ஆட்டிசம் குழந்தைகளின் திறமையை கலை மூலம் வெளிக்கொணரும் "வேள்வி"

0

காலத்திற்கும் ஏற்பில்லாத சூழலை என் குழந்தைக்கு உருவாக்குகிறேனா?

1950 முதல் 1960 வரையிலான தலைமுறையை சேர்ந்த தாய்மார்களை டேவிட் ஈ சிம்சன் , ஜே ஜே ஹான்லி  மற்றும் கார்டன் கூன் ஆகியவர்கள் ஆராய்ச்சி செய்தனர். ரெப்ரிஜிரேடர்   மதர்ஸ் (Refrigerator Mothers) என்ற ஆவண புத்தகத்தில் அவர்களின் குழந்தைகளின் ஆடிச குறைபாடுகளுக்கு இவர்களே காரணம் என்று கூறப்பட்டிருந்தது .  ஆஸ்திரிய அமெரிக்க இனத்தை சேர்ந்த குழந்தை உளவியலாளர் ப்ருனோ பெட்டல்ஹீம் அவர்களின் தவறான சிந்தனை, காலம் காலமாக பல தாய்மார்களை மன ரீதியில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  பெற்றோர்களின் தவறான வளர்ப்பே ஆடிசம் நிலைக்கு காரணம் என்று கூறியிருந்தார். ரெப்ரிஜிரேடர் மதர்ஸ் என்ற சொல் பிரபலம் ஆவதற்கு காரணமே ப்ருனோ தான் என்றால் அது மிகையல்ல. நாசி சித்திரவதை முகாம்களுக்கு இணையான நிலையே ஆடிசம்  உருவாக கராணம் என எப்பொழுதும் மேற்கோள் காட்டுவார். காரணம் அவரும் அந்த சூழலில் வளர்ந்தவரே.

 "பச்சிளம் குழந்தையின் ஆடிசம் நிலைக்கான காரணம், அந்த பெற்றோர்கள் குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லாததே என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன், அதையே எனது புத்ததகத்தில் பதித்துள்ளேன். இது போன்ற சிந்தனையால்  மற்ற குழந்தைகள் பாதிப்புக்கு உட்படாமல் இருந்திருந்தாலும், பிற்காலத்தில் இதுவே ஆடிச நிலை ஏற்பட காரணமாகலாம்."  என்கிறார் பெட்டல்ஹீம்

பெட்டல்ஹீமின் இந்த கோட்பாடு பின்னர் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், அரை நூற்றாண்டு கடந்து  இன்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பிரான்ஸ் நாட்டிலும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். இதையெல்லாம்  கடந்து ஆடிசம் என்ற நிலையை பற்றிய புரிதல் மாறுபட்டுள்ளது.  

ஆடிசம் பற்றிய அமெரிக்க மனநல மருத்துவரான லியோ கன்னர் அவர்களின் கூற்றே பெட்டல்ஹீம் கோட்பாட்டிற்கான மூலம். ரெப்ரிஜிரேடர் மதர்ஸ் என்ற தனது கோட்பாட்டை விடுத்து நரம்பியல் வளர்ச்சியே இதற்கு காரணம் என்று பின்னர் ஏற்றுக் கொண்டார்.  கன்னர் மற்றும் அமெரிக்க உலவியாளர் பெர்னார்ட் ரிம்லாந்த் ஆகிய இருவரும் தான் இந்த கூற்றை அதிகம் விமர்சித்தவர்கள். இந்த தொடர் விமர்சனமே  தாய்மார்கள் தான் இதற்கு காரணம் என்ற போக்கை உடைத்தெறிந்தது.

2013 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா ஆடிசம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியது. இதன் தலைப்பு "ஆடிசம் ஒரு நோயல்ல". நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றிற்கு  உள்ள   வித்தியாசத்தை வலியுறுத்தும் இந்த  செயலே ஆடிசம் பற்றிய இந்தியாவின் புரிதலை தெளிவாக்குகிறது.

இந்தியாவில் எத்தனை ஆடிச  குழந்தைகள் மனநிலை  பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூளை கோளாறால் பாதிக்கபட்டர்வகள் என்ற புள்ளி விவரம் இல்லை. சற்று பின்னோக்கி பார்த்தால், ஆடிசம் என்பது மூளை கோளாறாக பார்க்கப்பட்டு கொடூரமான சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்ட அவல நிலையே இருந்தது . சுமார் பத்து மில்லியன் பேர்கள் ஆடிச  நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. பல சமயங்களில் இந்த கோளாறு கண்டறியப்படுவதேயில்லை.

அசாதாரண நிலைகளில் சிக்கலான மூளையில் ஏற்படும் வேதியியல்  மாற்றம்   ஆடிசம் நிலைக்கு காரணமாக இருந்தாலும் சரியான முறையில் சிகிச்சை அளித்தால் புதிய நரம்பியல் பாதைகள் மூலமாக கற்றதலுக்கான வழியை உருவாக்க முடியும். ஏற்கனவே ஆடிச நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அதை இல்லாமல் செய்ய, இயலாத நிலை தற்பொழுது இருந்தாலும் இதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு  தான்  இருக்கின்றது.

பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியா ஆடிச நிலைக்கான சிகிச்சை முறை மற்றும் நிர்வாகத்தில் சற்றே  பின்தங்கி தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனாலும்  இந்த நிலையில்  உள்ளவர்களுக்கு தரமான வாழ்க்கையை கொடுக்க  உயரிய எண்ணத்துடன் சிலர் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

பாரம்பரிய இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் நோக்கில் 1998 ஆம் வருடம் "வேள்வி ட்ரஸ்ட்" என்ற அமைப்பை டாக்டர் பரசுராம் ராமமூர்த்தி அவர்கள் மதுரை மற்றும் சென்னையில் தொடங்கினார். கலையையும் ஆடிச நிலைக்கான சிகிச்சை முறையையும் ஒன்றிணைக்க விரும்பினார்.

கிளீன் பிரேக் என்ற லண்டனில் உள்ள சிறைக் குழுவிற்கான திட்டம் மூலமாக தான் அவர் தன் பயணத்தை தொடங்கினார். இந்த திட்டத்தை மதுரையிலும் மூன்று வருடம் தொடர்ந்தார். இந்த தருணத்தில் தான் சிறைச் சாலையில் தான் சந்தித்த மன அழுத்தம், மன ஆரோக்கியம் குன்றிய மற்றும் மூளை கோளாறினால் அவதிப் படும் மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முனைந்தார்.

எனது படைப்பு வெளியானதும் 2003 ஆம் வருடம் ரோஸ்டாக் (Rostock)பல்கலைகழகத்திலிருந்து ஆடிசம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அழைப்பு வந்தது.

ஒவ்வொரு பெற்றோரும் தலையாய பிரச்சினையாக கூறுவது "என் மகன் என் கண்களை பார்த்து பேசுவதில்லை" என்பது தான். கண்ணை பார்த்து பேசுதல் என்பது பேச்சுத்தொடர்பில் மிக முக்கியம்.

என் நாட்டிய பயிற்சியும் நாட்டிய சாஸ்திரமும் இதற்கு உதவும் என்று நினைத்தேன். அப்பொழுது தான் முகமூடி பயன்படுத்தும் யோசனை உதித்தது. முகமூடி என்பது நாட்டிய கலையில் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆடிச நிலையில் உள்ள குழந்தைகளுக்காக நான் இதை யோசித்தது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக : இதை பயன்படுத்துவதால் யாரும் உங்கள் முகத்தை பார்க்க இயலாது, உங்களின் அடையாளத்தை இது பாதுகாக்க உதவும் என்று கூறினேன். முகமூடியில் இரு துளைகள் மட்டும் இருப்பதால் கண்கள் ஒரு குறிப்பிட்ட திசையை மட்டுமே பார்க்க முடியும். இதனால் புற பார்வை என்பது அறவே இருக்காது.

இந்த முகமூடி குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் கண்களால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள உதவியது. ஆனால் இந்த முகமூடியின் வடிவைமைப்பு எரிச்சலூட்டியதால், கதகளி போன்ற வடிவைமைப்பு பயன்படுத்த ஆலோசனை அளித்தேன். பெரும்பாலும் பெற்றோர்களோ அல்லது சிகிச்சை அளிப்பவரோ இதை பொருத்துவார்கள், இதுவரை தொட்டுணரக்கூடிய உணர்விற்கு ஒவ்வாமையை உணர்ந்த பெரும்பாலான குழந்தைகள் இப்பொழுது சகஜ நிலையில் இருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது.

பிறகு இவர்கள் முகத்தில் பல வண்ணங்களையும் பல்வேறு மிருக வகைகளையும் சித்திரிக்க தொடங்கினோம். பத்தில் எட்டு குழந்தைகள் மிகவும் சாதகமாக ஒத்துழைத்தனர்.

அன்று முதல் ஆடிச நிலை குழந்தைகளுக்கு வண்ணம் சார்ந்த முகமூடி மற்றும் முகமூடி வடிவமைப்பை உபயோகித்தல் பிரபலமானது. பத்து வினாடியே இருந்த இவர்களின் கவனம் முன்னூறு வினாடி வரை அதிகரித்ததை எங்கள் ஆராய்ச்சி உணர்த்தியது. மற்றவர்களுடனான அவர்களின் தொடர்பும் அறுபது சதவிகிதம் வரை அதிகரித்ததை காண முடிந்தது. முகத்தை பார்தேயில்லாத குழந்தைகள் இப்பொழுது அம்மாவின் பொட்டு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர்.

அவர்களின் அறிவார்ந்த திறன்களை சற்றே எளிதாக மேம்படுத்த முடிந்தாலும் (பல சந்தர்பங்களில் அவர்களின் அறிவு திறன் குறிப்பிட்ட பகுதிகளில் மிக அதிகமாகவே உள்ளது) சமூக திறன்களை மேம்படுத்துவது கடினமாகவே உள்ளது.

அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகும் தன்மை இருப்பதில்லை. ஆதலால் ஒரு குழு அமைத்து கலை பயிற்சி மூலமாக ஒருவருடன் விளையாடிக் கொள்ள வழி வகை செய்கிறோம். உணர்ச்சி மிக்க சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம. இப்பொழுது கூட சில தாய்மார்கள் என்னிடம் கூறுவது " கேள்வி கேட்டால் என்னிடம் பதில் சொல்லும் என் மகன், தானாகவே பேச முன் வருவதில்லை"

"ஆடிச நிலையில் உள்ளவர்களுக்கு மற்ற குறைபாடுகள் இருந்தாலும் ஒரு அசாதாரண தனிப்பட்ட மனம் இருக்கும்." என்று டாக்டர் ராமமூர்த்தி தீர்கமாக கூறுகிறார். நம் சமூகம் குறைகளை காண்பதை தவிர அதை தாண்டி உள்ள நிலையை காண நமக்கு கற்றுக்கொடுப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிறைகளை காண வேண்டும் என்று ஊக்குவிக்கிறார் டாக்டர் ராமமூர்த்தி.

சமூக திறன்கள், உணர்வுசார் நுண்ணறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள நங்கள் உதவுகிறோம். இதற்கு மேலாக சமூகம் அவர்களை புரிந்துக் கொள்ள உதவுகிறோம்.

எதிர்பாலினத்தை சேர்ந்தவர்களை சந்திக்க அனுமதிப்பதன் மூலமாக முதல் சந்திப்பை பற்றியும் அதை எவ்வாறு தொடர்ந்து எடுத்து செல்வது மற்றும் பாலியல் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுக்கிறோம்.

விளையாட்டு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக இவர்களுக்கு சமூக திறனை வளர்த்து கொள்ள உதவுகிறோம். எனினும் மக்களிடம் விழுப்புணர்வு மிக மிக குறைவாகவே உள்ளது வருந்தத்தக்கது என்கிறார்.

நூறு மில்லியன் மக்களாவது ஆடிச நிலையை பற்றி அறிவார்களா என்பது சந்தேகமே. ஆனால் முன்பிருந்ததை விட தற்போது சற்று மேம்பட்டே உள்ளது. SAP என்ற நிறுவனம் ஆடிச நிலையில் உள்ள மக்களை பணிக்கு அமர்த்துவது ஒரு நல்ல உதாரணம்.

அவர்களின் நுண்ணறிவு திறனை மேம்படுத்தும் வழிவகைகளில் ஏற்கனவே ஹோவர்ட் கார்ட்னர் வரையுறுத்தியுள்ள ஏழு முக்கிய கோட்பாடுகளை தவிர டாக்டர் ராமமூர்த்தி இரண்டு புதிய கோட்பாடுகளை சேர்த்துள்ளார் - அவை மிருகங்களை பற்றிய நுண்ணறிவு மற்றும் சமையல் கலை பற்றிய நுண்ணறிவு.

இந்த முயற்சிக்கு காரணம் அவர்களுடன் இணைந்து செயல்படும் போது, மிருகங்களை அவர்கள் கையாண்ட விதமும் மற்றும் சிலரிடம் சமையல் கலையில் உள்ள ஈடுபாட்டையும் அவர் கவனித்ததால் தான்.

பெற்றோர்கள் குழந்தைகளை 16 வயதுக்கு பின்னர் பள்ளியில் இருப்பதையே பரிந்துரைக்காத டாக்டர் ராமமூர்த்தி தங்கள் குழந்தையின் ஆற்றல் என்னவென்று அறிந்த பிறகு அவர்களை முன்னரே அதில் ஈடுபடுத்துவது சிறந்தது என்கிறார். அவர்களின் திறமைகேற்ப வழி நடத்தி அந்த துறையின் நிபுணர்களிடம் பயிற்சி பெற வைப்பதையே நான் பரிந்துரைப்பேன்.

அவரின் இந்த பயணத்தில் ஆடிச நிலையிலுள்ள கவிஞர் குழுவையும் சந்தித்துள்ளார் . கோர்வையாக ஒரு வாக்கியத்தை கூட அமைக்க முடியாது என்ற தவறான கருத்தையே நம்முள் புகுத்தியுள்ள இந்த சமூகத்தால், இவர்களால் கவிதை எழுத முடியும் என்பதை ஏற்று கொள்வது கடினம் தான். டாக்டர் ராமமூர்த்தி இதற்கும் ஒரு படி மேலே சென்று ஆடிச நிலையில் உள்ளவர்களால் வண்டி ஓட்ட முடியுமேயானால், அவர்கள் யாரையும் சார்ந்து இருக்க தேவையில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறார். அதே சமயம் இந்த நிலை நமது நாட்டில் செயல்படுத்துவது கடினம் என்றும் மறுப்பதற்கில்லை என்கிறார்.

நமது அடிப்படை கல்வி நிலையே மாற வேண்டும்

ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கல்வி தத்துவத்தையே நானும் பின்பற்றுகிறேன் :

வழக்கமான நரம்பியல் செயல்திறன் கொண்ட பிள்ளைகளோடு இவர்களும் போட்டி போட வைப்பது, படு தோல்விக்கே கொண்டு செல்லும். எழுதுதல், படித்தல், புரிதல் இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் திறன் தேவை. சிறப்பு பயிற்சி பள்ளிகளிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்பது வகையான நுண்ணறிவு திறனை தாண்டி மேலும் பல திறன்களை கண்டறிய வேண்டும் என்பதே.

"பள்ளிகள் கற்றுக்கொடுப்பதை தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விடுத்து அவர்களுக்கு என்ன கற்க விருப்பமோ அதை கற்றுக்கொடுக்க வேண்டும். நமது பண்டைய குருகுல பயிற்சி முறையே பயனுள்ளதாக இருக்கும்."

சிறப்பு பள்ளிகளாகட்டும் வழக்கமான பள்ளிகளாகட்டும் இவை இரண்டுமே ஆடிச நிலை குழந்தைகளுக்கு வித்தியாசமான பயிற்றுவித்தல் அவசியம் என்றோ அவர்கள் ஒவ்வொரும் பல்வேறு மன நிலையில் உள்ளதால் அவர்கள் கற்கும் வேகம் வேறுபடும் என்றோ புரிந்து கொள்ளுவதில்லை. அவர்களின் திறன்கள் மாறுபடும் நிலையில், பொதுவான பாட திட்டமான மெழுகுவர்த்தி செய்தலோ, காகித கூடை செய்ய கற்றுக் கொடுப்பதோ பயனளிக்காது.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள குழந்தைக்கும் மெழுகுவர்த்தி செய்யவோ காகித கூடை செய்யவோ தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு தனித் திறன் இருப்பதாய் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அவர்களின் ஐந்து அல்லது ஆறு வயதிலயே அதனை ஊக்குவிற்கும் பயிற்சியை அளியுங்கள். கணித பாடம் மட்டுமே  படிக்க ஐந்து வயதில் இந்தியாவில் முடியாது தான்! ஆனால் பிற நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஓக் மற்றும் போன்சாய் மரத்தை ஒரு அறிய ஒப்பிடுதல் செய்கிறார் டாக்டர் பரசுராம் ராமமூர்த்தி. இயற்கையாகவே ஓக் மரம் அசுரத்தனமாக பல்வேறு திசைகளில் வளரக் கூடியது. இத்தகைய வளர்ச்சியே அதனின் சிறப்பம்சமாகும். அது வளரும் சூழ்நிலையே இதை சாத்தியமாக்குகிறது.

இயற்கை எவ்வாறு ஓக் மரத்தை வளர விடுகின்றோமோ அது போன்றே பள்ளிகளும் தங்கள் மாணவர்களை அணுக வேண்டும் என்பதே டாக்டர் ராமமூர்த்தியின் விருப்பமாக உள்ளது. சீரமைக்கப்பட்ட ஆபரணங்கள் போல் அல்லாமல், ஒரு கட்டமைப்புக்குள் வரையறுக்கப்பட்ட போன்சாய் போல் அல்லாமல், இயற்கையான சூழலில் குழந்தைகள் வளரும் நாளை தான் விரும்புவதாக டாக்டர் ராமமூர்த்தி கூறுகிறார்.

"குழந்தைகள் அமைப்புரீதியாக வளரவே எங்கள் சென்டர் அவர்களுக்கு உதவுகிறது"

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Stories by Sandhya Raju