இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக பதவி ஏற்கும் சுபாங்கி ஸ்வரூப்!

0

எழுபது வருட சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பெண் ஒருவர் கடற்படை பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பெருமைக்குரியவர் உத்தரபிரதேஷை சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் ஆவார்.

சுபாங்கி, உத்தரபிரதேஷ் மாநிலத்தில் உள்ள பரேல்லி என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் கேரள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை கல்விச்சாலையில் முதல் பெண் அதிகாரி தொகுப்பில் ஒருவராய் இணைந்து தேர்ச்சி பெற்றவர்.

VIT கல்லூரியில் பயோ தொழில்நுட்பப் பொறியியல் முடித்த இவர் ஒரு தேசிய டேக்வாண்டோ (கொரிய தற்காப்புக்கலை) சாம்பியன் ஆவார். இவர் முதல் பெண் கடற்படை பைலட்டாகி வரலாறு பேசும் நிகழ்வை துவங்கி வைத்துள்ளார். கடற்படை அதிகாரியான அவரது தந்தை ஞான் ஸ்வரூபின் பாதையை பின் பற்றி இந்த இடத்தை அடைந்துள்ளார் சுபாங்கி.

தந்தை ஞான் ஸ்வரூப் உடன் சுபாங்கி
தந்தை ஞான் ஸ்வரூப் உடன் சுபாங்கி

இதனை தொடர்ந்து டெக்கான் கிரானிக்களுக்கு பேட்டியளித்த சுபாங்கி தந்தை ஞான்,

“தன் பொறியியல் படிப்பை முடித்தவுடன் பாதுகாப்புப் படையில் இணையவே என் மகளுக்கு ஆர்வம் இருந்தது. அதிலும் டேக்வாண்டோ கலையில் தங்க பதக்கம் வென்ற அவர் பாதுகாப்புப் படையில் இணைவதையே கனவாக வைத்திருந்தார்,” என்றார்.

சுபாங்கியின் தாய் கல்பனா ஸ்வரூப் விசாகப்பட்டனத்தில் உள்ள நேவி குழந்தைகள் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்,

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக ஆன சுபாங்கி மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்க விரும்புகிறார். பெண்கள் கடற்படைக்கு வரவேண்டும் என்கிறார். அதோடு தனக்கு கிடைத்துள்ள பதவியின் பொறுப்பை அறிந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பேசிய சுபாங்கி,

“இது ஒரு சிறந்த வாய்ப்பு மட்டும் அல்ல; இத்துடன் பெரிய பொறுப்பு உள்ளது என்பதையும் நான் அறிவேன்,” எனக் கூறினார்.

பணியில் இணையும் முன் சுபாங்கி ஒரு வருடம் ஹைதராபாதில் உள்ள தண்டிகள் விமானப்படையில் பயிற்சிப் பெறுவார்.

சுபாங்கி முதல் கடற்படை பைலட்டாக தேர்வான நிலையில் அவருடன் பயிற்சிப் பெற்ற நண்பர்கள் மூன்று பேர் கடற்படை ஆயுத சோதனை கிளையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கட்டுரை: Think Change India