தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் மாணவர்கள் பயன்பெற நடத்திய செயல்பாட்டு கண்காட்சி!  

0

சி.பி.எ.ஸ்.சி, சி.ஐ.எஸ்.சி.இ. போன்று தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) தேசியக் கல்வி வாரியமாகும். 10 – ம் வகுப்பு மற்றும் 12 – ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த நிறுவனம் திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியை வழங்குகிறது. பள்ளிப்படிப்பை இடையில் விட்டோர், முறையான பள்ளிகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் தங்களது விருப்பத் தொழிலை விட்டுவிடாமல் கல்வி பயிலும் ஆவல் உள்ளோர் ஆகியோருக்கு என்.ஐ.ஓ.எஸ். பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. என்.ஐ.ஓ.எஸ். –ன் மூலம் 35 லட்சம் மாணவர்கள் படிப்பு முடிந்து நன்மையடைந்துள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்று மத்திய அரசு பத்திரிகை செய்தி மூலம் தெரிவித்துள்ளது.

NIOS (National Institute of Open Schooling) என்றால் என்ன? 

என்.ஐ.ஓ.எஸ். பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்திற்கு ஏற்றார்போல அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி கல்வி வழங்கப்படுகிறது. பாடமுறையில் நெகிழ்ச்சித் தன்மை என்.ஐ.ஓ.எஸ். –ன் சிறப்பு அம்சமாகும். கற்றல் பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடங்களை அவரது திறனுக்கு ஏற்ப தெரிவு செய்து படிக்க உதவுகிறது.

என்.ஐ.ஓ.எஸ். இல் சேரும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் பல அம்சங்கள் இதில் உள்ளன. சுய கற்றல் பாடங்கள், வாழ்க்கைத் திறனுடன் இணைக்கப்பட்ட பதின்மப் பருவ கல்வி ஆகியன இதில் சில. கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்ய என்.ஐ.ஓ.எஸ். கற்போர் மதிப்பிடும் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த ஆண்டு மதிப்பீடு சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் சங்கத்தில் இன்று நடைப்பெற்றது. கற்போர் மதிப்பீடு செயல் கண்காட்சி என்ற பெயரில் இது நடைபெற்றது.

“நமது சுகாதாரம் – நாட்டின் சுகாதாரம்” என்ற மையக் கருத்தில் அமைந்துள்ள இந்த நிகழ்ச்சியல் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டது.

1. பங்கேற்று நடித்தல்

2. ஆய்வு அறிக்கை

3. சுவரொட்டி தயாரித்தல்

4. படைப்பாற்றல் எழுத்துக்கள்

இந்தச் செயல்பாடுகளை நிபுணர் குழு மதிப்பீடு செய்யும். இதில் வெற்றி பெற்றவர்களை நிறைவு நிகழ்ச்சியின் போது சென்னைப் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு கரு.முத்து குமார் கவுரவப்படுத்துவார் என்று பத்திரிகை செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.