படத்தொகுப்பு: இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை என்ன? 

0

உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் அதாவது 100 கோடி மக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களை சாதரண மக்களுடன் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கவே பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இந்தியா சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முயற்சியில் மெதுவாகவும், பின் தங்கியும் உள்ளது என்பது உண்மை. 

தேசிய கணக்கெடுப்பு 1941 முதல் 1971 வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கில் சேர்க்கப்பட்டதே இல்லை. முதன்முறையாக 1981-ல் தான் மூன்று வகையான குறைபாடுகள் உள்ள மக்கள் கணக்கில் சேர்க்கப்பட்டனர். (கண்பார்வை முற்றிலும் அற்றவர்கள், முழு உடல் குறைபாடுள்ளவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள்). 2011 சென்சஸ் படி, எட்டு வகையான குறைபாடுகள் உள்ள மக்கள் இதில் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை மட்டும் 2.68 கோடியாக உள்ளது. உலக வங்கி இந்த எண்ணிக்கையைவிட நிச்சயம் நம் நாட்டில் அதிகமானோர் இருப்பதாக தெரிவிக்கிறது.

சமூகப் பார்வை, விழிப்புணர்வில்லாமை மற்றும் மக்களின் மனப்பாங்கு இவையெல்லாமே மாற்றுத்திறனாளிகள் வாழ்வதில் சந்திக்கும் தினசரி சவால்களாகும். இந்தியாவில் இது குறித்து வெளிப்படையான பேச்சுகள், அவர்களை உள்ளடக்கிய சமூகம் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கல் ஆகிய தற்போதைய முக்கிய தேவைகள் ஆகும். இதனை மனதில் கொண்டு யுவர்ஸ்டோரி-ன் ஒரு அங்கமான சோஷியல் ஸ்டோரி, #IndiaInclusive என்ற ஹாஷ்டாகை உருவாக்கி தொடர்ந்து எழுதி வருகிறது. 

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய வெளியே தெரியாத பல விஷயங்களை நம் வாசகர்களுக்கு தெரியப்படுத்த சில குறிப்புகளை புகைப்படங்கள் வாயிலாக பட்டியலிட்டுள்ளோம். 

ஆங்கில கட்டுரையாளர்: செளரவ் ராய்