மும்பை இளைஞர்கள் உருவாக்கிய தானியங்கி செஸ் போர்ட்

0

பாவ்யா கோஹில் மற்றும் அத்தூர் மேத்தா ஆகிய இருவரும் கே.ஜே.சோமையா பொறியியல் கல்லூரியில் சேர்ந்த போது அறிமுகம் ஆனார்கள். பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பலரும் ஒன்று நல்ல கிரேடு பெற துடித்தனர் அல்லது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் உண்மையை உள்வாங்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சில மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் அது தரும் ஊக்கம் மற்றும் உற்சாகத்திற்காக சேருகின்றனர். பாவ்யா மற்றும் அத்தூரிடம் பேசும் போது இருவரும் இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

“முதல் செமிஸ்டர் முதல் பாட திட்டத்துடன், ஓய்வு நேரத்தில் சின்ன தொழில்நுட்ப சாகச முயற்சி மற்றும் திட்டங்களில் ஈடுபட்டோம்” என்கிறார் பாவ்யா. கல்லூரி கவுன்சில் கூட்டம் ஒன்றில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் எப்போதுமே புதுமையாக மற்றும் படைப்பூக்கம் மிக்கதாக ஏதாவது செய்ய முயன்று கொண்டிருந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

பாவ்யா கோஹில்,அத்தூர் மேத்தா
பாவ்யா கோஹில்,அத்தூர் மேத்தா

”முதலாண்டு மாணவர்கள் இது போன்ற திட்டங்களில் ஈடுபடுவது அரிதானது. ஆனால் சோமையா வித்ய விஹாரின் ஆயுவுக்கூடமான ரிடிலுடன்( RiiDL ) எங்களுக்கு தொடர்பு உண்டானது அதிர்ஷ்டம்” என்று பாவ்யா நினைவு கூறுகிறார். இந்த ஆய்வுக்கூடம் கல்லூரியில் புதுமைகள் உருவாக்க மற்றும் ஊக்கமளிக்கும் மையமாக திகழ்கிறது. வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு காணுதல், திறன் வளர்ப்பு திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களில் ஈடுபடும் குழுக்களை உருவாக்குவதில் இது கவனம் செலுத்தி வந்தது. இந்த விஷயங்களில் தான் அவர்களுக்கும் ஆர்வம் இருந்தது. "மின்னணு பொறியியல் இரண்டாம் ஆண்டில் ரிடில் ஆய்வுகூடத்தில் நாங்கள் உருவாக்கிய திட்ட மாதிரிகள் மேகர் ஃபேர்-ரோம், கோத்ரெஜ், கோபெக்மினி, ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி கரக்பூர் ஆகியவற்றில் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வந்த கருத்துக்கள் எங்களுக்கு ஊக்கம் அளித்தன” என்கிறார் அத்தூர்.

இவர்களின் யோசனை, போர்ட் கேம்களை மேலும் தொடர்பு கொள்ளும் தன்மை கொண்டதாக ஆக்குவதாக இருந்தது. செஸ் விளையாட்டு பிரியர்கள் என்ற முறையில் இருவரும் தானியங்கி செஸ் போர்டை உருவாக்க முற்பட்டனர். செஸ் காய்களை வைத்து ஆடும் உணர்வை பெறும் அதே நேரத்தில் கம்ப்யூட்டருடன் செஸ் விளையாட வழி செய்யும் வகையில் இந்த செஸ் போர்ட் அமைந்திருந்தது.

துவக்கத்தில் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்காக தானியங்கி செஸ் போர்டை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாக இருந்தது. பின்னர் இது விரிவடைந்தது. "நங்கள் தேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு சென்று அங்குள்ள பார்வையற்றவர்கள் எப்படி விளையாடுகின்றனர் மற்றும் என்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என தெரிந்து கொள்ள முயன்றோம்” என்கிறார் பாவ்யா. நான்கு மாத காலத்தில் அவர் உருவாக்கிய மாதிரி வடிவம் மேக்கர் சமூகத்தில் நல்ல கவனத்தை ஈர்த்தது. செஸ் பிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வம் காட்டினர். மேலும் அம்சங்களை சேர்ப்பதற்கான ஆலோசனைகள் குவிந்தன.

தற்போதைய வடிவம் உற்பத்திக்கு தயாராக உள்ளது. முதலில் சீனாவில் தயாரிக்க தான் நினைத்தனர். ஆனால் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தர நிரணய சிக்கல்கள் உண்டாயின. "இதற்கு மாறாக #மேக் இன் இந்தியா பிரச்சாரம் குறித்து பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே எல்லா தயாரிப்பையும் மேற்கொள்ள முடிவு செய்தோம். தரத்தை உறுதி செய்ய எங்கள் ஆய்வுகூடத்தில் சிறிய அசம்பிளி லைனை அமைக்க இருக்கிறோம். ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் எனும் முறையில் இது வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவை உண்டாக்கும் என நம்புகிறோம்” என்கிறார் அத்தூர்.

2013 ல் பார்வையற்றோர் சங்கத்தில் கருத்து கேட்ட பிறகு நான்கு மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்திற்கு பல பொறியியல் துறைகளில் இருந்து பங்களிப்பு தேவைப்பட்டது. மின்னணு பொறியியல் பின்னணி கொண்டிருந்ததால் இதை இருவரும் மிகவும் ரசித்தனர், சவாலாக ஏற்றுக்கொண்டனர். முதலில் மின்னணு நோக்கில் துவங்கினர். பின்னர் எந்திர தன்மைக்கு சென்று இறுதியில் தானியங்கி பகுதியை எடுத்துக்கொண்டனர். கடந்த அக்டோபரில் ரோம் மேக்கர் ஃபேரில் காட்சிக்கு வைத்து அறிமுகம் செய்த பிறகு விமான நிலைய வரவேற்பு மையங்கள், கிளப் ஹவுஸ்கள், கபேகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பிரிமியம் பிரிவிடம் இருந்தும் கோரிக்கைகள் வரத்துவங்கியுள்ளன.

இதன் காரணமாக இவர்கள் மிகச்சிறந்த தயாரிப்பை அளிக்கும் முயற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளனர். "செஸ் கிளப்களில் இருந்து பிரத்யேக தன்மைக்கான கோரிக்கைகள் வரத்துவங்கியிருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த நிலை தயாரிப்புகளுக்கான ஆய்வு பணிகளை துவக்கியுள்ளோம்” என்கிறார் பாவ்யா. முதல் கட்டமாக இந்த கேம் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும். சாதரண போர்டு தவிர இந்த கேமில் ஆன்லைன் ஆதரவும் உண்டு. இந்த அம்சத்தை மையமாக கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்க விரும்புகின்றனர். இதில் பயனாளிகள் உலகின் ஒரு மூளையில் இருந்து மறுமூளையில் இருப்பவருடன் விளையாடலாம்.

இந்தியாவில் வன்பொருள் துறை உற்சாகம் அளிக்கிறது. இந்த துறையில் பல தொழில்முன்முயற்சிகள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. # மேக் இன் இந்தியா மேலும் உற்சாகம் பெறட்டும்.

இணையதள முகவரி: Automated Chess

தொடர்புக்கு: chessteam@riidl.org