கி உள்ளவர்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைப்பதாக அறிவித்தார். அதுபோல் அண்ணா நகர், சூளைமேடு, அமிஞ்சகரை, எம்.எம்.டி.ஏ. காலனி போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து அவதிப்படுவோர் தமது வீட்டுக்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல சென்னையிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட தமது நண்பர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய வீடுகளிலும், அடுக்கு மாடி குடியிருப்புக்களிலும் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்து அவர்களுடைய தொலைபேசி எண்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

மம்மூட்டியின் இந்த 'காலத்தினால் செய்த உதவி'யால் பயன் பெற்றவர்கள் பலர்.

அதே போல் நடிகை மஞ்சு வாரியார் முதல் நபராக பணம் கொடுத்து உதவியிருக்கிறார். ஒரு லட்ச ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்க தலைவரிடம் வழங்கியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த மற்ற நடிகர், நடிகையர் மொத்தமாக வசூல் செய்து ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

மலையாளத்தில்: முகேஷ் நாயர்| தமிழ்ல்: ஜெனிட்டா