ஆடல், பாடல், ஓவியம், டாட்டூ, சமையல் என பலமுறைகளில் ஏழை மக்களின் வாழ்வை மாற்றும் காயத்ரி

1

ஒரு சாதாரண நாளில் உங்களுடைய எத்தனை திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள்? உங்களுடைய பதில் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும். நான் சந்தித்த ஒருவர், விளிம்புநிலை மக்களுடன் இதயபூர்வமான தொடர்பை வைத்திருக்கிறார். அவர் நடனமாடுவதன் மூலம் குணமூட்டுகிறார், கட்டியணைப்பதன் வழியாக அன்பை வெளிப்படுத்துகிறார், ஓவியம் தீட்டுவதன் மூலம் கல்வி கற்பிக்கிறார், சமைப்பதன் மூலம் கருணை காட்டுகிறார் மற்றும் பாடுவதன் வழியாக அந்த அறையை நேர்மறைத் தன்மையால் நிரப்புகிறார்.

இந்த 32 வயதாகும் காயத்ரி ஜோசியின் வாழ்க்கையில் இதுவொரு சாதாரண வாரம்தான். சமூக சேவையில் ஈடுபடும் முடிவை அவர் தன் 17 வயதில் எடுத்தார். 

“சமூகம் எப்போதும் நம் விருப்பப் பட்டியலை கண்டுகொள்வதில்லை. நண்பர்களுடன் சுற்றுவதால் ஏற்படும் நேர விரயத்தை நிறுத்தினேன். வழக்கமான தன்னார்வலராக மாறினேன். ஆறு ஆண்டுகள் தன்னார்வலராக பணியாற்றினேன். டான்பாஸ்கோ தங்குமிடத்தில் சமூகப் பணியாளராக இருந்தேன். பதினைந்து ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகு, என்னுடைய படைப்பாளுமைத் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு பலருக்கு பல வடிவங்களில் உதவியாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்” என்று கூறுகிறார் காயத்ரி.

எனவே அவர் தொண்டு அமைப்பில் இருந்து வெளியேறி சுதந்திரமாக தன்னார்வலர் ஆக முடிவுசெய்தார். தன் சொந்த அனுபவத்தால், தனித் திறமையால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார்.

“ஒரு முழுமையான வாழ்வுக்கு மனத்துக்கும் ஆன்மாவுக்கும் சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்” என்கிறார் அவர். தொண்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அவர்களுக்கு தன்னார்வலராக உதவலாம் என்று முடிவெடுத்தார்.

மிகச்சிறந்த இந்திய தொண்டு நிறுவனங்களுடன் பணி

நூற்றுக்கும் அதிகமான தொண்டு நிறுவனங்களுடன் திட்டங்களுக்காக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செலவிட்டார். மற்றவர்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தார் காயத்ரி. பல்வேறுபட்ட தொண்டு நிறுவனங்களில் நடனத்தை ஒரு பழக்கமாக பயிற்சி அளிக்கத் தொடங்கினார். மேலும் அவர்களுடைய நிகழ்வுகளுக்காகவும் பயிற்சி வழங்கினார்.

காயத்திரியின் சேவையை அறிந்து தொண்டு நிறுவனணங்கள் அவரை தொடர்புகொள்ளத் தொடங்கின. யாரையும் அவர் மறுக்கவில்லை. விரைவில் ஓவியம் வரையும் திறமையும் வெளிப்பட்டது. “நான் பல தொண்டு நிறுவனங்களுக்கு வார இறுதி நாட்களில் சென்று குழந்தைகளுக்கு கார்ட்டூன் வரைவதை சொல்லிக்கொடுத்தேன். சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய செய்திகள் படங்களாக கிடைத்தன” என்று சுட்டிக்காட்டுகிறார் அவர். இந்த கோடையில் இரண்டு வார ஓவிய முகாம் ஒன்றை நடத்தவுள்ளார். காயத்ரி, ஓவியக் கலையை இளைஞர்களிடம் எடுத்துச் செல்கிறார்.

“மக்களுடைய மன அழுத்தங்கள் எல்லாம் எப்படி விலகிப்போகின்றன என்பதை நான் பார்த்திருக்கிறேன். மன அழுத்தத்தை நீக்குவது, உணர்ச்சியை ஒழுங்குபடுத்துவது என மாறுபட்ட கலை வெளிப்பாடுகளை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பேன். அவர்களுடைய உற்சாகமும் சக்தியும் அதிகரிக்கும். இந்தத் திட்டம் அரசு இல்லங்களில் இளைஞர்களை மேம்படுத்த உதவியது. இளம் குற்றவாளிகள், தெருவோரச் சிறுவர்கள், போதை அடிமைகள், பள்ளிப்படிப்பை விட்டவர்கள், மனநோயாளிகள், புற்றுநோயுடன் வாழ்கிறவர்கள் என அனவைருக்கும் என்னுடைய பயிற்சிகள் உதவின” என்று காயத்ரி விவரிக்கிறார்.

இவருடன் யார் பயிற்சி பெற்றாலும், அவர்கள் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். பின்னர் அவர்கள் டாட்டூ கலைஞர்களாக 50 விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்கள். வளரும் கலைஞர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கு அவர் உதவுகிறார்.

அறவணைப்பின் மூலம் அன்பு

சமூகத்தில் வாழும் விளிம்புநிலை மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தார். அவர்களுடைய பல மிகப்பெரிய பிரச்சினைகளில் இருந்து காய்த்ரி கற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்கள் பெரும்பாலான அடிப்படையான பிரச்சினைகளில் குறிப்பாக சிறு குழந்தைகள்கூட புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்களில் எல்லோருமே அன்பு காட்டினார்கள்.

“பெரும்பாலான மக்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைப்பதைப் பெறவில்லை. அணைப்பது ஒரு மருத்துவமாக வளர்ந்தபோது நான் அதை உணர்ந்தேன். காதலை உணராத அவர்களுடைய வாழ்க்கையை வெறுக்கிறவர்களிடம் பணியாற்றினேன். பலருக்கும் வீட்டில் மனித வடிவத்தில் பொம்மைகள் இல்லை. அவர்களுடைய வசதிக்கு பொம்மைகளை வாங்கமுடியாத நிலையில் இருந்தனர். அணைக்கும் மருத்துவம் வளர்ந்தபோது, என் நண்பர்களில் ஒருவர் டெடிபேரை அன்பளிப்பாக வழங்கினார். இதுவரையில் 1733 மக்கள் தங்கள் இதயத்தை அணைத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் 15 நோடிகள் ஆக்ஸ்டோசின்னை வெளியேற்றினார்கள்” என்று விவரிக்கிறார். நான்கு தொண்டு நிறுவனங்கள் தற்போது அந்த மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

காயத்ரியின் சாகசங்கள்

வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை செயல்படுத்தி, ஒவ்வொருக்குள்ளும் இருக்கிற திறன்களை கண்டறியவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். 

“இதுவொரு நேசிப்பிற்குரிய இயற்கையின் அனுபவம். சாகசங்கள் உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்க்கின்றன. குழந்தைகளுக்கான மலையேற்றத்தைத் தொடங்கினேன். அதற்கு நண்பர்கள் உதவினார்கள்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார்.

ஒரு நோக்குடன் அவரால் தொடங்கப்பட்ட மலையேற்றம், 18 பேருக்கு சாகசத் தொழில்துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. பலருக்கு ஆற்றில் படகு விடுவதில் கோலாட், ரிஷிகேஷ், நாசிக் ஆகிய நகரங்களில் வேலை கிடைத்தது. சிலர் ராமேஸ்வரத்தில் காற்றாடி விடுவதில் மற்றும் சாகச வழிகாட்டிகளாக இருந்தார்கள்.

காயத்திரியின் தாய், மிகச் சிறந்த சமையல் கலைஞராக இருந்தார். அவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான சமையலைக் கற்றுக்கொடுத்தார். அந்த உணவு வகைகள் ஆரோக்கியம், சத்துடன் சுவையானதாக இருந்தன.

எப்படி அவர் சாதித்தார்?

உங்களிடம் மிகவும் ஏற்புடைய கேள்வி இருக்கலாம் – இந்தப் பெண்ணுக்குரிய சொந்தமான கனவுகள், புனைவுகள், பொழுதுபோக்குகள் மற்றும் விருப்பங்கள் இருக்கும். இங்கே எப்படி இந்த இரண்டு வாழ்க்கையை அவர் எப்படி வாழ்ந்தார். காயத்ரி, மிக எளிமையான வாழ்க்கையைத்தான் தொடங்கினார். தானாகவே ஒரு ஓவியராக மாறினார். சுவரோவியங்கள் வரைந்தார். கார்ட்டூன்கள் வரைந்தார். அதன் மூலம் கிடைத்த பெரும்பாலான வருமானத்தை, சமூக நோக்கங்களுக்காக செலவிட்டார்.

“நான் சுவர்களில் ஓவியங்கள் வரையத் தொடங்கியபோது என் உணர்வுகள் மாறின. அப்படித்தான் சமூக நோக்கத்திற்கா வரையும் முயற்சிகள் ஆரம்பித்தன. நகைச்சுவையான என்னுடைய கார்ட்டூன்கள் நகைச்சுவையாக இருந்தன. மக்களை சிரிக்கவைத்தன. அதேநேரத்தில் அவர்களுடைய மனங்களை பாதித்தன” என்கிறார் காயத்ரி.

குஜராத்தில் மட்டும் 30 பள்ளிகள், ராஜஸ்தானில் 1000 அங்கன்வாடிகள் மற்றும் மகாராஷ்டிராவில் 70 பள்ளிகள், மும்பையின் எண்ணற்ற தெருக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்பகுதிகளில் அவர் ஓவியங்கள் தீட்டியிருக்கிறார். சிஎல்ஏ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய இன்ஸ்பிரேஷன் 2015 என்ற விருதைப் பெற்றிருக்கிறார். தன்னுடைய எல்லா முயற்சிகளையும் ஒரு நிறுவனத்தின் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதன் மூலம் மற்றவர்கள் எளிதாக அணுகமுடியும் என்று நம்புகிறார்.

அடுத்த பணி என்ன?

நிறைய வேலைகள் காயத்ரிக்குக் காத்திருக்கின்றன. பரோடாவின் தெருவோரக் குழந்தைகளுக்கான இல்லத்தில் ஓவியம் தீட்டப்போகிறார். சேவ் ஆரி பிரச்சாரத்தில் திறந்தவெளி வன அரங்கை மீட்டுருவாக்கம் செய்கிறார், தாராவி ராக்ஸுக்காக இசை ஸ்டுடியோ ஒன்றை அமைக்கவுள்ளார். சினேகாஞ்சலி முதியோர் இல்லத்திற்காக பணியாற்றுகிறார். மும்பையில் ரயில் நிலையங்களில் ஓவியங்களை வரையவுள்ளார்.

ஆக்கம்: BINJAL SHAH தமிழில்: தருண் கார்த்தி 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

கீழ்தட்டு குழந்தைகளை கலை மூலம் செம்மைப்படுத்தும் ஸ்ரீராம் ஐயர்!

இந்தூர் ஏழை குழந்தைகளுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு!

ஏழைகளிடம் சிரிப்பை வரவழைக்கும் 'ஸ்மைலிஸ் இந்தியா'வின் முயற்சி!