6 பெண்ணியவாத ஆண் உலகத் தலைவர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

0

‘பெண்களுக்கான உரிமைகளே மனித உரிமைகள்,’ 1995ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் இயக்கத்தில் ஹிலேரி கிளின்டன் பிரகடணப்படுத்திய வார்த்தைகள் இவை.

பெண்ணியவாதிகளின் போராட்டத்தை தங்களின் போராட்டமாகக் கருதாமல் போயிருந்தால் உலகின் எந்த மிகப்பெரிய தலைவரும் அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் மதிப்பும் மரியாதையும் பெற்றிருக்க மாட்டார்கள். நமது சில சிறந்த ஆண் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தங்களைப் பெண்ணியவாதிகளாகப் பிரகடணப்படுத்திக் கொண்டு எதற்கும் அசைந்து கொடுக்காமல் குறிக்கோளுடன் செயல்படும் 6 ஆண்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ஜஸ்ட்டின் ட்ரூடியா:

கனடாவின் புதிய பிரதமர் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர், மற்றவர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பிரதமரானவர், தன்னுடைய அடையாளத்தில் ‘F’ (feminist) என்ற வார்த்தையை பொருத்திக்கொள்ள ஒரு போதும் தயங்காதவர். அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய உலக பொருளாதார அமைப்பில் உண்மையை மட்டுமல்ல தான் ஒரு பெண்ணியவாதி என்பதையும் கூறியதோடு அதை ஏற்றுக் கொள்வதற்கு அஞ்சவில்லை. “பெண்ணியம் என்ற வார்த்தையைக் கண்டு நீங்கள் அஞ்சக்கூடாது. இதற்கான விரிவாக்கத்தை அனைத்து ஆண் மற்றும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும்.” ஜஸ்டின் வெறும் பேச்சளவில் மட்டும் நின்று விடாமல் அதை செயல்படுத்தவும் செய்தார், ஆம் அவர் தன்னுடைய அமைச்சரவையில் 50 சதவிகித பெண்களை நியமித்து வரலாற்றை ஏற்படுத்தினார்..

2. முஸ்தஃபா கெமல் அடாடர்க், நவீன துருக்கியின் நிறுவனர்:

பெண்ணியம் என்பது எங்கும் நிறைந்து காணப்படுவது, “நாம் அன்பை நம்பிக்கையில்லாத இடத்தில் காண்கிறோம்,” 19ம் நூற்றாண்டில் துருக்கியில் முதன்முதலில் பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தது யார் என்று நீங்கள் கேள்விபட்டதுண்டா. அது வேறு யாருமல்ல முஸ்தஃபா கெமல் அடாடர்க் தான், அதே போன்று பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்பதற்கு எதிரான புரட்சி ஏற்படுவதற்கு விதையிட்டதும் அவரே. அவர் மற்றவர்களுக்கு விடுக்கும் அழைப்பு: “மனித இனம் ஆண், பெண் என்ற இரு பாலினத்தால் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட மனித இனத்தில் ஒரு இனத்தை புறந்தள்ளிவிட்டு மற்றொரு இனம் மட்டும் முன்னேற்றம் காண்பது சாத்தியமா? பூமியின் ஒரு பகுதியை சங்கிலியால் கட்டி விட்டு மற்றொரு பகுதியை மட்டும் வானுயற பறக்க வைக்க முடியுமா?”

3. அதிபர் பாரக் ஒபாமா

பெண்களுக்கு சம ஊதியம் அளித்தது ஒபாமாவின் காலகட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை ஒரு சட்டமாக கொண்டு வந்த ஒரே தலைவர் ஒபாமா. ஜனவரி 29, 2009 ஆம் ஆண்டு லில்லி லெட் பெட்டர் பேர் ரிஸ்டொரேசன் சட்ட மசோதவை அறிமுகப்படுத்தியபோது, ஒபாமாவின் ஆட்சியில் பெண்களுக்கு சம அளவில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதை ஆண்களும் அறிந்திருக்கிறார்கள். ஆறுமாத காலத்திற்குள் சம்பளம் வராவிட்டால் வழக்குத்தொடர, இந்த சட்டம் பெண் பணியாளர்களும் சரிநிகரான சட்ட உரிமை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. “சம்பள விவகாரம் தொடர்பான தகவல்களை பெறுவதில் பல நேரங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல், ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெற பெண்கள் காத்திருக்கவேண்டியதில்லை. இந்த பாலினமாறுபாட்டை சரிசெய்ய நான் ஓயாமல் போராடப்போகிறேன்” என்கிறது ஒபாமாவின் தொலைநோக்கு கொண்ட விளம்பரம்.

4. இளவரசர் ஹேரி:

31 வயது கெனிங்ஸ்டன் ராயல் பரம்பரையைச் சேர்ந்த ஹேரி பெண்ணியம் குறித்த தனது பார்வையின் மூலமும் தனது மனோபாவத்தை நிரூபித்துள்ளார், அனைவரிடத்திலும் இது காணப்படுவது அரிது. கடந்த வாரம் நேபாளத்தில் இருந்த போது அவர் மேடையில் நிகழ்த்திய உரை செய்திகளாயின. மனித இனத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய தடைகல்லாக இருக்கும் ஒரு விஷயத்தை பற்றி அவர் முதல் முறையாக பேசினார். “வாய்ப்புகளைப் பெறுவதில் பெண்களுக்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களே. பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரம் ஆண்களுக்கு அளிப்பது போன்ற வாய்ப்புகளை இளம் பெண்களுக்கு அளிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். பெண்களுக்கான வாய்ப்புகளுக்கான கதவுகளை அடைத்து வைப்பதை விட இது தொடர்பான சமூகம் மற்றும் குடும்பத்தினரின் அணுகுமுறை மற்றும் மனோபாவம் மாற வேண்டும். இந்த நிலையை அடைய பெண்கள் மட்டும் போராடினால் போதாது ஒட்டு மொத்த சமுதாயமும் தான்” என்று சொல்கிறார் இந்த புதிய பெண்ணியவாதி.

5. நெல்சன் மண்டேலா:

இனவெறிக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் என்று தான் நெல்சன் மண்டேலா அறியப்படுகிறார். ஆனால், பெண்களின் முன்னேற்றம் தொடர்பான வெளிப்படையாக நெல்சன் மண்டேலா பேசினார் என்பது குறைவாக அறியப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து, 1994 ஆண்டில் முதல்முறையாக பாராளுமன்றத்தில் பேசிய அதிபர் மண்டேலா, “பல தளங்களிலும் அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் விடுபடவில்லை என்றால் சுதந்திரம் ஒருபோதும் சாத்தியப்படாது. நமது வெற்றி என்பது பெண் விடுதலையில் அடங்கியிருக்கிறது. அதுதான் சுதந்திரமான குழந்தையை வளர்க்கவும் அடித்தளமிடும்” என்று பேசினார். நிறம், பாலினம், இனம், திருமண பந்தம், சமூகக் கூட்டம், வயது, மதம், நம்பிக்கை, கலாச்சாரம், மொழி மற்றும் பிறப்பு ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவிற்காக பாகுபாடு ஆப்ரிக்கா நாடுகளில் நிலவியதை எதிர்த்து போராட்டம் மண்டேலா தலைமையில் நடந்தது. அந்த போராட்டத்தில் பெண்களின் பங்கும் இருந்தது. அதேபோல், அவரது அமைச்சரவையில் 27% பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

6. தலாய் லாமா:

செப்டம்பர் 2009ம் ஆண்டு தலாய் லாமா தேசிய குடியுரிமை அருங்காட்சியகத்தில் ஒரு உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமுதாயத்தில் மிகவும் கடினமானதாக பார்க்கப்படும் விஷயத்தை பற்றி பேசினார். “நான் என்னை ஒரு பெண்ணியவாதி என்றே அழைத்துக் கொள்வேன். பெண்களின் உரிமைக்காக போராடும் ஒருவரை அப்படி அழைப்பது தானே பொருத்தமானது?"

இந்த இயக்கத்தில் ஆண்களும் கைகோர்த்து செயல்பட வேண்டியது அத்தியாவசியம் என்பதோடு, அவசரத் தேவையும் கூட. பெண்கள் இயக்கம் ஏன் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறது என்று 2014 செப்டம்பர் மாதம் எம்மா வாட்சன் கூறினார். எல்லா ஆண்களும் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும், அதோடு இதை ஒரு ‘அதிகாரப்பூர்வ அழைப்பாக’ ஏற்றுக் கொண்டு இந்தப் போராட்டத்தை தங்களது சொந்த போராட்டமாக எண்ணி செயல்பட வேண்டும்.

கட்டுரை: பிஞ்ஜால் ஷா | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

உண்மையான பெண்ணியவாத ஆணுக்கு எழுந்து மரியாதை செலுத்துங்கள்!

மகளிருக்காக ஒரு மறுபிறப்பு: பெண்சக்திக்கு துணைநிற்கும் அமைப்பு!

அன்புள்ள ஆ(பெ)ண்களே நீங்கள் சரியான கேள்விகளை கேட்கிறீர்களா?