தமிழ்நாடு மீனவ சங்க உதவியுடன் மீன்களை நேரடியாக விற்பனை செய்யவுள்ள மீனவர்கள்!

தங்களின் சமூக வாழ்வாதார வளர்ச்சிக்க்காக மீன்வர்களே முன்னெடுத்துள்ள கூட்டுறவுச் சங்கம்.

0

தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவ கூட்டமைப்புகள் ஒன்று கூடி, ‘பாரம்பரிய மீன் விற்பனை கூட்டுறவு சங்கம்’ அமைத்து, உள்ளூர் மீனவ மகள்ளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்க திட்டமிட்டுள்ளனர்.

தென்னிந்திய மீனவ நலச்சங்கம், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், பாரம்பரிய மீனவர் சங்கம் மற்றும் அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கம் ஆகியவை அந்த நான்கு சங்கங்கள் ஆகும். புதிய கூட்டுறவு சங்கத்தின் கீழ் சில்லறை கடைகள் மாநிலமெங்கும் திறக்கப்பட்டு, மீன் விற்பனையில் ஈடுபடும், அதன் முதல் கிளை நொச்சிக்குப்பத்தில் துவக்கப்படும்.

அண்மையில் மீன்களில் ஃபார்மலின் என்ற கெமிக்கல் கலக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்த கெமிக்கல் சட்டவிரோதமாக மீன் பதப்படுத்தலில் சில வணிகர்கள் பயன்படுத்தியதாக தெரியவந்தது. இது போன்ற செய்தியால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சத்தில் இருந்தனர்.

இதற்கெல்லாம் பதிலாக இந்த மீனவ கூட்டுறவு சங்கம், தரமான, ஃப்ரெஷான மீன்களை சரியான விலையில் விற்க முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கே.பாரதி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு பேட்டி அளிக்கையில்,

“முன்பெல்லாம் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை இடைத்தரக வர்த்தகர்களிடம் விற்க நேரிடும். அவர்கள் மீன்வர்களின் வாழ்வாதாரம் பற்றி கவலையில்லாதவர்கள். எங்களின் சில்லறை கடைகள் மூலம் தரமான மீன்களை வாடிக்கையாளர்கள் பெற வழி செய்ய இருக்கிறோம். எந்தவித கெமிக்கல் கலப்பின்றி மீன்கள் விற்பனை செய்வோம்,” என்றார்.

தனிப்பட்ட முறையில் மீனவர்கள் விற்பனை செய்து நஷ்டம் அடைவதால், இந்த கூட்டமைப்பின் சில்லறை கடைகள் தகுந்த முறைப்படி செயல்பட்டு அவர்களுக்கு சரியான லாபத்தை அளிக்கும். மேலும் இக்கடைகளில் சமைக்கப்பட்ட மீன் உணவுவகைகளும் விற்பனை செய்யப்படும் மீனவ சமுதாயப் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க உள்ளது. 

இக்குழுவினர் புதுவகை மீன்களை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்து விற்பனை செய்யும்.