ஃபிலிப்கார்ட்-வால்மார்ட் ஒப்பந்தம்  நம் முன் வைக்கும் பல அச்சுறுத்தும் கேள்விகள்...!

0

ஆரம்பத்தில் ஃபிலிப்கார்ட்-வால்மார்ட் ஒப்பந்தம் ஸ்டார்ட்-அப் துறையில் பலர் எதிர்ப்பார்த்த மிகப்பெரிய வெற்றி என்று தெரிந்தாலும்; தற்போதைய சில வளர்ச்சியால் பதிலில்லா பல கேள்விகள் நம் முன் தோன்றுகிறது.

கடந்த ஞாயிறு மதியம் 12.38 அளவில் ESOPs (பணியாளர் பங்கு உரிமையாளர் திட்டம்) உள்ள 300 முன்னாள் ஃபிலிப்கார்ட் பணியாளர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்தப்படி மோசமான செய்தி மின்னஞ்சல் மூலம் வந்தது.

பெறப்பட்ட மின்னஞ்சலின் தலைப்பு: “முன்னாள் ஃபிலிப்கார்ட் பணியாளர்களுக்கு உள்ளிருப்பு பங்கு விருப்பங்களை பணமாக்கும் வாய்ப்பு”

அந்த மின்னஞ்சல் படி வால்மார்ட்க்கு விற்கப்பட்ட 77 சதவீத பங்குகளில் வெறும் 30 சதவீத பங்கு மட்டுமே நிறுவனத்திற்குள் இருந்து விற்கபப்டும். மீதமுள்ள 70 சதவிகித ESOP (employee stock ownership plan) கள் பற்றிய எந்த விவரமும் இல்லை.

மீதமுள்ள பங்குகள் அடுத்து வரும் ஐபிஓ போன்ற      போது தான் பகிர்ந்தளிக்க முடியும்; ஆனால் இது ஏற்கதக்க தீர்வாக இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்கள், இது எப்படி நியாயம் ஆகும்? எங்களை மட்டும் ஏன் வித்தியாசமாக நடத்துகிறார்கள்? என கேள்விகள் எழுப்புகின்றனர்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இன்றைய ஃபிலிப்கார்ட் பணியாளர்கள் தற்போது 50 சதவீத பங்குகள் வரை வைத்திருக்க முடியும், அடுத்த வருடம் மீதமுள்ள 25 சதவித பங்கு, மீதம் அதற்கு அடுத்த ஆண்டு. இதனால் பணியாளர்கள் இடையே எழும் கேள்வி என்னவென்றால், இதே பங்கு வீதம் ஏன் முன்னாள் பணியாளர்களுக்கு இல்லை என்பது தான்.

இது குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் ஃபிலிப்கார்ட்க்கு அளித்த மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் இல்லை.

இவர்கள் எல்லாம் ஃபிலிப்கார்ட்டுக்காக நன்கு உழைத்தவர்கள், இல்லையேல் இவர்களுக்கு ESOP கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த பணியாளர் பங்கு அவர்களின் உழைப்பிற்கும், அவர்கள் இந்நிறுவனத்திற்கு ஏற்படுத்தித் தந்த நன்மைக்குமான ஊதியம். தற்பொழுது அவர்கள் ஃபிலிப்கார்டின் பணியாளர்களாக இல்லாமல் போகலாம், அதற்காக வைப்புக் காலத்தை நிறைவு செய்த பங்குகளை பணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை அவர்களிடம் இருந்து பறிக்க முடியாது.

பணியாளர்கள் வெளியேறும் போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பணமாக்குவது உண்மை தான் என்றாலும்; வெளியேறும்போது பங்குகளை பிரிக்கமுடியாமல் வெளியேறிய பின்னும் பணியாளர்கள் பங்குகளை வைத்துகொள்ள நிறுவனங்கள் அனுமதிப்பது உண்மைதான். கடந்த அக்டோபர் மாதம் மருவாங்குதலை ஃபிலிப்கார்ட் நிறைவேற்றிய போது, முன்னால் பணியாளர்கள் 10 சதவீத பங்குகளை பணமாக்கலாம் என்றும், இன்றைய பணியாளர்கள் 25 சதவீத பங்குகளை பணமாக்கலாம் என தெரிவித்தது. முன்னாள் பணியாளர்களின் மொத்த பங்கின் மதிப்பு தோராயமாக 300 மில்லியன் டாலர் ஆகும்.

ஃபிலிப்கார்டின் இந்த விற்பனை, இ-காமர்ஸ் துறையில் மிகப் பெரிய கையகபப்டுத்துதல், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் துறையின் சிறந்த எதிர்காலத்தை பார்த்து கொண்டாடும் தருணமாக தான் இருந்தது. ஆனால் அந்த கொண்டாட்டம் மேல் கூறிய செய்தியை கேட்டதும் மறைந்துவிட்டது, பல கேள்விகள் மனதிற்குள் எழுந்தது: 

தற்போது பதவியில் இருப்போர்கள் தங்களது முன்னாள் குழுவினர்களுக்காக நிற்பார்களா? நிறுவன வாரியம் ஒரு நீண்ட கால பார்வையுடன் இதை அணுகுகிறதா? நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஓர் காரணமாய் இருந்த பணியாளர்களுக்காக குரல் கொடுக்க எவரேனும் முன் வந்தனரா?

கூடியவிரைவில், வால்மார்ட் புது இயக்குநர்கள் குழுவை அமைக்கும், இந்த கலாச்சாரத்தை தான் அவர்கள் பரப்புவார்களா? இன்னும் பரவும் வதந்திகள் என்வென்றால், விரைவில் வால்மார்ட் 85 சதவீத பங்குகளை ஒருவருடத்திற்குள் வாங்கும், தற்போதைய மற்றும் சாத்தியமான பணியாளர்கள் ESOPயில் வால்மார்ட்டின் அணுகுமுறையை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

உலகின் மற்ற ஸ்டார்ட்-அப் களுக்குள் பார்த்தால், ESOP கள் உண்மையான மதிப்பைக் கொண்டுள்ளது; பல மில்லினியர்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் ESOPக்கான உண்மையான மதிப்பு கிடைப்பதில்லை? ஒரு வேலை இது இந்தியர்கள் முழித்து கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கலாம், ESOP கள் உண்மையில் உயர் ஆபத்து கருவியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எப்படி தங்கள் வளர்ச்சிக்கான உண்மையான திறனை ஈர்க்கும்?

ஆங்கில கட்டுரையாளர்: யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரதா ஷர்மா | தமிழில்: மஹ்மூதா நௌஷின்