இன்ஜினியர் வேலையை விட்டு  ஜம்போ கோவா பழங்கள் விற்பனை செய்யும் நீரஜ்!

0

ஹரியானா ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சங்கத்புரா எனும் கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் தண்டா ஒரு இன்ஜினியர். ஆனால் அவருக்கும் கோவா பழங்கள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன் பொறியாளர் வாழ்க்கையை விட்டுவிட்டு கோவா விளைச்சலில் ஈடுபட்டார்.

பொறியியல் படிப்பை முடித்த நீரஜ் ஒரு டெவலப்பராக சில காலம் பணியாற்றினார். ஆனால் தன் கிராமம் மற்றும் குடும்பத்தினர் மீது இருந்த அன்பு காரணமாக தன் வாழ்க்கையை அங்கேயே கழிக்க முடிவெடுத்தார். தன் ஊரில் கொய்யா பழங்கள் நன்கு விளையும் என்பதால் அதை பயிரிட்டு விளைத்து, பெரிய நகரங்களில் விற்க தீர்மானித்தார் நீரஜ்.

ராய்பூரில் இருந்த நீரஜ் இந்த சிறப்புவகை கோவா பழங்கள் பற்றி தெரிந்து கொண்டார். பெரிதாக, அழகாக காணப்படும் இந்த வகை கோவாக்கள் பார்ப்பவர்களை சாப்பிடத் தூண்டும். அதே வகை கோவாக்களை தன் கிராமத்தில் விளைவிக்க தயார் வேலைகளை தொடங்கினார்.

ஏழு ஏக்கர் நிலத்தில் நீரஜ் 1900 கொய்யா விதைகளை விதைத்தார். விதைகளை ராய்பூரில் இருந்தே வாங்கினார். விலை அதிகமாக இருப்பினும் அந்தவகைகளை விளைவிக்கவே தீவிரமாக இருந்தார். 

இப்போது அவை வளர்ந்து மரங்களாகி பழங்களை தரத்தொடங்கி உள்ளது. ஒரு மரம் கிட்டத்தட்ட 50 கிலோ கோவா பழங்களை தந்துள்ளது. இந்த கோவா பழங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் ஒருவரால் இதை முடிக்க முடியாது. 

பழங்கள் கெடாமல் இருக்க நீரஜ் போம் சேர்த்து, அதை மழை, வெயில் மற்றும் பூச்சிகளில் இருந்து காக்கிறார். பழம் பெரிதாக வளரும் வரை சரியான தட்பவெப்பத்தில் பாதுகாக்கிறார்.

ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை சத்துக்களை சேர்க்கிறார் நீரஜ். இதனால் ஜம்போ கொய்யாக்கள் ஆரோக்கியமாக உள்ளது. தேவையான தண்ணீருக்காக தன் நிலத்தின் அருகில் ஒரு குளம் அமைத்தார். அருகாமை கால்வாயில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு விளை நிலங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது. 

ஜம்போ கொய்யா பழங்களை நேரடியாக மார்கெட்டில் விற்காமல் ஆன்லைனில் விற்கிறார். பல்க் ஆர்டர் கிடைத்தவுடன் டெல்லி, சண்டிகர் என்று எல்லா இடத்திலும் டெலிவரி செய்கிறார். Door Next Farm என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி அதில் வர்த்தகத்தை செய்கிறார். கோடைக் காலம், குளிர் காலம் என்று எல்லா நேரங்களிலும் விளையும் கோவா பழங்களை ஒரு கிலோ 500 ரூபாய் என்று விற்பனை செய்கிறார் நீரஜ்.