காது கேளாத, வாய் பேச முடியாத சாஜி தாமஸ் மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு உருவாக்கிய விமானம்!

0

கேரளாவின் தொடுபுழா மாவட்டத்தைச் சேர்ந்த சாஜி தாமஸ் தான் பிறந்த மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார். பள்ளியில் பாதியில் படிப்பை விட்ட அவர், ஒரு முழு வடிவ விமானத்தை தானே வடிவமைத்துள்ளார். 

குழந்தை பருவம் முதலே விமானங்களால் கவரப்பட்ட சாஜி, அதை வடிவமைக்கத் தொடங்கியபோது பலரும் அவரை கேலி செய்துள்ளனர். ஆனால் அவரோ யாருடயை பேச்சையும் கேட்காமல், அதற்கு பதிலளிக்காமல் தன் பணியில் கவனம் செலுத்தினர். உண்மையில் அவரும் காதுக்கும் கேட்காது, வாய் பேசவும் முடியாது என்பதே. 44 வயதில் இச்சாதனையை செய்துள்ள சாஜி, தன்னை ஏளனம் செய்தவர்களை புன்சிரிப்புடன் நோக்குகிறார். 

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்திகளின் படி, சாஜியின் முயற்சி நிதானமாக, கடுமையான உழைப்பை அடங்கியது. நிதி பற்றாக்குறையோடு நாள் முழுதும் பணி செய்தார். ஒரு விமானத்தை கட்டமைக்க அவருக்கு 5 ஆண்டுகள் ஆனது. சந்தையில் 25 லட்ச ரூபாயில் தயாரிக்கப்படும் அதே வகை விமானத்தை, 14 லட்ச ரூபாய் செலவில் சாஜி வடிவமைத்துள்ளார். மறுசுழற்ச்சிப் பொருட்களை பயன்படுத்தி, மலிவான விலையில் இரண்டு பேர் அமரக்கூடிய எடைக்குறைவான விமானத்தை உருவாக்கியுள்ளார். Saji X-Air என்று அதற்கு பெயரிட்டுள்ளார்.   

சாஜிக்கு பல திட்டங்கள் உள்ளது. அவரது மனைவி மரியா ரெடிஃப் பேட்டியில் கூறியபோது, அவர் உருவாக்கிய விமானத்துக்கு லைன்சன்ஸ் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“ப்ளேன்களை தவிர சாஜியால் வேறு எதைப்பற்றியும் யோசிக்கமுடியாது. அவர் வடிவமைத்துள்ள விமானம் பறக்கக்கூடிய வகையில் உள்ளது. ஆனால் லைன்சன்ஸ் இருந்தால் மட்டுமே 20 அடிக்கு மேல் பறக்கவைக்க முடியும். அவருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். இன்னும் அவரால் நிறைய சாதிக்கமுடியும்,” என்றார்.
குடும்பத்துடன் சாஜி தாமஸ்
குடும்பத்துடன் சாஜி தாமஸ்

சாஜியின் அடுத்த திட்டமான இரண்டு இன்ஜின் பொறுத்தப்பட்ட விமான வடிவமைப்பு வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த விமானம் ஓடு பாதையில் ஓடாமலே நேரடியாக மேலே பறக்கமுடியும் வகையில் வடிவமைக்கிறார். மலையாள திரைப்பட இயக்குனர் சந்தோஷ் எச்சிகானம் என்பவர் சாஜியின் கதையை படமாக்க கதை எழுதி வருகிறார். இவை எதைப்பற்றியும் கவலையின்றி மெளனமாக தன் கண்டுபிடிப்புப் பணிகளை தொடருகிறார் இந்த காது கேளாத, வாய் பேசமுடியாத கனவுகளை சுமக்கும் சாஜி தாமஸ். 

கட்டுரை: Think Change India