நிறுவனத்தையும் தொழிலாளர்களையும் இணைக்கும் 'ஹால்வேஸ்'

0

எந்தவொரு அமைப்புக்கும் ஒரு குழு என்பது ஒரு பெரும் சொத்தாகும். எனினும் ஒரு பெரிய குழுவை உருவாக்குவதும் அதன் ஆற்றலைக் கொண்டு பயன்களை அடைவதும் மிகவும் கடினமான பணியாகும்.

நிறுவன சமூக ஒருங்கிணைப்பு மேடையான ஹால்வேஸ், நிறுவனத்தில் இணைப்பை ஏற்படுத்துவது எப்படி, பணியாளர்களின் திறன்களை அடையாளம் காணுதல், சிந்தனைகளை பரிமாறிக் கொள்ள உதவுதல், முடிவைச் செயல்படுத்துதல் மற்றும் கூடுதலான திருப்தியை அளிக்கும் பணித்திறனை உருவாக்குதல் ஆகியவற்றைத் தெரிந்து கொண்ட ஒரு துடிப்பான முன்னோடியாக திகழ்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்நுட்ப அறிவாற்றல் நிறைந்த சயிப் அகமது இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து கம்ப்யூட்டர் அறிவியலில் பட்டம் பெற்ற அவர், தொழில்துறையில் 14 ஆண்டு அனுபவம் பெற்றவர். மிக முக்கியமாக அவர் வர்த்தக நிறுவனங்கள் உலகத்தரமான தொழில்நுட்ப இணைப்புத் தீர்வுகளை அளிப்பதில் கண்ணோட்டம் கொண்டவர்.

விர்ஜினியாவில் டெல்வேர் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட "ஹால்வேஸ்" (Hallwaze) தன்னை அனைத்து நிறுவனத் தேவைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடிய ஒற்றை மேடையாக முன்னிறுத்திக் கொள்கிறது. தொழிலாளர்களை இணைத்தல் (ஒன்றுபடுத்தி ஊக்கப்படுத்துதல்), தொடர்பு மையம், வெளிப்படைத்தன்மையின்மை, வளர்ச்சி வாய்ப்புகளை விரைவாக அடையாளம் காணுதல் போன்றவற்றுக்காக போராடும் நிறுவனங்களின் சவால்களுக்கு இது விடை காண்கிறது.

இது பணியாளர்கள், வர்த்தக பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் இணையத்தில் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்வது, அல்லது கேள்விகளை எழுப்புவது ஆகியவற்றை மேற்கொள்ள இது உதவுகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் அதற்கு பதிலளிப்பது அல்லது அந்தப் பதிவுகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இந்த உரையாடல்கள் பின்னர் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

இந்த வலைத்தளம் பணியிடத்தில் சமூகத்தின் ஆற்றலைக் கொண்டு வருவதாக ஹால்வேஸ் இணையப்பக்கம் கூறுகிறது. பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள இதேபோன்ற இதர மேடைகள் குறித்து கேட்டபோது, ஹால்வேஸ்சின் நிறுவன சிஇஓ சயீப் கூறுகையில், "மக்கள் குழப்பம் நிறைந்த மென்பொறுகளை வெறுக்கத் தொடங்கி விட்டதுடன், அவற்றை புறக்கணிக்கவும் தொடங்கி விட்டனர். இது பயன்பாட்டிற்கு எளிமையாக இருப்பது தான் இந்த மேடையின் சிறப்பு. பயன்பாடுகளில் காணப்படும் குழப்பம் காரணமாக இதே போன்ற இதர மேடைகளை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன" என்றார்.

"மேலும் பெரும்பாலான இஎஸ்என்கள்வெறும் உள்ளக்கத்தில் மட்டும் கண்ணோட்டம் செலுத்துகின்றன, ஒரு கிளிக்கில் தகவல்களை அணுகுவது மிகவும் முக்கியமானது. எங்களது தேடியந்திரம் கேட்டலாக்குகளை பட்டியலிடுவதுடன் ஒவ்வொரு தகவலையும் குறிச்சொல்லாக்குகிறது. இது மெட்டாடேட்ட அடிப்படையிலான தகவல்களையும் தேடுகிறது" என்கிறார் தற்போது உலகளாகிய செயல்பாடுகளுக்கு தலைமையேற்றுள்ள நிறுவனர்.

புத்திகூர்மையான ப்ரோபைலிங், உள்ளடக்கங்களை தொகுத்தல், பரிந்துரைகள் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களுடன் உள்ளடக்கங்களை ஒருநிலைப்படுத்துவது ஆகியவை இந்த இஎஸ்என் மேடையின் சிறப்புக்களாகும்.

"இந்த உள் ஒருங்கிணைப்புக் கருவி நீங்கள் தொழிலாளர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது, அவர்களது திறன்களை கண்டறிதல் மற்றும் தற்போதைய மனித மூலதனத்தை புதிய வாய்ப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றை மேற்கொள்ள உதவுகிறது" என்பது நிறுவனங்களுக்கு ஹால்வேஸ் இணையதளம் அளிக்கும் செய்தியாகும்.

இது மட்டுமின்றி பணியாளர்களுக்கு அளிக்கும் செய்தியில் "உங்கள் மூத்த அதிகாரிகள், வழிகாட்டிகள், பல்வேறு பகுதிகளில் உள்ள சக பணியாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், நிபுணர்களை எளிதாக கண்டுபிடியுங்கள். இதன் மூலம் உங்கள் திட்டங்களை குழப்பங்களைத் தீர்வு கண்டுகொள்ளவும் உதவுகிறது. ஒத்த கருத்துள்ள சக பணியாளர்கள் மற்றும் வழிகாட்டுனர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்" என்பது பணியாளர்களுக்கு இந்த இணையதளம் அளிக்கும் செய்தியாகும்.

மிதமான துவக்கம்

நிறுவனத்தில் கலாச்சார ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் நடுத்தர, சிறு மற்றும் பெரும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னணி அதிகாரிகளையே இந்த நிறுவனம் குறிவைத்தது.

குறுகியகால மற்றும் நீண்ட கால வர்த்தக யுக்திகளை நடைமுறைப்படுத்துவதில், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் விற்பனையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் முக்கிய கண்ணோட்டம் கொண்டவராக இருந்த சயிஃப் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தார்.

"பல்வேறு திறன்களைக் கொண்ட ஒரு சிறு குழுவாக நாங்கள் உள்ளோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ, அதைச் செய்வோம். உலகம் முழுவதும் 60 உறுப்பினர்களைக் கொண்டதாக எங்கள் குழு இருந்தது. எங்களது பொருளை ஆதரிப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குழுவாக நாங்கள் இருந்தோம்" என்கிறார் அவர்.

வர்த்தக மாதிரியை விளக்கிக்கூறியஅவர், கட்டணத்துடன் சந்தா மற்றும் விளம்பர அடிப்படையிலான இலவச மாதிரி ஆகியவற்றை ஹால்வேஸ் அளிக்கிறது என்றார். கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 100 சதவிகித இந்திய சார்பு நிறுவனத்தையும் கொண்டிருப்பதுடன், 7 டாலர் மில்லியன் வருவாயையை குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. வருடாந்திர அடிப்படையில் இது 10 சதவிகித வளர்ச்சியை சந்தித்துள்ளது.

வெற்றியின் காரணமாக பெரும் ஊக்கம் பெற்றுள்ள சயீப் கூறுகையில், கூடுதல் நிதி பெறும் வகையில் மூலதனம் அளிப்பவர்களை அணுகிவருவதாக கூறினார். ஐரோப்பாவில் விரிவாகம் குறித்து திட்டமிடுவதுடன் உலகம் முழுவதும் விரிவாக்கத்திற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. "வடக்கு அமெரிக்கா மற்றும் தெற்காசிய சந்தையில் விரிவாக்கப்பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். 5000 பயன்பாட்டாளர்கள் கொண்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களிடம் உள்ளன" என்றார். இந்த நிறுவனம் சமீபத்தில் வடக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை நிறுவனத்துடன் கையொப்பமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பெரும் வரவேற்பும் சில சவால்களும்

இந்த மேடையைப் பயன்படுத்திய சில நிறுவனங்களிடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த மேடையின் மூலமாக பணியாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் பயன்களை சயிப் சுட்டிக் காட்டினார். அடிமட்டத்தில் நடக்கும் பணிகள் குறித்து உயரதிகாரிகள் தெரிந்து கொள்வது, பணியாளர்களின் நம்பிக்கையை பெறுவது மட்டும் விளம்பரத் தூதர்களை உருவாக்குவதில் பயன்களை காண முடிகிறது.

குறுகிய மனப்பான்மை கொண்ட நிறுவனங்களுடன் செயல்படுவதில்தான் பெரும் சவால்கள் உள்ளன. இத்தகைய சமூக மேடைகளை ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியச் சந்தையில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முன்னோடிகள் இதன் மதிப்பைக் காணும் போதிலும் இந்த வெளிப்படையான அணுகுமுறையில் என்ன அசாதாரண சூழல் வருமோ என அவர்கள் அஞ்சுகின்றனர் என்கிறார் ஹால்வேஸ் நிறுவனர்.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள ஹால்வேஸ் நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவைக் கொண்டிருப்பதுடன் கலாச்சார மற்றும் செயல் மாற்றங்கள் குறித்த பார்வையும் கொண்டவர்களாக உள்ளனர்.

இதே போன்ற பல மேடைகள் காரணமாக போட்டி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்ற வியப்பு ஏற்படுகிறது. இந்த போட்டி இருந்தாலும் அதற்கு சந்தையில் நிறைய வாய்ப்பு உள்ளது என்கிறார் சயிப். இந்த சந்தையின் மதிப்பு தற்போது 840 மில்லியன் டாலராக இருப்பதுடன் ஆண்டுக்கு 13.4 சதவிகித வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தத் துறையில் ஐபிஎம் கனெக்ஷன்ஸ் 13-14 சதவிகித பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜைவ் 10 சதவிகித மற்றும் யாமர் என்றும் சேல்ஸ்ஃபார்ஸ் சாட்டர் ஆகியவையும் முன்னணியில் உள்ளன.

இணையதள முகவரி: Hallwaze