பெண்கள் தங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது - 'ஸ்டார்ட் அப் இந்தியா'

0

'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டம்' புதுதில்லியில் அண்மையில் துவங்கியது. மிகவும் உற்சாகமாக விடிந்த அந்த காலை நேரத்தில் இந்தியாவின் தொழில்முனைவு சுற்றுச்சூழலின் முக்கிய கூறுகள் அரசுடன் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்தது. தொழில்முனைவோர் தங்களுடைய கேள்விகளையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

பெண்களை கொண்டாடுவோம், தொழில்முனைவில் புதுமை புகுத்திய பெண்கள் குறித்த தகவல்கள் : ஸ்டார்ட் அப் எவ்வாறு பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்றும் அதேபோல் பெண்கள் எவ்வாறு ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை மாற்றுகிறார்கள் என்றும் அனைத்து பெண்கள் அடங்கிய குழு விவாதம் நடத்தியது.

குழுவின் நடுவர் ஷைலி சோப்ரா, ஷீ த பீப்பள். அனிஷா சிங்-மைடாலா, சாய்ரீ சாஹல்-ஷீரோஸ், நிதி அகர்வால்-கார்யா, சாந்தி மோஹன் - லெட்ஸ் வென்ச்சர் மற்றும் ப்ரான்ஷு பண்டாரி - கல்சர் அலே போன்றோர் அடங்கியது இந்த குழு.

சவால்கள்

ஒரு தொழிலை தொடங்குவதற்கும், திறம்பட நடத்துவதற்கும் பெண்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் குறித்து குழுவைச் சேர்ந்தவர்கள் விவாதித்தார்கள். பெண் தொழில்முனைவோருக்குக் கடன், கட்டமைப்பு, மக்களை ஒருங்கிணப்பது போன்ற வசதிகள் கிடைக்கப்படாதது குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு வேண்டும். எப்படி தொழில் தொடங்குவது, எப்போது நிதியை பெருக்குவது போன்ற அடிப்படை விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று குழுவில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குத் தெரிந்த விவரங்களையும் அனுபவத்தையும் மட்டும் கொண்டு தொழிலில் முன்னேற முடியாது. பெண் தொழில்முனைவோருக்கு அரசின் வழிகாட்டுதலுடன் தொழிலில் வெற்றிபெற்ற மற்ற பெண்களின் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.

சமூகத்தின் மனநிலை மாறவேண்டும். பெண்களை குறித்த பாரபட்ச கருத்துக்கள் மாறவேண்டும். அவர்களுக்கு ஆதரவான மற்றும் பாதுகாப்பான சூழலை அமைத்துத்தரவேண்டியது அவசியம்.

நினைவில் கொள்ளவேண்டியவை

“உங்கள் முதலீட்டாளர்களுடன் சரியான புரிதல் இல்லையென்றால் அவர்களை தவிர்த்திடுங்கள்” - சாந்தி மோகன்
“நாங்கள் 113 முதலீட்டாளர்களை சந்தித்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் குறித்த தெளிவான புரிதல் எங்களிடம் இருக்கிறது” - நிதி அகர்வால்.
“பெண்கள் தங்களுடைய திட்டங்களை வகுக்கும் விதத்திலிருந்தே தொழில்முனைவிற்கான அவர்களது அர்ப்பணிப்பை முதலீட்டாளர்கள் உணரவேண்டும்” - பிரான்ஷூ பண்டாரி.
“நிதியுதவி கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் தொடர்வோம். எவ்வளவு அழுத்தப்படுகிறோமோ, அதைவிட பன்மடங்கு வேகத்துடன் நாங்கள் முன்னேறுவோம்” - சாய்ரீ சாஹல்.
“மற்ற பெண்களை குறைத்து மதிப்பிடுவதை பெண்கள் நிறுத்தவேண்டும்” - ப்ரான்ஷு பண்டாரி.
“சமூக ஊடகங்கள்தான் உங்கள் சிறந்த நண்பன். அதைச்சரிவர பயன்படுத்துங்கள்” - சாய்ரீ சாஹல்.

செய்யவேண்டியவை

PM தன்னுடைய அறிக்கையை வெளியிட உள்ளார். பெண்கள் தங்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. அடுத்தவரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. தடைகளை அகற்றி தொடர்ந்து முன்னேறி சாதனை புரியவேண்டும்.

ஆக்கம் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றிய தொடர்பு கட்டுரைகள்:

'ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்' மாநிலங்களின் பங்கு என்ன?

பிரதமர் மோடியின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!